Thursday 19 March 2015

நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்

வாழ்க்கை ஓரிரு நாட்களில்.. ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்பது நெடியது. நீண்டது. நீண்டு கொண்டே செல்வது. இந்த நெடிது நாள் வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளமாக உள்ளன. அதை விடுத்து அற்ப விசயங்களுக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை ஒரே நாளில் தொலைத்துவிட்டு அதைச் சரி செய்வதற்கே வாழ்நாள் முழுவதும் அல்ல்ல்படுகின்ற சிலரை நாம் வாழ்க்கையில் காண்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கை நமக்கு எச்சரிக்கையாகும்.
ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
சிலர் அவசர அவரசமாக முன்னேறிவிட வேண்டும். பொருள் சேர்த்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தவறுகளைச் செய்துவிடுகிறார்கள். அதனால் தோல்வி அடைந்து விடுகிறார்கள்.
ஒரு மளிகைக் கடைக்கார்ரை எடுத்துக்கொள்வோம். மக்களுக்குக் கிடைக்காத ட்டுப்பாடான சர்க்கரைப ஓன்ற ஒரு பொருள் அவர் கடையில் மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இயல்பான விலை கிலோ எட்டு ரூபாய். ஆனால் தட்டுப்பாடு என்பதால் பல இடங்களிலும் பத்து ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் எல்லா இடங்களிலும் தீர்ந்துவிட்டது. இவர் ஒருவர் கடையில் மட்டும்தான் இருக்கிறது.
தற்காலிக வெற்றி
இவரது வாடிக்கையாளர்களே வந்து கேட்கிறார்கள். இவர் என்ன செய்ய வேண்டும்? அதே பத்து ரூபாய்க்குக் கொடுத்தால் யாரும் வருத்தப்படமாட்டார்கள். அல்லது இன்னும் ஓரிரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றால்கூட பெரிதாக வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் யாரைப் பற்றியும், கவலைப்படாமல் எவராக இருந்தாலும் எப்படி இருந்தாலும் வாங்கித்தானே ஆக வேண்டும் என்ற கருத்தில் கிலோ 225 ரூபாய் என்று சொல்கிறார் என்றால் மக்கள் என்ன செய்வார்கள்? அவசத் தேவைக்கு வாங்கவே செய்வார்கள். ஆனால், இயல்பான நிலைமை சீரான காலத்தில் – அவர் கடையை நாடமாட்டார்கள். மெல்ல மெல்ல அவரைப் புறக்கணித்து விடுவார்கள்.
அந்தக் குறுகிய காலத்தில் அவர் அடைந்த இலாபத்தைவிட நீண்ட காலத்தில் அவர் ‘அடையப்போகும் இழப்புப் பெரிதாக இருக்கும். இத்தகையவர்கள்தான் தற்காலிக வெற்றியைப் பெரிதாக எண்ணி நிரந்தர வெற்றியை இழந்து விடுகிறார்கள்.
சிலர் உண்மையை மறைந்து அப்போதைக்கு ஏதேனும் ஒன்று சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள். அப்போதைக்கு அவர்கள் தற்காலிமாக வெற்றி பெறுவது உண்மைதான். இப்படியே ஓரிரு சமயங்களில் வெற்றி பெற்றுவிடவும் கூடும். ஆனால், இவர் சொன்னதெல்லாம் பொய்யானவை என்ற உண்மை தெரிந்த பிறகு இவர்கள் தொடர்ந்து தோல்வியையும் துன்பத்தையும் அனுபவிப்பார்கள். பின்னர், இவர்கள் திருந்தி உண்மையாகவே நடந்து கொண்டாலும், இவர் உண்மைக்கு மாறானவர், பொய் சொல்பவர் என்றே உலகம் நினைத்து இவரைக் கைவிட்டுவிடும்.
சிலர் உண்மையைப் புறக்கணித்துவிட்டு ஆளுக்குத் தகுந்தமாதிரி நடந்து கொள்வார்கள். அந்தக் குறிப்பிட்ட மனிதர் உயர் பதவியில் அல்லது செல்வாக்கில் உள்ள வரை இவரது காலம் நன்றாகவே ஓடும். இவர் தனக்கு வேண்டாதவரை இந்தச் செல்வாக்கு உள்ள நேரத்தில் பழி தீர்த்துக்கொள்ளவும் கூடும். ஆனால், மேலே உள்ள ஆள் – அதிகாரி போன பிறகு இந்த மனிதர் கண்ட இடத்தில் கல்லடி படவேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிடும்.
உண்மை
ஆளுக்குத் தகுந்த மாதிரி பணிவாகவோ – அல்லது வேறு எதிர்பார்க்கிற வகையில் நடந்துகொள்வதில் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும்விட உண்மை பெரிதல்லவா? அதை விட்டுவிட்டு என்ன செய்ய முடியும் ? அவலம்தான் மிஞ்சும்.
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தும், ஆட்சியை இழந்தும் இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைவரையே மதிக்க முடியாத நிலையில் அந்தக் கட்சியில் உள்ள சிலரை மக்கள் மதிக்கவே செய்கிறார்கள். காரணம் அவர்கள் மக்களுக்கு எது நன்மை என்பதையே மனதுள் கொண்டு செயல்படுவதுதான் என்பதை நாம் அறிவோம்.
ஒரு நாடோ, ஒரு நிறுவனமோ, ஒரு குடும்பமோ தற்காலிக வெற்றிக்கு மட்டுமே உழைத்தால், நம் இந்திய நாடுபோல 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழவேண்டியதுதான். நம் நாட்டின் தேவையை உண்ந்துத அரசியல் தலைவர்கள் உணவு, கல்வி,தொழில்கள், சுகாதாரம் என்று தொலைநோக்குடன் செயல்பட்டிருந்தால் ஜப்பானைப்போல நாமும் முன்னேறி இருக்கலாம். நமது திட்டமாக – வேட்டி சேலைத்திட்டம் இருந்ததால் இன்னும் அதனை வழங்கவேண்டிய நிலையிலேயே – மக்கள் வாங்கவேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள்.
ஆதலால் நிரந்தர வெற்றிக்கு வழி, எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளல். எப்போதும் நேர்மையாக நடந்துகொள்ளல், தொடக்கத்தில் இம்முறை சற்றே துன்பம் தருவதாக இருந்தாலும் காலப்போக்கில் இதுவே சிறந்த வழியாக அமையும்.

No comments:

Post a Comment