Thursday 19 March 2015

முழு மனதோடு…

மிக விரைவில் களைப்புற்று விடுகிறீர்களா? சரியான காரணம் இதுவென அறியாம லேயே சோர்வுற்று விடுகிறீர்களா? படுக்கைக்குப் போகுமுன் இருந்த உற்சாகம் எழுந்தவுடன் மறைந்து விடுகிறதா?
முதலாவது கருத்து. ஒரு பணியினைத் தொடங்குகிறீர்கள். வேலைதேடும் பணி, வீடு வாங்கும் பணி, மகளின் திருமண முயற்சி, என்று ஒருபுதிய வேலையைத் தொடங்க வேண்டிய கட்டம் வாழ்வில் ஏதோவொரு வயதில் வருகிறது. 20 வயதில், சிலருக்கு 30 வயதில், சிலருக்கு 50 வயதில் என்று அதனதற்கென்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டவுடன் புதிய இலட்சியத் திற்கான முயற்சிகளைத் தொடங்குகிறோம். இடையில் மனதில் சோர்வும் உணர்ச்சிபூர்வமான தடங்கலும் ஏற்படுகின்றன. புதிய இலட்சியத் திற்கான முயற்சிகளைத் தொடங்கு கிறோம். இடையில் மனதில் சோர்வும் உணர்ச்சிபூர்வமான தடங்கலும் ஏற்படுகின்றன. பணியை தொடங்கி யதும் ஏற்படும் மிகப்பெரும் பிரச்சனை அந்தப் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துதல் என்பதல்ல கவனம் செலுத்துவதற்கு உரிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் காப்பாற்று தலே. அதை இழப்பதற்கான முக்கிய காரணம் அப்பணியை விருப்பமில்லாமல் தொடங்குதலே ஆகும். அப்பணியில் செலுத்த வேண்டிய உற்சாகத்தில் பாதி, அப்பணியை செம்மையாக முடிக்க வேண்டுமே என்றகவலையால் அடிபட்டுப் போகிறது. எனவே விருப்பத் தோடும் ஆசையோடும் அப்பணியில் கவனம் செலுத்துதல் அவசியமாகிறது. விருப்பத்தோடு செய்யும் பணியில் ஏற்படும் சோர்வைவிட விருப்ப மில்லாமல் செய்யும் பணியில் பத்துமடங்கு அதிக சோர்வு ஏற்படுகிறது.
உங்கள் மகளுக்கு ஒரு வரன் தேடுகிறீர்கள். தான் ஒரு பையனை காதலிக்கும் ரகசியத்தை மகள் வெளியிடுகிறாள். வாக்கு வாதம். வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு அரை மனதோடு திருமண ஏறபாடுகளில் இறங்குகிறீர்கள். அத்திருமண ஏற்பாட்டுப் பணிகள் உங்களை சோர்வுறச் செய்கின்றன. வேறு சாதி, அறிமுகமில்லாத குடும்பம். அவள் வாழ்க்கை எப்படி அமையுமோ என்கிற கவலை இவை யெல்லாம் உங்கள் மனதைக் களைப்புறச் செய்து, எடுத்திருக்கிற திருமண ஏற்பாட்டுப் பணிகளில் அதிக சுமை உணர்வு உங்களுக்குள் ஏற்பட்டு விடுகிறது. உடல்நலம் சீர்கெடுகிறது. எரிந்து விழுகிறீôகள். எல்லோருக்குமே குடும்பத்தில் ஓர் அச்ச உணர்வு ஏற்படுகிறது. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மனநிலையை மணப்பெண்ணும் பெற்று திருமணத்தால் அவள் பெறவேண்டிய கனவுகளையும் சந்தோஷங்களையும் இழந்து விடுகிறாள். தனிமைப் படுத்தப்படுகிறாள். அவளைச் சுற்றி இருக்கும் அன்னை, சகோதர சகோதரியர், மாமா, அத்தை, சித்தப்பா என்று எல்லோருக்குமே ஒருவித சோர்வும் களைப்பும் எரிச்சலும் ஏற்பட நீங்களே வழிவகுக்கிறீர்கள். இவ்வாறு இல்லாமல் அவள் காதலை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு சந்தோஷத் துடனும், ஆனந்தத்துடனும் நீஙகள் திருமண ஏற்பாடுகளில் இறங்கினால், உங்கள் பணிகள் இன்பமூட்டுவதாக அமையும். உங்களைப் பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு திருமணப் பணிகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவர்.
‘முழுமனதோடு’ என்பதற்கும் ‘அரை மனதோடு என்பதற்கும் இடையே இத்தனை வேறுபாடுகள் உள்ளன. முழுமனதோடு செய்யும் செயல் எளிமையானதாகிறது. அரைமனதோடு செய்யும் செயல் சுமைகூடி உற்சாகத்தை பாதிக்கிறது.
சரி, மனதுக்கு முழுமையாகப் பிடிக்காத ஒரு பணியில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது என்கிறீர்களா? அத்தகைய சூழலில் உங்களுக்கு இரண்டுவித முடிவு எடுக்க வாய்ப்புண்டு. ஒன்று அந்தப் பணியை நீங்கள் கைவிட்டுவிட வேண்டும். அல்லது இரண்டு அந்தப் பணியை முழுமனதோடு ஒருவித நேசிப்போடு செய்யத் தொடங்க வேண்டும். இரண்டாவதாக சொன்னது மேலானது என்று உங்களுக்கு தோன்றுகின்றது அல்லவா? ஏனென்றால் உங்களுக்கு விருப்பமான பணி களிலேயே எப்பொழுதும் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் கருதினால் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியாது. விருப்பமான பணி என்பது எளிதானதாக இருக்கும் ஆனால் தேவையற்றதாக இருக்கும். சினிமாவுக்குப் போவது, பூங்கா வுக்குப் போவது, ஹோட்டலுக்குப் போவது இதுதான் உங்கள் மனதுக்கு விருப்பமான பணியாக இருக்கக்கூடும். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, உறவினர் வீட்டுக்கு போய் சில நாட்கள் தங்கி உண்டுகளிப்பது. மெல்லிசை நாடக நிகழ்ச்சிகளுக்குப் போவது இவைகூட உங்களுக்கு விருப்பமே. இன்னும் சிலருக்கு சீட்டு ஆடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகிய தீய பழக்கங்கள் விருப்பமானதாக அமையக்கூடும். பெண்களுக்கு நகைக்கடை களுக்குப் போய் நகை வாங்குவது. புடவைக் கடைக்கு போய் புடவை வாங்குவது, கோயிலுக்குப் போய் வழிபடுவது ஆகியன விருப்பமானவையாக அமையலாம். இதே செயல்களையே வாழ்க்கை முழுவதும் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள். பிறகு வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்படும்?
மனதிற்கு இசைவான மனதுக்குப் பிடித்த பணிகளையே செய்வதில் எவ்வித பயனும் இல்லை. மனதிற்குப் பிடிக்காத அதே சமயம் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவக் கூடிய கடினமான பணிகளை ஏற்று செயல்படுத்தி வெற்றி காண்பதில் தான் பெருமையும் புகழும் அடங்கி இருக்கிறது. வேலை மனதிற்கு பிடித்ததாக இல்லை என்று வேலையை மாற்று வதைவிட மனதிற்குப் பிடிக்காத கடினமான அதேசமயம் மிகவும் தேவையான அந்த வேலைக்கேற்ப உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா? உள்ளார்ந்த ஆர்வத்தை உள்ளார்ந்த நேசத்தை அந்தப் பணியின்பால் வளர்த்துக் கொண்டீர்களென்றால் நீங்கள் எந்தப் பணியையும் எளிதாக செய்து முடிக்க முடியும்.
ஒரு பாட்டி துணி தைக்க தான் வைத்திருந்த ஊசியைத் தொலைத்துவிட்டாள். வீதிக்கு வந்து தெரு விளக்கு வெளிச்சத்தில் அதைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது பேரன் அவளிடம் வந்து ‘பாட்டி என்ன தேடுகிறாய்?’ என்று கேட்டான். அதற்கு பாட்டி ஊசி ஒன்று வைத்திருந்தேன், அதைத்தான் தேடுகிறேன் என்றாள். பேரன் கேட்டான் ஊசியை எங்கே தொலைத்தாய்? பாட்டி சொன் னாள் ‘வீட்டிற்குள்தான் தொலைத்துவிட்டேன்’
பேரன் கேட்டான்: வீட்டிற்குள் ஊசியைத் தொலைத்துவிட்டு வீதியில் வந்து தேடுகிறாயே?’
பாட்டி சொன்னால்: ‘வீட்டிற்குள் விளக்கு இல்லை எனவே வெளிச்சமில்லை அதனால் வெளிச்சம் உள்ள வீதியில் அதைத் தேடுகிறேன்’
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? பயன் உள்ள செயல் கடினமானது என்று கருதிக் கொண்டு தேவையில்லாத எளிய செயல்களில் ஈடுபடுவதும் இதுபோலத்தான்
“THE MOST DIFFICULT THINGS ONLY CAN BRING YOU SUCCESS, PROSPERITY, FAME AND POPULARITY” என்றார் பென் ஜான்சன் என்ற அறிஞர்.
‘மிகக் கடுமையான பணிகள் முலமே வெற்றி, செல்வம், பெயர், புகழ் ஆகியவற்றை அடைய முடியும்’ என்பதே அதன் பொருள் ‘முழுமனதோடு’ பாடுபடுங்கள் தோல்விகளைக் கண்டு துவளாமல் பாடுபடுங்கள். கடுமையான பணி என்று அஞ்சாமல் பாடுபடுங்கள்! வெற்றி உங்கள் விலாசத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு உங்கள் வீடுவந்து சேரும்!

No comments:

Post a Comment