Thursday 22 May 2014

இன்னும் சில தினங்களே V.A.O.

இன்னும் சில தினங்களே V.A.O. தேர்விற்கு இருக்கும் நிலையில் உங்களின் தயாரிப்புகளை மேம்படுத்தி திருப்புதல் செய்யும் நேரம் இது. சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்க பட்டுள்ளது.இந்த முறை 4 பகுதிகளாக பாடத்திட்டம் உள்ளது.

1.மொழி பாடம்

2.பொது அறிவு

3.V.A.O.பணிகள்

4.அறிவு கூர்மை.

இந்த நான்கு பகுதிகளில் இருந்து 200 வினாக்கள் கேட்கப்படும்,இதில் நாம் 80%சரியான பதில்களை தந்தால் மட்டுமே வெற்றி உறுதியக்கப்படும்.எனவே உங்களின் தயாரிப்புகளை 4 பகுதிகளாக பகுத்து வைத்து கொள்ளவும்.இதில் V.A.O. பணிகள் பாட பகுதி புதியது.வினாக்கள் எப்படி அமையும் என கணிக்க இயலாது.இந்த பகுதியை முழுமையாக படித்து வைத்து கொள்வது நலம்.இந்த பகுதி மட்டும் 25 வினாக்களை கொண்டது.மேலும் மொழி பாடத்தில் புலமை இருந்தால் மட்டுமே நம்மால் இந்த தேர்வை வெல்ல முடியும்,ஏன் எனில் 80 வினாக்கள் இந்த பகுதியில் இருந்து கேட்க படும்.எனவே இந்த பகுதி வெற்றியை நிர்னைக்கும் பகுதியாக உள்ளது.தற் சமயங்களில் தமிழ் மொழி பாடத்திற்கு கூட கடுமையான தயாரிப்புகள் தேவை படுகின்றன.எனவே இதில் கவனம் தேவை.

பொது அறிவு பாடத்திற்கு ஒரு எல்லை இல்லை.எனவே இந்த பாடத்தை விரிவாக படித்து குறிப்புகளை எடுத்து வைத்து கொள்வது நலம்.வரலாறும்,அறிவியலும் 40%வினாக்களை உள்ளடக்கி விடும்.எனவே இந்த இரண்டு பாடங்களில் அதிக கவனம் தேவை.அறிவு கூர்மை பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படும்.இந்த பகுதியை நாம் வெல்ல வேண்டுமாயின் பயிற்சி அவசியம்.அதிகளவு பயிற்சி வினாக்களை நாம் செய்து விடையை கண்டறிய வேண்டும்.மேலும் நேரம் அதிக அளவு செலவாகும் பகுதி இது,எனவே கவனமாக இருக்க வேண்டும்.

இவைகளை எல்லாவற்றை விட 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள எல்லா சமச்சீர் பாட புத்தகங்களையும் படித்து குறிப்பு எடுத்து கொள்வது சால சிறந்தது.இன்னும் விரல் விட்டு என்னும் நாட்களே உள்ளன.எனவே உங்களின் தயாரிப்புகளை துரித படுத்தவும்.எல்லாவற்றிற்கு மேல் பயிற்சி வினா தாட்களை வைத்து விடை அளிக்க பழகி கொள்ளவும்.OMR தாளில் பயிற்சி செய்வது நலம் பயக்கும்.சோம்பல் உங்களை குழியில் தள்ளிவிடாமல் இருக்க ஓய்விற்கே ஓய்வு தாருங்கள்.

இறுதியாக, விழுவது வெட்க கரமானது அல்ல.விழுந்து கிடப்பது தான் வெட்க கரமானது.

No comments:

Post a Comment