Tuesday 6 May 2014

போட்டி தேர்வு

போட்டி தேர்வுகள் நெருங்க, நெருங்க பயமும்,பதட்டமும் தேர்வாளர்களுடன் இணைந்து கொள்கிறது.தேர்வு என்பது நாம் படித்ததை ஒரு குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட்ட நேரத்தில் நாம் சரியாக நினைவு படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறோமா? என்பதை சோதனை செய்வது தான். நாம் எப்படி படித்து இருந்தாலும் தேர்வு நேரத்தில் உடல் நிலையும்,மன நிலையும் ஒருங்கே இருந்தால் தான் நம்மால் தேர்வை சரியாக எழுத்த முடியும்.நீங்கள் எத்தனை காலமாக படித்து இருந்தாலும் தேர்வு நேரத்தில் தெளிவாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.நீங்கள் பயம் என்னும் போர்வைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள்.பயத்தை துரத்தி,துணியுடன் நிமிந்து நின்று தேர்வை எதிர் நோக்குங்கள்.வெற்றியா?தோல்வியா? என்பதை கேள்வித்தாள் தான் தீர்மானிக்க போகிறது,எனவே கேள்விகளை தன்னம்பிக்கை உடன் எதிர் நோக்குங்கள்.வெற்றி உங்களை திரும்பி பார்க்கும்.

பயம் என்னும் மாயை உங்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்து மூளையின் செயல் திறனை மங்க செய்யும்.மூளையின் செயல்பாடுகள் சரியாக இருந்தால் தான் நினைவு தெளிவாக இருக்கும்.எனவே உங்களை பயத்தில் இருந்து மீட்டு கொள்ள மன பயிற்சி அவசியம்.வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வை எதிர் நோக்காமல் ஒரு நல்ல பயிற்சி நமக்கு கிடைக்க போகிறது என்ற எண்ணத்தில் தேர்வு கூடத்திற்கு செல்லுங்கள்.எதிர்பார்ப்புகள் நம்மை பதட்டம் அடைய செய்யலாம்.எனவே நம்மால் இயன்ற அளவு நன்றாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் செல்லுங்கள்.

கடைசி நேர தயாரிப்புகளை கை விட்டு, தேர்வுக்கு முன்பே உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.அதை போல் இரவு முழுவதும் படிப்பதை தவிர்க்கவும்.எந்த வெற்றியும் கடைசி நேர தயாரிப்புகளுக்கு கிடைப்பதில்லை.எனவே திட்டமிட்டு படித்து இருந்தால் தேர்வு நேரத்தில் பயம் இருக்காது.எனவே உங்களின் படித்தால் தன்மை முன்னோக்கி இருந்தால் தேர்வுக்கு முன்னரே திருப்புதல் செய்ய முடியும். திருப்புதல், உங்களுக்கு ஒருவிதமான நம்பிக்கையை ஏற்பட வைக்கும்.மேலும் மாதிரி தேர்வுகள் உங்களின் நிலைபாட்டை தெளிவாக தெரிவிக்கும்.எனவே வீண் பயம்,கவலை உங்களை மனதை சோர்வாக்கி உங்களை செயல் இலக்க செய்யும்.எனவே வெற்றியா?தோல்வியா என்பதை விட இந்த தேர்வை எழுதுவதே நமது முதல் கடமை என நினைத்தால் பயம் வெளியே சென்றுவிடும்.

இறுதியாக....... பயந்தவன் முன்னேறுவதில்லை,

முன்னேறுபவன் பயத்தை எதிர்கொள்வதில்லை.

No comments:

Post a Comment