Sunday 4 May 2014

தேசிய விருது

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61வது தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த படம் ஆகிய 3தேசிய விருதுகளும், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு தேசிய விருதும், வல்லினம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டன.

‛தங்கமீன்கள்'

அதன்படி டில்லியில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இதில் தங்கமீன்கள் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதை இயக்குநர் ராம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் பெற்றுக்கொண்டார். இதேப்போல் இப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனாவுக்கும், பாடலாசிரியர் முத்துகுமாருக்கும் ஜனாதிபதி தேசிய விருது வழங்கினார்.

தலைமுறைகள்

இயக்குநர் பாலு மகேந்திராவின் தலைமுறைகள், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் விருதுக்கு தேர்வானது. இந்த விருதை தலைமுறைகள் படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், ஜனாதிபதி கையால் பெற்றுக்கொண்டார்.

வல்லினம்

வல்லினம் படத்துக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது ஜோசஃபுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த நடிகர்

இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஷாகித் என்ற இந்தி படத்தில் நடித்த ராஜ்குமார் ராவும், பெராரியாத்தவார் என்ற மலையாள படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சார்மூடுவும் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர்.

சிறந்த நடிகை

லியார்ஸ் டைஸ் என்ற இந்தி படத்தில் நடித்த கீதாஞ்சலி தபாவுக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.

தாதா சாஹேப் பால்கே விருது


இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது, இந்தி மொழி கவிஞரும், பிரபல பாடலாசிரியருமான குல்ஸாருக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, பின்னணி பாடகர், பின்னணி பாடகி உள்ளிட்டோருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார்.

No comments:

Post a Comment