Wednesday 22 July 2015

ஆபிரகாம் லிங்கன்

 1809- ஆம் ஆண்டு ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஆபிரகாம் லிங்கன், தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் அமெரிக்காவின் 16 வது அதிபராக உயர்ந்தவர். அடிமை முறைக்கு எதிரானவர் மற்றும் அதனை ஒழிக்க பாடுபட்டவர். மேலும், அதற்கான சட்ட திருத்தத்தினை மேற்கொண்டவர்.

மக்களாட்சி குறித்த இவரது கருத்துக்கள் அடித்தட்டு மக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உள்நாட்டுப்போரின் மூலம் பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டை பிளவுபடாமல் காப்பாற்றியவர். குடியரசு கட்சியின் சார்பில் 1860-ல் அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார்.

$ நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.

$ சரியான இடத்தில் உங்கள் கால்களை வைத்துள்ளீர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு உறுதியாக நில்லுங்கள்.

$ ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள், அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே செலவிடுவேன்.

$ எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்ற முடியும், சில பேரை எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியும் ஆனால், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.

$ உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.

$ நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.

$ வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது.

$ இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது.

$ எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.

No comments:

Post a Comment