Monday 3 March 2014

86–வது அகாடமி ஆஸ்கார் விருதுகள்

சர்வதேச சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது திகழ்கிறது.

இந்த ஆண்டுக்கான 86–வது அகாடமி ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. வண்ண மயமாக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் பங்கேற்க உலக நாடுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்தனர்.

விழாவில் சிறந்த படம், நடிகர், நடிகை, டைரக்டர் என பல பிரிவுகளில் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக மாத்யூ மெக்காகுகே தேர்வு செய்யப்பட்டார். ‘தல்லாஸ் பையர்ஸ் கிளப்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. இதை ஜீன் மார்க் வல்லீஸ் இயக்கி உள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட் வென்றார். இவர் ‘புளூ ஜாஸ்மின்’ என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இப்படத்தை வுடி ஏல்லன் இயக்கியுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது ஜாரெட் லெடோவுக்கு கிடைத்தது. இவர் ‘தல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்தில் எய்ட்ஸ் நோய் (எச்.வி.ஐ.) தாக்கிய செக்ஸ் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்த நபராக நடித்திருந்தார்.

துணை நடிகைக்கான விருதை லுபிதா நியோங்கோ தட்டிச் சென்றார். இவர் ‘12 இயர்ஸ் ஏஸ்லேவ்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக விருது பெற்றார்.

சிறந்த இயக்குனருக்கான விருது அல்போன்சா குயரானுக்கு வழங்கப்பட்டது. ‘கிராவிட்டி’ என்ற ‘3டி’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது. இவர் மெக்சிகோவைச் சேர்ந்தவர். ரூ. 600 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘கிராவிட்டி’ படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி இருந்தார். சிறந்த டைரக்டருக்கான இவரது பெயரை நடிகை ஏஞ்சலா ஜோலி, மூத்த நடிகர் சிட்னி பாய் டியர் ஆகியோர் கரகோஷத்துக்கு மத்தியில் அறிவித்தனர்.

சிறந்த படத்துக்கான விருதை ‘12 இயர்ஸ் ஏ ஸ்லேவ்’ என்ற படம் தட்டிச்சென்றது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை இத்தாலியின் ‘தி கிரேட் பிபரட்டி’ படம் பெற்றது.

இப்படத்தை பாலோ சொரன்டினோ டைரக்டு செய்து இருந்தார். சிறந்த அனிமேசன் படத்துக்கான விருதை ‘புரோசன்’ படம் பெற்றது. இதை கிறிஸ்பக் மற்றும் ஜென்னியர் லீ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்.

கிராவிட்டி டைரக்டர் தவிர சிறந்த சவுண்ட் மிக்சிங், சவுண்ட் எடிட்டிங், சிறந்த விஷுவல் எபெக்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை ஆகிய ஐந்து விருதகளையும் தட்டிச் சென்றது.

No comments:

Post a Comment