Wednesday 26 November 2014

குரூப் 4 தேர்வு எழுதவிருக்கும் நண்பர்களுக்காக :

குரூப் 4 தேர்வு எழுதவிருக்கும் நண்பர்களுக்காக :

இது அறிவுரை அல்ல .என் வழிமுறைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எவற்றை படிக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும் .ஆனால் எப்படி படிக்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை அதற்காகவே இந்த பதிவு.

தினமும் படிக்க அமரும் முன் தியானம் செய்யுங்கள்.அது அவ்வளவு கடினம் அல்ல,நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை குறித்தே ஒரு 15 நிமிடம் கண்களை மூடி தியானியுங்கள்...

இறைவனை வழிப்பட்டு பின் படிக்க துவங்குங்கள்...நாம் படிக்கும் புத்தகமும் தெய்வமே.....

படிக்க வேண்டியவற்றை முன்பே அட்டவணைபடுத்தி கொள்ளுங்கள்...அதை முடிந்த வரை அன்றே முடித்துவிட முயலுங்கள்... 100 % அட்டவணையை முடிப்பது எளிதல்ல..ஆனால் அட்டவணையிட்டு படிப்பதால் 75 % நம்மால் நிச்சயம் முடிக்க இயலும்.

படிக்கும் போது மனம் சோர்வடைகிறதா? உடனே மூச்சு பயிற்சி செய்யுங்கள்... உற்சாகம் பிறக்கும்.. நிறைய தண்ணீர் குடியுங்கள்...மூளை சுறுசுறுப்பாக இருக்கும்...

காற்றோட்டம் உள்ள இடத்தில் அமர்ந்து படியுங்கள்...படிக்கும் போது கண்கள் சோர்வடையும் வலி கொள்ளும் ..அப்போது விரல்களால் கண்களுக்கு அடிக்கடி ஒத்தடம் கொடுங்கள்....

உங்கள் மூளையின் அபார சக்தியை உபயோகிக்க முயலுங்கள்...அது மிக எளிது ..உங்கள் மூளைக்கு தகுந்த பயிற்சியை அளித்தால் எதையும் உங்களால் எளிதில் நினைவில் கொள்ள இயலும்.

எதையும் நிதானமாக படியுங்கள்...அதை கிரகித்துக் கொள்ள மூளைக்கு அவகாசம் கொடுங்கள்...அதை நன்கு மூளையில் பதிய வையுங்கள்.. அடிக்கடி திருப்புதல் செய்யுங்கள்..சிறு பிள்ளைக்கு சொல்லி கொடுப்பதை போல் உங்களின் மூளைக்கு நீங்களே பொறுமையாக வாய் விட்டு சொல்லி புரிய வையுங்கள்...

எதையும் மனப்பாடம் செய்ய முயல வேண்டாம் ...எந்த ஒரு பாடத்தையும் ஒன்றுக்கு பத்து முறை படியுங்கள் ...உங்களை அறியாமலே மூளை அதை என்றும் மறக்காத வகையில் உட்கிரகித்து கொள்ளும்..

நன்றாக படித்து கொண்டு இருப்போம் தேர்வு நெருங்கும் போது மனம் பதற்றமடையும் .எனவே தேர்வு நாளை மனதில் கொள்ளாமல் பதற்றமடையாமல் எப்போதும் போலவே படியுங்கள்..

சிலர் சிறிதளவே படித்தாலும் தான் அனைத்தையும் முடித்து விட்டதாக எண்ணுவார்கள்...போதும் என்ற மனம் படிப்பில் வேண்டாம்... ஒரு பாடம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை படியுங்கள் தவறில்லை...

தன்னம்பிக்கை கொள்ளுங்கள் தவறில்லை...ஆனால் அதீத நம்பிக்கை போட்டி தேர்வில் கூடவே கூடாது ...

படிக்கும் காலத்தில் இந்த வேலையை வாங்கியே தீருவேன் என்று படியுங்கள்..ஆனால் தேர்வு எழுத போகும் போது இந்த வேலை கிடைத்தாலும், இல்லைஎன்றாலும் எனக்கு கவலை இல்லை...பயிற்சிக்காக எழுத வந்ததை போல உணருங்கள்...அப்போது பதற்றமின்றி தேர்வை அருமையாக செய்ய இயலும்..

உங்களை குறை கூறவே அனைவரும் வருவர்..தட்டிக் கொடுக்க குடும்பத்தினர் கூட வரமாட்டார்கள்...எப்போதும் நீங்களே உங்கள் நலம் விரும்பியாய் இருங்கள்...நீங்களே உங்களை தட்டி கொடுத்து கொள்ளுங்கள்...தோல்வியை கண்டு துவளாதீர்கள்

அதிகமாக படிப்பதை விட எது தேவையோ அதை மட்டும் படியுங்கள்..எதை படிக்க கூடாது என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்..

விழாக்கள் ,தொலைக்காட்சி போன்றவற்றை தவிருங்கள்...செய்திக்காக மட்டும் தொலைகாட்சியை பாருங்கள்..

தேர்வுக்கு 1 மாதமே உள்ளதால் இனி தமிழ் திறனறி பகுதிகளில் அதிக கவனம் செலுத்தினாலே போதும்.

குறைந்தது தினமும் எட்டு மணி நேரம் படியுங்கள். வேலைக்கு செல்வோர் தாரளமாக நான்கு மணி நேரம் படிக்கலாம்.

மனதை ஒருநிலை படுத்துங்கள் .நீங்கள் உங்கள் இலட்சியத்தை நாடி நரம்பு அனைத்திலும் பதிய வையுங்கள்.உங்கள் தியானம் அந்த அளவிற்கு வலிமையானதாக இருக்கட்டும்.

தியானத்திற்கு பின் காலை மற்றும் மாலை நேர வானத்தை பார்த்து உங்கள் இலட்சியத்தை நினைத்து அண்டத்தின் சக்தியை உங்களுக்குள் உட்கிரகித்து கொள்ளுங்கள்..படிக்கையில் விளையாட்டாக இருக்கலாம்.ஆனால் எதையும் நேர்மறையாக நினைத்து வானத்தை பார்த்து அதன் சக்தியை உட்கிரகிதால் எதையும் அடையும் சக்தி உங்களுக்கு பிறக்கும்...நினைத்ததை சாதிக்க செய்யும் .

உழைப்புக்கு ஏற்ற பலனே எப்போதும் கிடைக்கும்...அது தள்ளி போகலாம் ..ஆனால் நிச்சயம் மறுக்கபடாது...

விரைவில் வெற்றி பெற நிறைய உழைப்பும் தியாகங்களும் செய்ய வேண்டி இருக்கும். கடின உழைப்பை விட புத்திசாலிதனத்துடன் கூடிய உழைப்பே வெற்றியை தரும்...

இவை அறிவுரை அல்ல ...நான் படிக்கும் முறையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே..
நீங்கள் அனைவரும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர்களே...

No comments:

Post a Comment