Wednesday 19 November 2014

4

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
41. பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது?
42. இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்?
43. "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது?
44. கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது?
45. மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்?
46. 2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?
47. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?
48. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?
49. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது?
50. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
51. உலோகங்களில் லேசானது எது?
52. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
53. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?
54. 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது.. 2. நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா... 3. காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள் 4. தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது 5. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது?
55. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது?
56. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது?
57. வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது?
58. Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது?
59. National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது? அதன் தலைவர் யார்?
60. உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்?
61. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது?
62. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மூலம் நிறுவப்பட்டது?
63. உடன்குடி அனல்மின் திட்டம் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது?
64. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது?
65. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?
66. இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் யார்?
67. முதல் பெண் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) யார்?
68. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை?
69. திபெத் நாடு தற்போது எந்த நாட்டுடன் இணைந்துள்ளது?
70. பிரெய்லி முறையில் ஓட்டுப்பதியும் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
விடைகள்: 41. சுவிட்சர்லாந்து 42. 8.10.1932 43. 8 தலைப்புகள் 44. நெதர்லாந்து 45. நரசிம்மவர்மன் 46. இத்தாலி 47. 65 48. பத்திரிக்கை 49. பாதுகாப்புத்துறை 50. கோபால கிருஷ்ண கோகலே 51. லித்தியம் 52. அரிஸ்டாட்டில் 53. கொன்றைவேந்தன் 54. மூதுரை 55. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை 56. 47 57. 61 58. 42-வது சட்டத்திருத்தம் 59. 6.8.1952, பிரதமர் 60. அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர் 61. 1945 62. பிரிவு 315 (Article 315) 63. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL) 64. பிரிவு எண் 136 65. கர்ணம் மல்லேஸ்வரி 66. சரோஜினி நாயுடு 67. சிவபாக்கியம் 68. 1 கோடியே 20லட்சம் 69. சீனா 70. மகாராஷ்டிரா

No comments:

Post a Comment