Friday 25 July 2014

உதறிவிட்டு பார்

எப்போதெல்லாம் நீ சிரமப்படுகிறாயோ அப்போதெல்லாம் அதற்காக யாரையும் குற்றம் சொல்லாதே.

அதன்மூலம் எந்த வேதனையும் படாதே. அதற்கு பதிலாக அதை பார், உணர்ந்து பார், கவனி, அதை எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலும் பார்.

அதை ஒரு தியானமாக மாற்று,

என்ன நிகழ்கிறதென்று பார். நோய்க்குள் நகரும் அந்த சக்தி, சிரமத்தை உண்டாக்கும் அந்த சக்தி, மாறுதலடையும். குணம் மாறும்.

அதே சக்தி உனது விழிப்புணர்வாக மாறிவிடுகிறது.

ஏனெனில் உன்னுள் இரண்டு விதமான சக்திகள் இல்லை, இருப்பது ஒரே சக்திதான்.

எப்போதெல்லாம் சிரமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடனே உன்னை உதறி கொள்.

கண்களை மூடி அந்த சிரமத்தினுள் பார்.

அது என்னவாக இருந்தாலும் சரி – மனேரீதியாக, உடல் ரீதியாக, வெளிப்புறத்திலிருந்து – அது எதுவாக இருந்தாலும் அதனுள் பார்,

பறவை தன்மீதுள்ள நீரை உதறிவிடுவதைப் போல அதை உன்னிலிருந்து உதறி விடு.

அதை தியானமாக மாற்று. அதை ஒரு பொருளை பார்ப்பது

போல பார்.

உன் துன்பம் மாறும் . உன்னுள் அமைதி வரும் ..

உன்னுள் மகிழ்ச்சி வரும் .

-ஓஷோ-



ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!
பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ..!
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக .. பசுவின் மீது மண்னை போட்டனர்
பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்னை அதன் மீது போட போட யாது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது ..
.
"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் " என்று பலவிஷயத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்.


“தூங்காதே தம்பி தூங்காதே”
______________________________

ஏணிப்படியாய் காலம் இருக்க
ஏனிப்படி நீ ஏங்குகிறாய்?
வாசற்கதவை வாய்ப்புகள் தட்ட
தாளிட்டுக் கொண்டேன் தூங்குகிறாய்?

காலம் உன்னை நினைக்கவில்லை
காலன் அவனோ மறக்கவில்லை
போதும், போதும் புவியின் வாழ்வு
வாடா ராஜா! என்கின்றான்.

ஓடியோடி நீ ஒளிந்தாலும்-அவன்
தேடிக் கண்டுப் பிடித்திடுவான்
வாட்டி, வதைத்து, உன்னுயிரை
உடல் கூட்டில் இருந்து பிரித்திடுவான்.

கொல்லாதே.. என்னைக் கொல்லாதே-என்ற
பொல்லாத வீண் கதறல் செல்லாதே..
நில்லாத காலத்தின் முன்னாலே-நீ
சொல்லாதே அவ்வாறு என்பானே!

விருப்பப்பட்டு சுமக்கும் பாரம்
அபார சக்தியை ஈட்டித் தரும்
வருத்தப்பட்டு சுமப்பவர்க்கோ..
சமாதி கல்லாய் மாற்றி விடும்

விழித்திடு, சிலிர்த்தெழு..
சோம்பலுக்கின்றே விடைகொடு!
தாயகம் காக்கத் துணிந்திடு!-ஒரு
புதுயுகப் புதினம் படைத்திடு!


புத்தர் சிந்தனைகள் :-
* வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும்
துன்புறுத்தாதீர்கள்.
* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது
உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.
* அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன்
அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.
* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை
உன்னை சோதனைக்குள்ளாக்கும்.
* வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின்
இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
- புத்தர்


அண்மையில் முகநூலில் படித்ததில் பிடித்தது.....இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் ஐ.ஏ.எஸ். பற்றி தெரிவித்த கருத்து

ஐ.ஏ.எஸ். என்பது பட்டமல்ல!

ஐ.ஏ.எஸ். என்பது பட்டமும் அல்ல; படிப்பும் அல்ல, அது பணி. பணிபுரியும் போது மட்டுமே அது பொருந்தும். சில மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். என்பதைப் பெ...யருக்குப் பின்னால் அறவே போடுவது கிடையாது. சிலரோ அது அலங்காரமல்ல என்றே கருதுகிறார்கள்.

பணிபுரிவது என்றால் யோக்யதை யுடனும், தன்முனைப் பற்றும், நேர்மை யுடனும், வாய்மையுடனும் தன்னலங் கருதாமல் செயலாற்றுவது மட்டுமே. சுபாஷ் சந்திர போஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறியபோது, 'அந்தப் பணி வேண்டாம்' என மறுத்தவர். அன்று வெள்ளையர்களின் கைக்கூலிகளாக மட்டுமே குடிமைப் பணிபுரிபவர்கள் இருந்ததால், அப்படிப்பட்ட முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது.

என்னுடைய குடிமைப் பணி முடிவுகள் வந்தபோது, நான் ஐ.ஏ.எஸ். என்பது தேர்வில் வெற்றி பெறுவது அல்ல என்பதை முழுமையாக உணர முடிந்தது. அப்பணிக்கு சிறிதும் தகுதியற் றவன் என்று என்னை யாரும் கருதி, அதனால் என்னால் அப்பணிக்கான மதிப்பு நீர்த்துப் போகக்கூடாது என்பதே எனக்கு மிகப் பெரிய அச்சமாக இருந்தது.

இன்றும் என்றும் இரண்டுவிதமான மதிப்பீடுகள் இருக்கின்றன. துறையில் இருப்பவர்களும் தொடர்புடையவர் களும் வைத்திருக்கும் மதிப்பீடு. அது வெளியே இருப்பவர்களுக் குப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அழுத்தமான ஆழமான பங்களிப்புகளை அவற்றின் வீரியத்தையும் விளைவையும் அறிந்தவர்கள் மட்டுமே எடைபோட முடியும்.

இன்றும் குடிமைப் பணிகள் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மேலோட்டமாக அரசளவில் சில அறிவிப்புகள் எல்லாக் காலகட்டங் களிலும் வெளியானாலும் அவற்றை கொள்கைகளாக அறிவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டவற்றை நடைமுறை யாக்கிக் காட்டு வதற்கும் பல கூர்மை யான அரசு அதிகாரிகள் பின்னணியில் தீவிரமாகச் செயல்படுவதைப் பார்க்க லாம். நல்ல குடிமை அதிகாரி அரசின் சார்பாகவே இயங்கி பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் ஊக்கியைப் போல் இருக்கிறார். அது ஒருவிதமான அடிப் படைக் கோட்பாடும் கூட. அவர் திட்டங் களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போது அவர் மீது விழும் வெளிச்சத்தை மட்டுமே அனுமதிக்கிறார். நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்துவது மேலோட்ட அதிர்வுகளைவிடக் கடினமானது. கலைப்படம் எடுப்பது சண்டைப் படத்தை விட நுட்பமாக இருப்பதைப் போல.

நேர்மை என்பது அடிப்படையான கட்டுமானம். ஆனால் அது ஒன்று மட்டுமே முக்கியத் தகுதியாகாது. ஆனால் மற்ற எல்லா திறமைகள் இருந் தாலும் நேர்மையில்லாவிட்டால் அவற் றின் ஆற்றல் பயனற்றுப் போய் விடும்.

அரசு இன்று கை நிறைய சம் பளம் அளிக்கிறது. குடிமைப் பணி அலுவலர்கள் அதிக அளவில் திறமை யுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதன் பொருட்டு தனியாருக்கு இணை யான சில வசதிகளும் தரப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்த ஒரு கட்டத் தில், ஊதியத்தை உயர்த்திக் கொடுத் தது அரசு மட்டுமே. எனவே அரசு அலுவலர்களின் பொறுப்பு ணர்வு கூடிக்கொண்டே போக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இந்தியக் குடிமைப் பணி அலுவலர்கள் வெறும் ஊதியத்துக்காக மட்டும் இப்பணியில் சேருவதில்லை. அவற்றின் மூலம் மிகப் பெரிய மறுமலர்ச்சியை அவர்களுக்கான எல்லையில் செம்மையாகச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் மிகக் கடினமான தேர்வை எதிர்கொள்ள உந்துசக்தியாக இருக்கிறது. இப்போது இத்தேர்வில் நீதிநெறி, நேர்மை போன்றவற்றில் ஒரு தாள் பொது அறிவுப் பகுதியில் 250 மதிப்பெண்களுக்குச் சேர்க்கப் பட்டிருக்கிறது. தேர்வில் வெற்றி பெறு பவர்களுடைய மனநிலை களத்திலும் கட்டாயம் இருக்கும் என்பதற்கு எந்த எழுதப் படாத விதியும் இல்லை என்றாலும் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

சவால்களை சந்திக்கும் மனப்பான் மையும் மக்களுடன் மக்களாக இணைந்து பணியாற்றும் ஆர்வமும் உள்ளவர் கள் இப்பணிகளில் அமைதி யாக அவர்களுடைய பணிகளைச் செய்து வருகிறார்கள்.

ஐ.ஏ.எஸ். என்பது படிப்பல்ல; பதவியுமல்ல; அது ஒரு சேவை மட்டுமே!






    விடிந்து விட்டது இளைஞனே
விழித்தெழு நீயும் விரைவாக
முடிந்துவிட்டது வாழ்க்கையென்று
முனகிக் கொண்டே இருக்காதே!

தொழில்களா இல்லை செய்வதற்கு
தோள்களா இல்லை சுமப்பதற்கு
வழிகளா இல்லை வாழ்வதற்கு
வலிமையே… வளமை காணவா!

இலக்கியம் நீயும் இயற்றணும்
இவ்வுலகம் உன்னை வியக்கணும்
கலகம் இல்லாச் சமுதாயம்
காண நீயும் விழையணும்

ஒற்றுமைக் கரங்கள் கோர்த்து
ஓங்கிடும் வலிமை காட்டு
தொற்றும் வேற்றுமை வெட்டிவீழ்த்தி
வழமை உணர்வைக் கூட்டு

பற்றுதல் இல்லா வாழ்க்கை
பகையாய் நினைத்து ஓட்டு
கற்றது எல்லாம் கல்லார்க்கு
கலங்கரை விளக்காய்க் காட்டு

சோதனைகள் சாம்பலாக எரியும்
சுடராய் நிமிர்ந்து விடு
சாதனை உலகம் மாலையிட – புதுச்
சரித்திரம் படைத்துவிடு



தூங்காதே தம்பி தூங்காதே”
______________________________

ஏணிப்படியாய் காலம் இருக்க
ஏனிப்படி நீ ஏங்குகிறாய்?
வாசற்கதவை வாய்ப்புகள் தட்ட
தாளிட்டுக் கொண்டேன் தூங்குகிறாய்?

காலம் உன்னை நினைக்கவில்லை
காலன் அவனோ மறக்கவில்லை
போதும், போதும் புவியின் வாழ்வு
வாடா ராஜா! என்கின்றான்.

ஓடியோடி நீ ஒளிந்தாலும்-அவன்
தேடிக் கண்டுப் பிடித்திடுவான்
வாட்டி, வதைத்து, உன்னுயிரை
உடல் கூட்டில் இருந்து பிரித்திடுவான்.

கொல்லாதே.. என்னைக் கொல்லாதே-என்ற
பொல்லாத வீண் கதறல் செல்லாதே..
நில்லாத காலத்தின் முன்னாலே-நீ
சொல்லாதே அவ்வாறு என்பானே!

விருப்பப்பட்டு சுமக்கும் பாரம்
அபார சக்தியை ஈட்டித் தரும்
வருத்தப்பட்டு சுமப்பவர்க்கோ..
சமாதி கல்லாய் மாற்றி விடும்

விழித்திடு, சிலிர்த்தெழு..
சோம்பலுக்கின்றே விடைகொடு!
தாயகம் காக்கத் துணிந்திடு!-ஒரு
புதுயுகப் புதினம் படைத்திடு!



கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!'

‘‘விதை வீரியமானதாக இருந்தாலும்
மண் சொந்த மண்ணாக இருக்க வேண்டும்
அண்டார்டிகாவில் அவரை விதையும்
ஆண்டிப்பட்டியில் ஆப்பிளும் தவறான சாகுபடி!’




அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிசேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே


No comments:

Post a Comment