Wednesday 10 August 2016

எக்ஸ்பிரஸ்

இந்தியாவில் உள்ள ரயில்களில் அதிவேகமானது என்ற பெருமையை சமீபத்தில் பெற்ற ரயில்?

‪#‎டால்கோ‬ எக்ஸ்பிரஸ்

நாட்டின் அதிவேக ரயில் என்ற பெருமையை, ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட டால்கோ எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியாணாவில் உள்ள பல்வால் வரை இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்று சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது

கதிமான் எக்ஸ்பிரஸ் – 160 கி.மீ /மணி

சதாப்தி எக்ஸ்பிரஸ் – 150 கி.மீ/ மணி

ராஜ்தானி எஸ்க்பிரஸ் – 130 கி.மீ/ மணி



நாட்டின் சுத்தமான மற்றும் அசுத்தமான ரெயில் நிலையங்கள் குறித்து அண்மையில் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. நாட்டில் உள்ள 407 பெரிய ரெயில் நிலையங்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சிறந்த 10 ரெயில் நிலையங்களாக பயணிகள் தேர்வு செய்தவை வருமாறு:-

1.பியாஸ், 2.காந்திதாம், 3.வாஸ்கோடா காமா, 4.ஜாம்நகர், 5.கும்பகோணம், 6.சூரத், 7.நாசிக்ரோடு, 8.ராஜ்கோட், 9.சேலம், 10.அங்லேஷ்வர். நாட்டின் சுத்தமான முதல் 10 ரெயில் நிலையங்களில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் காந்திதாம், ஜாம்நகர், சூரத், ராஜ்கோட், அங்லேஷ்வர் ஆகிய 5 ரெயில் நிலையங்கள் இடம் பிடித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அசுத்தமான ரெயில் நிலையங்களில் மதுபானி (பீகார்) முதலிடம் பிடித்து இருக்கிறது. 

No comments:

Post a Comment