Friday 22 January 2016

என்ஜாய்

வாழ்க்கைய என்ஜாய் பண்றோம்னு நாமெல்லாம்
சொல்றோம். என்ஜாய்மெண்ட் அப்படிங்கிறத இவங்க
எத வைச்சி முடிவு பண்றோம்?

நல்ல வேலை, நிறைய சம்பளம், வசதியான வீடு
கார் பைக் இன்னும் நிறைய தொழில்நுட்ப பொருட்கள் வைத்திருப்பது அலுவலகத்தில் அரட்டை, இரட்டை
வசனம் சிலர்.. அப்புறம் வரக் கடைசியில் புதுப்படம்,
பர்சேசிங், மாதத்திற்கு ஒரு அவுட்டிங் இல்ல கெட் டு கெதர்.

இப்படியே ஒரு சுழற்சியாக செல்கிறது வாழ்க்கை இதுவா மகிழ்ச்சி??

மேல சொன்னவற்றிற்காக ஓடி ஓடி பின்வரும் தவறை இழைத்துக் கொண்டிருக்கிறோம்.

🌀
தாய் தந்தையை மதிப்பது கிடையாது
🌀
உறவுகளை வளர்ப்பது கிடையாது
🌀
யாருக்கும் உதவுவது கிடையாது
🌀
குடும்பத்தில் ஒற்றுமை கிடையாது உண்மை கிடையாது
🌀
ஏன் பெற்ற குழந்தையின் மீது கூட பாசம் கிடையாது
🌀
கரியர் கரியர் பணம் பணம்னு ஓடி என்ன சாதித்து விட்டோம்
🌀
பணம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியம் ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!!

உண்மையில் மகிழ்ச்சி என்பது

💧
தாய் தந்தையை பேணி கவனிப்பது மகிழ்ச்சி
💧
கணவன்\மனைவி உண்மையாக இருப்பது மகிழ்ச்சி
💧
காதலன்\காதலி உண்மையாக இருப்பது மகிழ்ச்சி
💧
நட்பில் உண்மையாக இருப்பது மகிழ்ச்சி
💧
பிறருக்கு உதவுவது மகிழ்ச்சி
💧
தன் மனதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மகிழ்ச்சி
💧
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மகிழ்ச்சி
💧
செய்யும் தொழிலை நேசித்து செய்வது மகிழ்ச்சி
💧
இயற்கையை நேசிப்பது மகிழ்ச்சி
💧
பாதுகாப்பது மகிழ்ச்சி
💧
உறவுகளை வளர்ப்பது மகிழ்ச்சி
💧
ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சி
💧
பயனுள்ள நிகழ்வுகளை உருவாக்குவது பகிர்வது மகிழ்ச்சி
இன்னும் பல நிகழ்வுகள் இருக்கின்றன. உண்மையில் பிறரை மகிழ்வித்து மகிழ்வதுதான் பிகப்பெரிய மகிழ்ச்சி!!

மொத்தத்தில் மகிழ்ச்சி என்பது நமக்குள்ளே இருக்கிறது.

நம்மை சுற்றியுள்ளவர்களிடம் நாம்தான் அதை வெளிப்படுத்த வேண்டும் அதை விடுத்து நமக்கு வெளியே எதோ ஒரு பொருளில் அதைத் தேடி தேடி அலைகிறோம். அன்பு நமக்குள்ளயே இருக்கிறது அதை மலரச் செய்வோம்
மகிழ்ச்சி எங்கும் தானே பரவும்.

No comments:

Post a Comment