Friday 20 November 2015

தினம் அறிவியல் கேள்விகள் - 27.10.15

தினம் அறிவியல் கேள்விகள் - 27.10.15
**********************

1. பெல்லாக்ரா நோய் எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும்-- வைட்டமின் B3( நியாசின் )

2. கரும்பு ஒரு C4 தாவரம்

3. மனித இனத்தை மேம்பாடடையச் செய்ய மையமாகக் கொண்ட அறிவியல் -- யுஜெனிக்ஸ் ( Eugenics)

4. இருபெயர் கூட்டுமுறையை அறிமுகம் செய்தவர் -- கார்ல் லின்னேயஸ்

5. ஒரு சந்ததியினை அதன் பெற்றோருடன் கலப்பு செய்யும்போது அக்கலப்பினை அழைப்பது-- பிற்கலப்பு ( Back cross )

6. 'கிலோ- வாட் மணி ' என்பது எதன் அலகு ? மின் ஆற்றல் ( Electrical energy )

7. Ball point pen செயல்படும் தத்துவம் -- நுண்புழைத்தன்மை மற்றும் பரப்பு இழுவிசை

8. பரிணாம வளர்ச்சி -- சார்லஸ் டார்வின்
இரத்த ஓட்டம்- வில்லியம் ஹார்வி

9. நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து நீர்மட்டத்துக்கு மேல்/ தரை மேல் உள்ள பொருட்களைக் காண உதவுவது -- பெரிஸ்கோப்

10. ஒரு பொருளின் எடை துருவங்களில் அதிகம்

11. செயற்கை கருவுறுதலுக்குப் பயன்படுத்தப்படும் மாட்டின் விந்து எதில் சேமித்து வைக்கப்படும் -- திரவ நைட்ரஜன்

12. ஒரு பொருள் எந்த வெப்பநிலையில் வெப்ப ஆற்றலை வெளியிடாது
- 273 டிகிரி செல்சியஸ்

13. டெசிபல் என்பது எதன் அலகு ? ஒலிச்செறிவு

14. பென்சிலின் -- அலெக்ஸாண்டர் பிளெமிங்

வெறிநாய்க்கடி ( ராபிஸ் நோய் ) எதிர்ப்பு மருந்து - லூயி பாஸ்டியர்

15. ஃபிரியான் -- குளிர்பதனி

ஐயோடஃபார்ம் -- சீழ்தடுத்தல்

ஓசோன் -- சாயம் நீக்குதல்

16. " லூனார் காஸ்டிக் " எனப்படுவது -- வெள்ளி நைட்ரேட் ( AgNo3)

17. அழுகிய மீனின் மணமுடைய நிறமற்ற வாயு -- பாஸ்பீன் PH2

அழுகிய முட்டையின் மணமுடையது -- ஹைட்ரஜன் சல்பைடு H2S

18. உயர்மின்னழுத்த பொருட்களின் மேலுறை தயாரிக்கப் பயன்படுவது -- சிலிக்கோன்கள் ( silicones)

19. புகையிலையை உலராமல் பாதுகாத்து வைக்கப் பயன்படும் பொருள் -- கிளைக்கால் ( glycol)

20. இரசக்கலவை ( amalgam) என்பதில் பெரும்பாலும் மெர்க்குரி ( பாதரசம் ) உள்ளது.

21. மலேரியா நீக்கிகள் -- குளோரோகுயின்

நுண்ணுயிர் எதிரிகள் -- பென்சிலின்

22. புரத செயல்பாடுகளில் தொடர்புடைய வைட்டமின் எது ?
வைட்டமின் B2 ( ரிபோப்ளோவின் )

23. முதன் முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து BHC ( Benzene Hexa Chloride )

24. செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவு -- மைக்ரான்

25. ஒற்றைக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் --
3:1

ஒற்றைக் கலப்பின் ஜீனாக்க விகிதம் --
1:2:1

No comments:

Post a Comment