Tuesday 12 November 2013

இராமலிங்க அடிகளார்

படிக்கும் முன் ஒரு முக்கியமான குறிப்பு: பெரும்பாலான கேள்விகள் நேரடியாக கேட்க மாட்டார்கள். நேரடியாக கேட்பதால் படித்ததை அப்படியே பதிலாக எழுதிவிடுவார்கள். பல இலட்சகணக்கானவர்கள் எழுதும் போட்டித் தேர்வில் கேள்விகளை சுற்றி வளைத்து, கேட்பதன் மூலம் போட்டியாளர்களை குறைக்க முடியும் என்ற யுக்தியை அனைத்து தேர்வாணையங்களும் பயன்படுத்துகின்றன.
அதே சமயம் எந்தளவிற்கு புரிந்து படித்திருக்கின்றனர் என்பதையும், அவர்களின் அறிவுத் திறனை சோதிக்கவும் இதுபோன்ற கேள்விகள் நிறைய கேட்கப்படும்.
உதாரணமாக இந்த கேள்வியைப் பாருங்கள். 
ஆறாம் வகுப்பு கடவுள் வாழ்த்துப் பகுதியில் அமைந்த கேள்வி இது. அதாவது, 
"கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்" என்ற பாடலை இயற்றியவர் யார் ? 
இந்தகேள்விக்கு "இராமலிங்க அடிகளார்" என்ற பதில் சரியானது. 
இதையே அருட்பிரகாச வள்ளலார் எழுதிய பாடல் எது? என்ற கேள்வி கேட்டு, அதற்கான பதிலாக வேறு சில பாடல் வரிகளையும் மற்றும் உண்மையான பாடல் வரியையும் கொடுத்திருப்பார்கள்.
அவ்வாறான சமயங்களில் சிந்தித்து பதிலளிக்க வேண்டும். அப்படி கேட்கும் கேள்விக்கு, "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்" என்ற பாடல் வரியை நீங்கள் விடையாக தேர்வு செய்யவேண்டும்.
ஒரு உதாரணத்திற்காவே இவ்வரிகளை இங்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன். இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்வரிகளில் எதை வேண்டுமானாலும் கொடுத்து கேள்விகளை கேட்க வாய்ப்பிருக்கிறது. 
அதாவது இராமலிங்க அடிகளாருக்கு திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயரும் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இக்கேள்விக்கு சரியான பதிலை அளிக்க முடியும். 
இவ்வாறு ஒவ்வொரு பாடத்தையும் நன்கு புரிந்துகொண்டு, ஆழமாக மனதில் பதிந்தால் மட்டுமே போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற முடியும். எனவே கொடுக்கப்படும் பகுதிகளை நன்கு கவனமாக படியுங்கள்.. தேர்வில் வெற்றி நிச்சயம். 
இப்பகுதியிலிருந்து ஒரு சில கேள்வி பதில்களைப் பார்ப்போம். 
இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் என்ன?

திருவருட்பிரகாச வள்ளலார். 


பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் எதை அமைத்தார்?

அறச்சாலை


இராமலிங்க அடிகளால் அறிவுநெறி விளங்க அமைத்த சபை எது?

ஞானசபை


இராமலிங்க அடிகளாரின் காலம் எது?

5-10-1923 முதல் 30-1-1874


இராலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?

மருதூர்


இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம்?

கடலூர் மாவட்டம்


இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்?

இராமையா, சின்னம்மையார்


இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம், திருவருட்பா.

No comments:

Post a Comment