இந்தியப் பொருளாதாரம் - சில மந்திரச் சொற்கள்
Posted Date : 20:12 (12/12/2013)Last updated : 20:12 (12/12/2013)
- கதிரவன்நிர்வகிக்கப்பட்ட விலை (Administered Price)
மதிப்புக் கூட்டு வரி (Ad-Valorem Tax)
சமநிலை வரவு செலவுத் திட்டம் (Balanced Budget)
செலுத்துதல் சமநிலை (Balance of Payment)
வங்கி வீதம் (Bank Rate)
பிறப்பு வீதம் (Birth Rate)
கறுப்புப் பணம் (Black Money)
வரவு செலவு திட்ட பற்றாக்குறை (Budget Deficit)
வாணிபச் சூழல் (Business Cycle)
மூலதன வரவு செலவுத்திட்டம் (Capital Budgeting)
மூலதனச் சந்தை Capital Market
முதலாளித்துவப் பொருளாதாரம் (Capitalism)
ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio)
நுகர்வோர் விலைக்குறியீடு (Consumer Price Index)
அருமைப் பணம் (Dear Money)
இறப்பு வீதம் (Death Rate)
பற்றாக்குறை நிதியாக்கம் (Deficit financing)
பணவாட்டம் (Deflation)
பணமதிப்பு குறைத்தல் (Devaluation)
பற்றாக்குறை நிதியாக்கம் (Deficit Financing)
நேர்முக வரி (Direct Tax)
நிதிக் கொள்கை (Fiscal Policy)
நிதிநிலைத்தன்மை (Financial Stability)
பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை
கிரஷாமின் விதி (Greshmam’s Law)
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) (GDP)
மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product)
மனித வள மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index) (HDI)
பணவீக்கம் (Inflation)
தலையிடாக் கொள்கை (Laissez Faire Policy)
கடன் வீதம் (Lending Rate)
கலப்புப் பொருளாதாரம் (Mixed Economy)
பணச்சந்தை (Money Market)
பணக் கொள்கை (Monetary Policy)
முற்றுரிமை (Monopoly)
தேசிய வருவாய் (National Income)
தனியார்மயமாக்குதல் (Privatisation)
முதன்மைக் கடன் வீதம் (Prime Lending Rate)
பருவகால வேலையின்மை (Seasonal Unemployment)
சமதர்மப் பொருளாதாரம் (Socialism)
மென் பணம் (Soft Currency)
மதிப்புக் கூட்டு வரி (Value Added Tax)
சூர்யோதயத்துறை (Sunrise sector)
சூர்ய அஸ்தமனத்துறை (Sun set Sector)
மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் (Wholesale Price Index)
பூஜ்ஜிய வரவு செலவுத் திட்டம் (Zero Base Budgeting)
நில உச்சவரம்பு (Ceiling on Land Holding)
ஒருவர் அல்லது ஒரு குடும்பம் அதிகபட்சம் எவ்வளவு நிலம் நிகழ்காலத்திலும் எதிர்காலத் திலும் வைத்திருக்கலாமெனப் பெரும்பான்மையான மாநிலங் கள் சட்டமியற்றியுள்ளன.
நிலஉச்சவரம்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகின்றன. தமிழ்நாட்டில் 5 நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இரண்டாவது தலைமுறை பசுமைப்புரட்சி (Second Generation Green Revolution)
சிறு விவசாயிகளுக்கும் பசுமைப் புரட்சியின் பயனைப் பெறாத கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் நாட்டின் சில பகுதிகள் தற்போது பயனடைய வழிசெய்தல், புன்செய் நிலங்களிலும் புதிய சாகுபடி முறைகள் மூலம் உற்பத்தி ஆகியன இரண்டாவது கட்ட பசுமைப் புரட்சியின் மூன்று அம்சங்கள் ஆகும்.
மண்டல கிராம வங்கிகள் (Regional Rural Banks)
மண்டல கிராம வங்கிகள் 02.10.1975 முதல் செயல்படுகின்றன.கூட்டுறவு வங்கிகளும் வணிகவங்கிகளும் வேளாண்மை மற்றும் கிராமத் தொழில்களின் கடன் தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலையை அடுத்து ,அவைகளுடன் சேர்ந்து கடன் வழங்குவதற்காக மண்டல கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன.
(NABARD – National Bank for Agriculture and Rural Development)
இந்திய நாடாளுமன்றத்தில் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் தேசிய வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி உருவாக்கப் பட்டது.
தேசிய வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி 1982-ஆம் ஆண்டு ஜூலை முதல் பணியாற்ற தொடங்கியது. கிராமக் கடனுக்காக உருவாக்கப்பட்ட தலைமையான மறுநிதி வங்கியாகும்.
கிசான் கடன் அட்டைத் திட்டம் (Kisan Credit Card Scheme)
மத்தியஅரசு 1998-99-ல் மிகவும் புரட்சிகரமான இத்திட்டத்தை அறிவித்தவுடன், நபார்டு வங்கி இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. சாகுபடி செலவிற்கான வேளாண் கடன் பெறத் தகுதியுடைய விவசாயிகளுக்கு 'கிசான் கடன் அட்டை' வழங்கப்படும். பெற்ற பணத்தை 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தவேண்டும். அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் விவசாயி எளிதாக இக்கடன் அட்டையின் மூலம் கடன் பெறலாம்.
இந்தியத் தொழில் கடன் முதலீட்டுக் கழகம்
(ICICI – Industrial Credit and Investment Corporation of India)
1997-98 முதல் நாட்டின் தலையாய வளர்ச்சி வங்கியாக வளர்ந்துள்ளது. 1955-ல் தொடங் கப்பட்ட இவ்வங்கி தனியார் தொழில் நிறுவனங்களுக்கு மத்தியகால மற்றும் 15 ஆண்டுகள் வரை நீண்டகாலக் கடன் வழங்குகின்றது. கடன் உத்தரவாதமும் அளிக்கின்றது.
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி
(SIDBI – Small Industries Development Bank of India)
லக்னோவை தலைமையிடமாகக் கொண்ட சிறுதொழில் வளர்ச்சிக்கென நம் நாட்டின் மிகப் பெரிய முன்னோடி வங்கியான இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி 1990 ஏப்ரல் முதல் செயல்படுகின்றது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC – Life Insurance Corporation of India)
நாட்டில் செயல்பட்ட 245 தனியார் ஆயுள் காப்பீட்டுக் கழகங்களை ஒருங்கிணைத்து 01.09.1956-ல் நாட்டுடைமையாக் கப்பட்டு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் என பெயர் சூட்டப் பட்டது.
இந்திய யூனிட் டிரஸ்ட் (UTI – Unit of Trust of India)
1964 பிப்ரவரி திங்களில் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது.
சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் சேமிக்கும் ஆர்வத்தை வளர்க்கவும், அச்சேமிப்பை ஒன்று திரட்டி தொழில்களில் முதலீடு செய்வதும் ஆகும்.
ஆரம்பத்தில் இந்தியா ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமாக செயற்பட்ட இது 16.02.76 முதல் இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமாகவும் இருந்தது.
பொதுக் காப்பீட்டுக் கழகம் (GIC – General Insurance Corporation)
அனைத்து நிதி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 1973 முதல் செயல்படுகின்றது. (மனிதஉயிர் தவிர்த்து பிற) மோட்டார் வாகனங்கள், விபத்து, வீடு, கடை போன்றவைகளுக்கு காப்பீடு அளித்து, பிரீமியமாகத் திரட்டிய பணத்தை தொழில்களுக்கு முதலீடாகவும், கடனாகவும் தருகின்றன.
ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM Bank)
நாட்டின் ஏற்றுமதி இறக்குமதிக்கான நிதித்தேவைக்காக 1982-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
தேசிய சுகாதாரக் கொள்கை 2002 (National Health Policy 2002)
2002-ஆம் ஆண்டு மத்திய அரசு இக்கொள்கையை அறிவித்தது. 2005-ஆம் ஆண்டுக்குள் இளம்பிள்ளை வாதம் மற்றும் தொழுநோய் 2010-க்குள் காலாஆசார் யானைக் கால் நோயையும் ஒழிப்பது ஆகியவை இதன் முக்கிய குறிக்கோள்கள்.
ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வராஜ்கா யோஜனா
(SGSY – Swarnajayanthi Gram SwarozgrYojana)
நம் நாட்டில் வறுமை ஒழிப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களில் இது முக்கியமான தாகும்.
முதன் முதலாக 1978-79-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரால் நாட்டிலிருக்கும் 5000 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட 2000 ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1980அக்டோபர் திங்களில் அனைத்து ஒன்றியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
வேலைவாய்ப்புத் திட்டங்களில் முக்கியமானதிட்டமாகும். ஏற்கெனவே செயல்பாட்டிலிருந்த தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் இணைத்து ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.
1989 ஏப்ரல் முதல் நாளிலிருந்து செயல்பட்டுவந்தது. அத்திட்டத்தையும் மறுசீரமைத்து 1999 ஏப்ரல் முதல் நாளிலிருந்து 24.09.2001 வரை ஜவஹர் கிராம் சம்ருதி யோஜனா என்ற பெயரால் செயல்படுத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (EAS – Employment Assurance Scheme)
மறுசீரமைக்கப்பட்ட பொது வினியோக முறை அமலில் இருக்கும் 257 மாவட்டங்களில் 1778 ஊராட்சி ஒன்றியங்களில் 02.10.93-ல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.செலவை மத்திய அரசும் மாநிலஅரசும் 75:25 என்றவிகிதத்தில் ஏற்றுக் கொண்டன.
இந்திராஅவாஸ் யோஜனா (IAY – Indira AwaasYojana)
ஏழ்மை நிலையிலுள்ள ஆதி திராவிடர், பழங்குடியினர், கொத்தடிமைகளிலிருந்து மீட்கப்பட்ட வர்கள், ஊரக வறுமைக் கோட்டிற்கு கீழே உழல்பவர்களுக்கு 1985-86 முதல் இத்திட்டத்தில் இலவசமாக வீடு கட்டித் தரப்படுகின்றது.
தேசிய வேலைக்கு உணவுத் திட்டம்
(NFFWP – National Food for Work Programme)
2004 நவம்பரில் மத்திய அரசின் முழுச் செலவுடன் 150 மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது.
நகர்புற வசதிகளை ஊரகங்களில் அளித்தல்
(PURA – Provision of Urban Amenities in Rural Area)
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலம் அவர்களின் அறிவில் உதித்த இத்திட்டம் 2004-05 முதல் செயல்படுத்தப்படுகின்றது.
நகர்ப்புற ஊரக இடைவெளியைக் குறைப்பதும், சீரான சமூகபொருளாதார வளர்ச்சியும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பாரதநிர்மான் (BharathNirman)
நாட்டில் ஊரக உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்தி நாட்டையே மேம்படுத்தும் மிகப்பெரிய திட்டமாக 2005-06 முதல் செயல்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டிலிருந்து மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர்கள்
ஆர்.கே.சண்முகம் செட்டியார்
டி.டி.கிருஷ்ணமாச்சாரி
சி.சுப்பிரமணியம்
ஆர்.வெங்கட்ராமன்,
ப.சிதம்பரம்
No comments:
Post a Comment