இந்திய மாநிலங்கள் - 5
Posted Date : 13:12 (13/12/2013)Last updated : 13:12 (13/12/2013)
ஜார்கண்ட்
வனம் மற்றும்
கனிம வளம் நிறைந்த பகுதி. இந்தியாவின் முதல் உர ஆலை, இரும்பு உருக்கு ஆலை
இங்குதான் ஏற்படுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் பூமி. மகத பேரரசுக்கு
முன்பாகவே அரசியல், கலாசார பெருமை கொண்ட மாநிலம்.வரலாறு: முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஜார்கண்ட் பகுதி குக்ரா என்று அழைக்கப்பட்டது. 1765-ல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்த நிலப்பரப்பு கொண்டுவரப்பட்டது. இது காடுகள் நிறைந்த நிலப்பரப்பு என்பதால் ஜார்கண்ட் என்ற பெயர் வந்தது. சுதந்திர இந்தியாவில் பீகாரின் ஒரு பகுதியாக இது இருந்தது. தனி ஆட்சிப் பிரதேசமாக அறிவிக்கக் கோரி ஜார்கண்ட் முக்தி மோட்சா உள்ளிட்ட கட்சிகள் போராடிவந்தன. இதனால், 2000-ம் ஆண்டில் ஜார்கண்ட் இந்தியாவின் 28-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
எல்லைகள்: வடக்கில் பீகார், மேற்கில் உத்தரப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர். தெற்கில் ஒடிசா, கிழக்கில் மேற்கு வங்கம்.
இரண்டாம் நிலைத் துறைகள்
மூன்றாம் நிலைத் துறைகள்
கர்நாடகா
வரலாறு: கி.பி. 990 - 1210 வரை சோழ
ஆட்சியின் கீழ் கர்நாட கத்தின் பெரும்பகுதி இருந்துள்ளது. இதன்பிறகு
விஜயநகர ஆட்சி வந்துள்ளது. கி.பி. 1565-ல் விஜய நகர ஆட்சி சுல்தான்களால்
முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது சுல்தான்களின் ஆளுகைக்கு உட்பட்டது.
இதற்கிடையில் மைசூரை ஆண்டுவந்த சிற்றரசரான உடையாரைத் தோற்கடித்து ஹைதர் அலி
ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர், பிரிட்டிஷார் ஹைதர் அலியின் மகன்
திப்புசுல்தானை தோற்கடித்து ஆட்சியை உடையாரிடம் ஒப்படைத்தனர். இதைத்
தொடர்ந்து மைசூர் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி பிரதேசமாக
இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ உடையார்
மைசூரை இந்தியாவுடன் இணைத்தார். மொழி வாரி மாநிலம் அமைக் கப்பட்டபோது
சென்னை, பம்பாய் மாகாணம், ஹைதராபாத்தில் இருந்த கன்னட மொழி பேசும் பகுதிகள்
பிரிக்கப்பட்டு மைசூருடன் இணைக்கப்பட்டன. 1973-ம் ஆண்டு கர்நாடகா என்று
பெயர் மாற்றம் செய்யப்பட்டது.எல்லைகள்: வடக்கில் மகாராஷ் டிரா, கோவா மாநிலங்களும், தெற்கில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களும், மேற்கில் அரபிக் கடலும், கிழக்கில் ஆந்திரப்பிரதேசமும் உள்ளன.
முக்கிய ஆறுகள்: கிருஷ்ணா, காவிரி, துங்கபத்ரா, துர்காவதி, ஹேமாவதி, லோகாணி, லக்ஷ்மண தீர்த்தம், கபினி.
முக்கிய நகரங்கள்: பெங்களூரு, மைசூரு, மங்களூரு, பெல்காம், ஹூப்ளி, பெல்லாரி, பீடார், பீஜப்பூர், சிக்மகளூர், கோலார், தும்கூர்.
இரண்டாம் நிலைத் துறைகள்
மூன்றாம் நிலைத் துறைகள்
முக்கிய இடங்கள்: மைசூர், ஸ்ரீரங்கப் பட்டினம், உடுப்பி, சிருங்கேரி, சிரவண பெலகோலா, ஹம்பி.
கேரளம்
இந்தியாவின்
நறுமணத் தோட்டம். கடவுளின் தேசம். தேங்காய், வாசனைத் திரவியங் களின் தேசம்.
ரப்பர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம்.வரலாறு: பண்டைய சேர மன்னன் ஆண்ட பகுதியே இன்றைய கேரளமாக விளங்குகிறது. கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, இது வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி மையமாக விளங்கி இருக்கிறது. 14-ம் நூற்றாண்டு வரை சேர, பாண்டிய மன்னர்கள் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.
1498-ல் வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். இதுவே ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் நுழைய உதவியாக இருந்தது. 1795-ல் இப்பகுதி முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு கீழ் வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1956-ல் திருவாங்கூர்-கொச்சி, சென்னை மாகாணத்தின் காசர் கோடு பகுதிகள் சேர்த்து கேரளா உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: பெரியாறு, பாரதப்புழை, நெய்யாறு, பம்பை, மணிமலை, சித்தாறு, மூவாற்றுப் புழை.
முதனிலைத் துறைகள்
விவசாயம் மிக முக்கியத் தொழில். வாணிபப் பயிர்களான ரப்பர், தேயிலை, மிளகு போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.வளைகுடா நாடுகளில் பணிபுரியும் கேரள மக்கள் ஆண்டுக்கு 6.81 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.
இல்மனைட், கயோலின், பாக்சைட், சிலிக்கா, குவார்ட்ஸ், ருடைல், ஜிர்கான், சிமென்ட் ஆகிய தாதுக்கள் இங்குள்ள சுரங்கங்களி லிருந்து கிடைக்கிறது.
இரண்டாம் நிலைத் துறைகள்
தேங்காய் நார், கைத்தறி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் 1 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாம் நிலைத் துறைகள்
கதகளியின் பிறப்பிடம். 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை வடிவங்களைக் கொண்டுள்ளது. களரிப்பயிற்சி தற்காப்பு கலையின் பிறப்பிடம். யானைகள் மலையாள மக்களின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
முக்கிய நகரங்கள்: திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கொல்லம், திருச்சூர், கோட்டயம்.
முக்கிய இடங்கள்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயம், நெய்யார் அணைக்கட்டு, தேக்கடி வனவிலங்கு சரணாலயம், மலம்புழா அணைக் கட்டு, சபரிமலை, குருவாயூர்.
மத்தியப்பிரதேசம்
இந்தியாவின் இதயம்... கஜுராகோ கோயில், சாஞ்சி ஸ்தூபி மிகப் பிரபலம். இந்தியாவின் 'டைகர் ஸ்டேட்’ என்று அழைக்கப்படுகிறது.வரலாறு: மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியில் இருந்துதான் அசோகர் தன்னுடைய சாம்ராஜ் யத்தை ஆரம்பித்தார். பின்னர் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. 13-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான் ஆட்சிக்கு கீழ் வந்தது. டெல்லி சுல்தான் அரசு சிதைந்த பிறகு, இந்தப் பகுதியை ராஜபுத்திரர்கள் ஆட்சி செய்தனர். அதன் பிறகு ஆங்கிலேயேர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1956-ல் மத்திய பாரத், விந்திய பிரதேஷ் மற்றும் போபால் ஆகிய பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு மத்தியப்பிரதேசம் உருவாக்கப் பட்டது. 2000-ம் ஆண்டு இம்மாநி லத்தில் இருந்து சட்டீஸ்கர் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: நர்மதை, மகாநதி, தபதி, சம்பல், இந்திரா வதி.
முதனிலைத் துறைகள்
இரண்டாம் நிலைத் துறைகள்
மூன்றாம் நிலைத் துறைகள்
மஹாராஷ்ட்ரா
இந்தியாவின் கனவுத் தொழிற் சாலையான பாலிவுட் மும்பை அமைந்துள்ள மாநிலம்.
வீர சிவாஜி ஆண்ட பகுதி. இந்தியாவின் வர்த்தக தலைநகர். தொழில் வளம், மின்
உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்.வரலாறு: 17-ம் நூற்றாண்டில் சிவாஜியால் மராட்டிய பேரரசு நிறுவப்பெற்றது. 1819-ல் இது கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயேர் ஆட்சியின்போது இது பம்பாய் மாகாணம் என அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, சௌராஷ்டிரா, கட்ச், மத்தியப்பிரதேசம் மற்றும் ஹைதராபாத்தின் பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு பம்பாய் மாநிலம் உருவாக்கப் பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கும்போது, மராத்தி பேசும் பகுதிகள் அனைத்தும் ஒன்று சேர்த்து மஹாராஷ்டிரா உருவாக்கப்பட்டது. குஜராத்தி பேசும் மக்கள் நிறைந்த பகுதி குஜராத் ஆனது. 1995-ல் பம்பாய் என்ற பெயர் மும்பை என மாற்றப்பட்டது.
எல்லைகள்: வடமேற்கில் குஜராத் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசமும், வடகிழக்கில் மத்தியப்பிரதேசமும், கிழக்கில் சட்டீஸ்கரும், தெற்கில் கர்நாடகமும், தென்கிழக்கில் ஆந்திரமும், தென் மேற்கில் கோவாவும், மேற்கில் அரபிக்கடலும் இம்மாநிலத்தின் எல்லைகளாக உள்ளன.
முதனிலைத் துறைகள்
இரண்டாம் நிலைத் துறைகள்
மூன்றாம் நிலைத் துறைகள்
No comments:
Post a Comment