இந்திய மாநிலங்கள் - 7
|
Posted Date : 09:12 (14/12/2013)Last updated : 09:12 (14/12/2013)
ஒடிசா
பண்டைய காலத்தில்
கலிங்கம் என்று அழைக்கப்பட்ட பகுதியே இன்றைய ஒடிசா. இதன் கோயில்,
கட்டடக்கலை, பாரம்பரிய நடனம், கைவினைப் பொருட்கள், வரலாறு ஆகியன உலக
சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. பூரி ஜெகன்னாதர் ஆலயம் உலகப் புகழ் பெற்றது.
சந்திப்பூர் ராக்கட் ஏவுதளம் அமைந்துள்ள மாநிலம்.வரலாறு: ஒடிசாவின் வரலாறு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. மகாபாரதக் காலத்தில் இந்தப் பகுதி கலிங்கம் என அழைக்கப்பட்டது. கி.மு. 261-ல் அசோகர் கலிங்கத்தைக் கைப்பற்ற நடத்திய போரில் ரத்த ஆறு ஓடியது. இந்தப் போர் சம்பவமே அசோகரின் மன, மத மாற்றத்துக்கு வழிவகுத்தது. இதன்பிறகு மராட்டியர், விஜய நகரம், முகலாயர்கள் என ஆட்சி மாற்றங்கள் பல கண்டு, கடைசியில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது வங்காளத்துடன் இருந்தது. பிறகு, 1912-ல் பீகார்- ஒடிசா மாகாணம் உருவானது. 1936-ல் பீகார், ஒடிசா தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. 1936, ஏப்ரல் 1-ம் தேதி ஒடிசா மாநிலம் உருவானது. பிறகு, 1950-ம் ஆண்டு 24 குறுநில மன்னராட்சிப் பகுதிகள் ஒடிசாவுடன் இணைக்கப் பட்டன எல்லைகள்: வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கு வங்கமும், வட மேற்கில் ஜார்கண்ட்டும், மேற்கே சட்டீஸ் கரும், தெற்கில் ஆந்திரமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் இம்மாநிலத்தின் எல்லைகள். முதன்மைத் துறை இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத்துறை
பஞ்சாப்
பியாஸ், சட்லெஜ்,
ராவி, ஜீனாப், ஜீலம் ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வ தால் ஐந்து ஆறுகள் என்று
பொருள் படும்படி பஞ்சாப் எனப்படுகிறது. இந்தியாவில் தனிநபர் வருமானம்
அதிகம் உள்ள மாநிலம். பட்டினி யால் வாடுவோர் மிகக் குறைவாக உள்ள மாநிலம்.வரலாறு: சிந்து சமவெளி நாகரிகம் என்பது இன்றைய பஞ்சாப் வரை பரவியிருந்தது. பண்டைய காலத்தில் இந்தோ-இரானிய நிலப் பகுதியின் கீழ் இருந்தது. அதன்பிறகு மௌரியர், கிரேக்கர்கள், குஷானர் கள், குப்தர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இடைக்காலத்தில் இஸ்லாமியர்களின் ஆட்சி இங்கு ஓங்கியது. 15-16-ம் நூற்றாண்டில் சீக்கிய சமயத்தின் வளர்ச்சிக்கு இடமானது. ரஞ்சித் சிங் 18-ம் நூற்றாண்டில் சீக்கிய பேரரசை உருவாக்கினார். 1849-ல் ஆங்கிலேயர் வசமானது. சுதந்திரத்துக்குப் பிறகு பஞ்சாபின் ஒரு பகுதி இந்தியாவுக்கும், மற்றொரு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. பிரிக்கப்படாத பஞ்சாபின் தலைநகரான லாகூர் பாகிஸ்தான் வசம் சென்றது.PEPSU (Patiala and East Punjab States Union) என்ற பெயரில் பாட்டியாலாவைத் தலைநகராக்கி ஒரு மாநிலம் உருவாக்கப்பட்டது. 1966-ல் பஞ்சாபில் இந்தி பேசும் பகுதிகளைப் பிரித்து ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. முக்கிய ஆறுகள்: ஜீனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லெஜ். முதன்மைத் துறை இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை
ராஜஸ்தான்
இந்தியாவின்
மிகப்பெரிய மாநிலம். இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனமான தார் பாலை வனத்தின்
பகுதி இம்மாநிலத்தில் உள்ளது. சலவைக்கல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும்
மாநிலம்.வரலாறு: உலகின் முதல் மற்றும் பழைமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் அமைந்துள்ள மாநிலம். கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை சௌகான்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர். 1818-ல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசு பகுதிகள் ஆனது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1948-ல் இருந்து 1956 வரை யிலான காலகட்டத்தில் பிகானிர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் போன்ற மன்னராட்சி பகுதிகள் ஒன்றிணைத்து கிரேட்டர் ராஜஸ்தான் உருவாக்கப்பட்டது. 1958-ல் ஆஜ்மீர் ராஜஸ்தானுடன் இணைக்கப்பட்டு தற்போதுள்ள ராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்டது. எல்லைகள்: வடக்கில் பஞ்சாப், வடகிழக்கில் ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களும், தென் மேற்கில் குஜராத், தென்கிழக்கில் மத்தியப்பிரதேசமும், மேற்கில் பாகிஸ்தானும் அமைந்துள்ளன. முக்கிய ஆறுகள்: லுனி, சம்பல், பனாஸ், மஹி, சபர்மதி. இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை
சிக்கிம்
மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக
உள்ள மாநிலம். உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்ஜன்ஜங்கா இதன் எல்லையில்
அமைந்துள்ளது. இந்தியா - சீனா இடையே உள்ள ஒரே தரைவழி பாதை நாதுல்லா கணவாய்
இங்கு தான் உள்ளது.வரலாறு: 8-ம் நூற்றாண்டின் போது புத்த மதகுரு ரின்போச்சி இந்தப் பகுதிக்கு வருகை தந்ததுதான் முதல் பதிவு. இவர்தான் புத்த மதத்தைப் பரப்பினார். கூர்க்காக்கள் இந்தப் பகுதியின் மீது தாக்குதல் நடத்தியபோது, சீனா தன்னுடைய படையை அனுப்பியது. இதன்பிறகு நேபாளத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது. இதில் பெரும்பான்மை கிடைக்காததால் இந்தியாவின் சிறப்பு உரிமைகள் பெற்ற சுயாட்சி பகுதியாக தொடர்ந்தது. சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை இந்தியாவிடம் இருந்தது. நேபாளிகளின் ஊடுருவல் அதிகரிக்கவே, 1975-ம் ஆண்டு சிக்கிம் பிரதமர் இந்தியாவுடன் சிக்கிமை இணைக்க கோரிக்கைவிடுத்தார். இதன்பிறகு இந்திய ராணுவம் சிக்கிம் சென்று அதன் தலைநகர் கேங்டாக்கைக் கைப்பற்றியது. பிறகு , வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது. 1975-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி இந்தியாவின் 22-வது மாநிலமாக சிக்கிம் இணைந்தது. முதன்மைத் துறை மூன்றாம் நிலைத் துறை
தமிழ்நாடு
தென் இந்தியாவின் நுழை வாயில். இந்தியாவின் முதல் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் ஆட்சிமொழியாக உள்ள மாநிலம்.வரலாறு: திருநெல்வேலி அருகே ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் தமிழகத்தின் வரலாறு என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம் என கணிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய வரலாற்றை சங்க இலங்கியங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தின் காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னதாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது. இன்றைய தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதிகளை தமிழ் மன்னர்கள் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆண்டுவந்துள்ளனர். ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், மெசபடோமியர்கள், பெர்ஷியர்களுடன் வாணிபத் தொடர்புகள் இருந்துள்ளன. முத்துக்கள், வாசனைப் பொருட்கள், வைரங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. 1336-ல் விஜயநகர பேரரசின் கீழ் தமிழகம் இருந்துள்ளது. அவர் களுக்குப் பிறகு நவாப்கள், நிஜாம்கள் என பலர் கைகளுக்கு மாறி 1801-ல் ஆங்கிலேயர் வசம் சென்றது. ஆங்கி லேயர் ஆட்சியின்போது இந்தப் பகுதிகள் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டுவந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, சென்னை மாநிலம் ஆனது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்படும்போது சென்னை மாநிலத்தில் இருந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டன. 1969-ம் ஆண்டு சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதன்மைத் துறை இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை
திரிபுரா
இந்தியாவின் இரண்டாவது சிறிய
மாநிலம். திரிபுரா பற்றிய பண்டைய தகவல்களை ராஜ்மாலா என்ற நூலில் இருந்து
தெரிந்து கொள்ளலாம். மாநில மக்கள் தொகையில் 52 % பேர் மலைவாழ் மக்களே.வரலாறு: தற்போது தனி மாநில அந்தஸ்தில் இருக்கும் திரிபுரா, சுதந்திரத்துக்கு முன்புவரை மன்ன ராட்சியின் கீழ் இருந்தது. 184 அல்லது 179 மாணிக் பகதூர் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் திரிபுரா என்பது பர்மா, வங்கதேசம், வங்காள விரிகுடா வரை பரந்து விரிந்திருந்தது. இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து மாணிக் பகதூர் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1949-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ம் தேதி சி பிரிவு மாநில மானது. 1956-ல் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றானது. 1972-ம் ஆண்டு, ஜனவரி 21-ம் தேதி தனி மாநில அந்தஸ்தை பெற்றது திரிபுரா. எல்லைகள்: வடக்கு, தெற்கு, மேற்கு வங்கதேசம், கிழக்கில் அஸ்ஸாம், மிசோரம். முக்கிய ஆறுகள்: கும்தி, கொவாய், மனு, ஹோரா, தியோ. இரண்டாம நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை |
Friday, 24 January 2014
இந்திய மாநிலங்கள் - 7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment