இந்திய மாநிலங்கள் - 6
|
Posted Date : 13:12 (13/12/2013)Last updated : 08:12 (14/12/2013)
மணிப்பூர்
இந்தியாவின்
சுவிட்சர்லாந்து. பச்சைப்பசேல் சமவெளிகள், அடர்ந்த வனப்பகுதி, நீலநிற
ஏரிகள் நிறைந்த மாநிலம். சிறப்பு ராணுவ சட்டத்தை விலக்கக் கோரி 12
ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரும்புப் பெண்மணி
ஷர்மிளாவின் மாநிலம்.வரலாறு: இயற்கை வளத்தில் மட்டுமல்ல, நீண்ட நெடிய வரலாற் றுப் பின்னணியும் கொண்டது மணிப்பூர். மகாபாரதத்தில் அர்ஜுனன் இங்குவந்து மணிப்பூர் இளவரசியை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கி.பி. 33 - 154-ல் நாங்டாலைரன் பகாங்கபாவின் ஆட்சி தொடங் கியது. தொடர்ந்து பர்மியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. 1891-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட் பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, 1949-ம் ஆண்டு இந்தியாவின் சி பிரிவு மாநிலமாக இணைந்தது. 1972-ல் தனி மாநிலம் ஆனது. முக்கிய ஆறுகள்: பாரக், மணிப்பூர், யு, லான்யீ ஆகிய நான்கு முக்கிய நதிப் படுகைகள் இம்மாநிலத்தில் உள்ளன. முதனிலைத் துறைகள் மூன்றாம் நிலைத் துறைகள்
மேகாலயா
உலகின் அதிக மழைப்பொழிவு உள்ள சிரபுஞ்சி, மௌசின்ராம் அமைந்துள்ள மாநிலம். ரயில்பாதை இல்லாத மாநிலம்.வரலாறு : இம்மாநிலத்தில் உள்ள காசி, காரோ மற்றும் ஜைந்தியா பழங்குடியினங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு தனியாக ஆட்சி செய்துவந்தன. ஆங்கிலேயர் இப்பகுதியைக் கைப்பற்றியதும் இதை அசாம் மாகாணத்தின் ஒருபகுதியாக இணைத்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகும் இது அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு மாவட்ட மாகவே இருந்து வந்தது. 1970-ம் ஆண்டில், அஸ்ஸாம் மாநிலத்துக்குள் தன்னாட்சி பெற்ற பகுதியாக மேகாலயா உருவாக்கப் பட்டது. 1972-ம் ஆண்டு தனி மாநிலமாக இது உருவானது. எல்லைகள் : வடக்கில் அஸ்ஸாம், தெற்கில் வங்க தேசத்தால் சூழப் பட்டுள்ளது இம்மாநிலம். முக்கிய ஆறுகள்: கிருஷியானி கலு, நிதாய், உம்கோடா, டாம்ரிங், கோமேஸ்வரி. இரண்டாம் நிலைத் துறைகள் மூன்றாம் நிலைத் துறைகள் முக்கிய விழாக்கள்: காசி இனத்தவர்களின் ஐந்து நாள் முக்கியத் திருவிழாவாக நாங்க் ரெம் நடனம் நடைபெறுகிறது. சூரிய கடவுளை பெருமைப்படுத்தும் வகையில் வாங்லா என்ற திருவிழா கொண்டாடப் படுகிறது. முக்கிய நகரங்கள்: ஷில்லாங் (கிழக்கின் ஸ்காட்லாந்து), வில்லியம் நகர், துரா. முக்கிய இடங்கள்: உமியாம் ஏரி, கில்லாங் பாறை, மாஸ்மாய் குகைகள்.
மிசோரம்
உயரமான மலைச்
சிகரங்கள், சமவெளி, ஆறுகள், ஏரிகளின் மாநிலம். வனம் மற்றும் நில மலைகளின்
சொர்க்கம். மலையக மக்களின் நாடு. மூங்கில் நடனம் பிரசித்தி பெற்றது.வரலாறு: சீனாவின் யலாங் நதிக்கரைப் பகுதியில் இருந்து மிசோக்கள் இந்தப் பகுதியில் குடியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, மிசோக்கள் நிறைந்த பகுதியானது வங்காளத்திலும், அஸ்ஸாம் மாகாணத்தில் இருந்தன. அஸ்ஸாமின் ஒரு மாவட்டமாக இருந்த இந்தப் பகுதி 1972-ல் பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிப் பகுதியாக்கப் பட்டது. 1987-ல் இந்தியாவின் 23-வது மாநிலம் ஆனது. எல்லைகள்: வடக்கில் திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களையும், தெற்கு மற்றும் மேற்கில் மியான்மரையும், கிழக்கில் வங்க தேசத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. முக்கிய ஆறுகள்: கலாடன், தலாங், சோனை. மூன்றாம் நிலைத் துறை
நாகாலாந்து
நாகா மக்களின் வண்ணமயமான நடனத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் பெயர்பெற்ற மாநிலம்.வரலாறு: நாகா என்பதற்கு பர்மிய மொழியில் துளையிட்ட காதுகளைக் கொண்ட மக்கள் என்பது பொருள். நாகா பழங் குடியினர் அஸ்ஸாம், பர்மா அரசியல், சமூக, பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்டவர்கள். சுதந்திரத்துக்குப் பிறகும் அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. நாகா இனத்தினர் சிலரிடையே பிரிவினைவாதம் ஏற்பட்டு அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. 1955-ல் இது உச்சத்தை அடைந்தபோது இந்திய ராணுவம் அங்கு சென்று தனது கட்டுக்குள் கொண்டு வந்தது. 1957-ல் இனக் குழுக்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், 1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவின் 16-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. எல்லைகள்: அருணாச்சலப் பிரதேசம் வடக்கிலும், மேற்கில் அஸ்ஸாமும், கிழக்கில் மியான் மரும், தெற்கில் மணிப்பூரும் எல்லைகளாக உள்ளன. முக்கிய ஆறுகள் : தன்சாரி, டோபாங், ஜம்ஜி போன்றவை முக்கிய ஆறுகள். மூன்றாம் நிலைத் துறை |
Friday, 24 January 2014
இந்திய மாநிலங்கள் - 6
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment