தினேஷ்

கேலா அரசின் துணைவியாரான விஸ்சலாவிற்கு செயற்கை கால் முதன்முதலாக பொருத்தினர் 'அஸ்வினி மருத்துவர்கள்'.

சுஸ்ருதர்
தான் முதல் மருத்துவர் அவர் மருத்துவ கலைகளை மருத்துவக் கடவுளான
தன்வந்தரியிடம் கற்றுக் கொண்டனர். அவர் இயற்றிய நூலின் பெயர். 'சுஸ்ருத
சம்கிதா'.

நூற்றுக்கும்
மேற்பட்ட அறுவை சிகிக்கை கருவிகளைச் சுஸ்ருதர் தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார். எகிப்தியர்களுக்கு முன்பே இறந்த உடலைப் பதப்படுத்தும்
முறையையும் குறிப்பிட்டுள்ளார்.

போஷ
பிரபந்தா (927AD) என்னும் நூலில் சுஸ்ருதர் போஷ அரசருக்கு மயக்க மருந்து
கொடுத்து மூளையில் உள்ள கட்டிகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கினார்
என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கௌதம புத்தரின் வழிவந்த 'தேவகா' என்னும் மருத்துவரும் மிகச் சிறந்த மருத்துவர் ஆவார்.

ஒரு மயிலிலையைக் குறுக்காக வெட்டும் நுணுக்கமான அறுவை சிகிச்சை உபகரணங்களை கண்டுபிடித்தார் சுஸ்ருதர்.

தையல் போடுவதற்காகக் கட்டெறும்பை கடிக்கவிட்டு காயத்தை ஆற்றினார்.

சக்கரையால் கட்டுப்போட்டு உடைந்த எலும்புகளை ஒன்று சேர்த்தனர்.


பழைய மருத்துவமுறையான ஆயுர்வேதம் தோன்றியதும் இந்தியாவிலே தான்.

'சரகர்' என்னும் மருத்துவ மேதை இதயத்தை ஆராய்ச்சி செய்துள்ளார். அதற்கு 'ஹிருதயம்' என்றும் பெயரிட்டுள்ளார்.

சுஸ்ருதர்
அறுவை சிகிச்சைகள் மட்டுமல்லாது செயற்கை பிரசவ முறையையும், கண்புரை அறுவை
சிகிச்சையையும், மூளை கட்டி அறுவை சிகிச்சையையும், தோல் மாற்று அறுவை
சிகிச்சையையும் செய்துள்ளார்.

கி.பி.
முதலாம் நூற்றாண்டுகளிலே வாசனை திரவியங்களை (றிமீக்ஷீயீuனீமீ) சந்தனம்
போன்ற பல்வேறு வாசனைப் பொருட்களில் இருந்து தயாரித்துக் கிரேக்கர்களுக்கு,
ரோமானியர்களுக்கு, அரேபியர்களுக்கு, எகிப்தியர்களுக்கும் ஏற்றுமதி
செய்தனர்.

1600
ஆண்டுகளில் மொத்தமான பருத்தி ஆடைகளை இண்டிகோ என்னும் மையால் தோய்த்து
ஏற்றுமதி செய்தனர். அதுவே 'டெனிம் ஜீன்ஸ்' க்கு போட்ட முதல் பிள்ளையார்
சுழி.

முதன் முதலாகச் சர்க்கரையைக் கரும்பில் இருந்து உற்பத்தி செய்ததும் இந்தியர்களே தான்.

மாட்டில்
இருந்து பெறும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் என்னும் ஐந்து
பொருட்களும் 'பஞ்சகாவ்யம்' என்று பெயரிடப்பட்டு, தோல் நோய்களுக்கும்,
மூட்டு வலிக்கும், வயிற்றுப் புண்ணிற்கும் பயன்பட்டது. இன்று, தாவரநோய்களை
இயற்கை முறையில் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

துளசி நீரிழிவு நோயை ஆற்றும் என்று அன்றே அறிந்திருந்தனர் இந்தியர்கள்.

'ணி.சிஷீறீவீ' போன்ற நுண்ணுயிரிகளை அன்றே இந்தியர்கள் பயன்படுத்திய தாமிர பாத்திரங்கள் கொல்லும் என்று இன்று நிருபிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தைப்
பண்டைய காலம் முதலே தொன்று தொட்டு தொழிலாக நடத்தி வந்துள்ளனர்
இந்தியர்கள். அது மட்டுமல்லாது தானிய சேமிப்பையும் முதன் முதலாகக்
கையாண்டுள்ளனர்.

நமது
புத்தகங்கள் அனைத்தும் 17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கெப்ளர், கோபர்
நிக்கஸ், கலீலியோ போன்ற ஏனைய விஞ்ஞானிகளின் கூற்றுகளையும் விதிகளையும்
விளக்கியிருக்கும். ஆனால் 476 கி.ஞி யில் வாழ்ந்த ஆரியபட்டரையும்
பாஸ்கராச்சார்யாவையும் நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது.

'ஆர்யபட்டா'
இயற்றிய நூலான 'ஆரியபட்டியத்தில்' இந்த பூமி உருண்டை வடிவமானது என்றும்
பூமியில் சுற்றளவு கிரகங்களின் வரிசை நிலைப்பாடு பற்றியும்
குறிப்பிட்டுள்ளார்.

கணிதத்தில்
அதிகம் பயன்படும் 'ஜீயாமெட்ரி', 'டிரிக்னாமெட்ரி' என்ற வார்த்தைகள்
'ஜீயோமிட்டி', 'டிரிக்கனாமிட்டி' என்னும் சமஸ்கிருத வார்த்தைகளே.

இன்று பயன்படும் பைத்தாகரஸ் தேற்றம் அன்று சல்வ சூத்திரம் என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து
முனிவரும், தத்துவ ஞானியுமான கனடா (Kanada) கி.பி. 6ம் நூற்றாண்டிலேய
துகள் களின் தொகுப்பு தான் அணுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். துகள் களை
'டுவினுகா' என்றும், அணுக் களைப் பரமணுக்கள் என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு
பொருளும் ஒவ்வொரு எடையைக் கொண்டிருக்கும் என்றும் பொருளின் எடை நீரில்
குறைவாக இருக்குமென்றும் ஆர்க்கிமிடிஸ்க்கு 1000 வருடங்களுக்கு முன்பே
கூறிவிட்டார்.

6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'புத்தயணா' யின் மதிப்பையும் பைத்தாகரஸ் தேற்றத்தையும் கண்டுபிடித்தார். (3.14).

'பரசரா'
என்பவர் இயற்றிய நூலைன விரிக்சா ஆயூர்வேதாவில் தாவர செல்லின்
தோற்றத்தையும் ஒளிச்சேர்கையையும் பற்றிய குறிப்புகளை இயற்றியுள்ளார்.

வேதியியல்
துறையிலும் இந்தியர்கள் முன்னேறியிருந்தனர். தில்லியிலுள்ள ராஷா சந்திர
வர்மா கட்டிய இரும்புத் தூணானது இன்றளவும் துருப்பிடிக்காமல் இருப்பது
குறிப்பிடத்தக்கது. அன்றே சோப்புகளையும், வாசனைத் திரவியங்களையும்
பயன்படுததியுள்ளனர்.

இந்திய வேதியியல் துறையின் பொற்காலம் 600BC–800AD.

'கவுடில்யா' இயற்றிய 'அர்த்தசாஸ்ரா'வில் வேதியியலின் 'இரச வித்யா' என்னும் ஒரு பகுதியே உள்ளது.

திருச்சியில்
கட்டப்பட்ட 'கல்லணை' தான் முதன்முதலாக கட்டப்பட்ட அணை. அது முதலாம்
நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. அதற்கு முன்பாகவே குஷராத்தில்
சுதர்மூண குளத்தை நீர்தேக்கமாக பயன்படுத்தியுள்ளார். அதனை சாகராஷா
ருத்ரதாமன் கட்டினார்.

'ஸ்ரீதர் ஆச்சார்யா' இன்று பயன்படும் 'இருபடி சமன்பாடு'(Quadratic Equation) அன்றே கண்டுபிடித்தார்.

'டாக்ஸில்லா' மற்றும் 'நாளந்தா' பல்கலைக்கழகங்களே பழமையானது.

'நியாயசாஸ்த்ரா' என்னும் நூலை 'கௌதமா' என்பவர் இயற்றினார் இதில் காரணவியல் (Reasoning) குறித்து இயற்றப்பட்டுள்ளது.

'நாட்டியசாஸ்த்ரா' என்னும் நூலை 'பாரதமுனி' என்பவர் இயற்றியார் இதில் நடனகலைகள் இடம்பெற்றுள்ளன.

'பிரம்மகுப்தா' என்பவர் பூஜ்யத்தைக் கொண்டு ஏதேனும் எண்ணை வகுத்தால் முடிவற்ற ஒரு எண் வரும் (Infinity) என்றார்.

ரிக்வேதத்தில் 'ஒளிக்கற்றை' (light spectrum) குறித்த குறிப்புகள் உள்ளன.

கிரிகேரிய
நாட்காட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியின் சுற்ற ஒரு நாள் கூடி
குறைவதாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. இது தவறான முறை. ஆனால் இந்து மத
நாட்காட்டியில் அவ்வாற இல்லை. அனைத்தும் துல்லியமாக அன்றே கணிக்கப்பட்டது
தான்.

'பாஸ்கராச்சார்யா' பூமி சூரியனைச் சுற்றிவர 365.258756484 நாட்கள் ஆகிறது என்று அன்றே துல்லியமாக கணித்துள்ளார்.

பருத்தியை
அறுவடை செய்து நூல் இழைகளைக் கொண்டு ஆடை தயாரிப்பதையும் இந்தியர்களே
கண்டுபிடித்தனர். அதற்கு முன் தோல் ஆடைகளையே பயன்படுத்தினர் உலகமக்கள்
அனைவரும்.

கணிதத்தில் பயன்படும் வகைப்பாடு (Algebra), நூண்கணிதம் (Calculus),வர்க்கலம் (Square Root) ஆகியவை இந்திய கண்டுபிடிப்புகளே.

வராகிமிகிரா என்னும் கணித மேதையின் கண்டுபிடிப்பே முக்கோணவியல் (Trigonometry).

சதுரங்கம்
விளையாட்டின் தொடக் கமும் இந்திய பிராமிணர்கள் வகுத்ததே. பால்கெட் என்னும்
அரசன் தன் மக்கள் சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருக்க உருவாக்கிய விளையாட்டு
தான் செஸ்.

கபடி,
லுடோ / (Ludo),பரமபதம் (Snakes & Ladders),சீட்டாட்டம் போன்ற
விளையாட்டுகள், பேனாவின் மை, நில நடுக்க கருவி பொத்தான் (Button) முதலியன
இந்திய கண்டுபிடிப்புகளாகக் கருதப்படுபவை ஆகும்.
அருமையான பதிவு
ReplyDeleteசுஸ்ருதர் பற்றி மேலும் அறிய
Source-https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_6.html?m=1