
இதயத்தின் செயல்பாட்டுக் கோளாறுகளை அறிய - Electrocardiograph (ECG).

மூளையின் செயல்பாட்டுக் கோளாறுகளை அறிய - Electroencephalograph (EEG).

உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக் கோளாறுகளை அறிய - Computed Tomography Scan (CT Scan).

உடல் உள்ளுறுப்புகளின் குறைபாடுகளை அறிந்துகொள்ள உதவும் மற்றொரு கருவி - Magnetic Resonance Imaging Scan (MRI Scan).

செயற்கை முறையில் இதயத் துடிப்பை உருவாக்க - பேஸ் மேக்கர்.

ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கணக்கிட - க்ளுக்கனோமீட்டர்.

ரத்த அழுத்தத்தை அளவிட - ஸ்பிக்மோமானோ மீட்டர்.

இதயத் துடிப்பை அறிய - ஸ்டெதஸ்கோப்.

காதுகளைச் சோதிக்க - ஒட்டாஸ்கோப் (Otoscope).

கண்களைச் சோதிக்க - அப்தால்மாஸ்கோப்.

கப்பல் செல்லும் தீர்க்க ரேகையையும் (றீஷீஸீரீவீtuபீமீ) நேரத்தையும் அறிய - குரோனோமீட்டர்.

கப்பல் செல்லும் திசையை அறிய - மரைனர்ஸ் காம்பஸ்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீரின் மேல்மட்டத்தைப் பார்க்க - பெரிஸ்கோப்.

கப்பல் இயந்திரங்களின் செயல்பாடுகளைப் பதிவுசெய்ய - வாயேஜ் ரெக்கார்டர்.

கடலின் ஆழத்தை அளக்க - ஃபாதம் மீட்டர்.

வானில் பறக்கும் விமானங்களைக் கண்டறிய - ரேடார்.

விமானம் பறக்கும் உயரத்தை அறிய - ஆல்டிமீட்டர்.

விமான இயந்திரங்களின் செயல்பாடுகளை நுணுக்கமாகப் பதிவுசெய்து, விபத்தின் காரணத்தை அறிய - பிளாக் பாக்ஸ்.

கப்பல் பயணத்தின் விவரங்களை நுணுக்கமாக பதிவு செய்வது - வாயேஜ் ரெக்கார்டர்.

நிறமாலையைக் காண - ஸ்பெக்ட்ராஸ்கோப்.

புது வகையான டிஸைன்களை உருவாக்க - கலைடாஸ்கோப்.

தொலைவிலுள்ள பொருட்களைக் காண - டெலஸ்கோப்.

மிகக் குறைந்த வெப்பநிலையை அளவிட - கிரையாஸ்கோப்.

அச்சிட்ட படங்களைத் திரையில் விழச்செய்ய - எபிடாஸ்கோப்.

சிறு பொருட்களை பெரியதாக்கி காட்ட - மைக்ராஸ்கோப்.

மேகங்களின் திசை, உயரம் அறிய - நீபோஸ்கோப்.

வளிமண்டல அழுத்தத்தை அறிய - பாரா மீட்டர்.

பாலின் அடர்த்தி, தூய்மை அறிய - லாக்டோ மீட்டர்.

காற்றின் வேகம், திசை அறிய - அனிமா மீட்டர்.

காற்றின் ஈரப் பதத்தை அறிய - ஹைக்ரோ மீட்டர்.

உணவுப் பொருட்களின் வெப்ப ஆற்றலை அறிய - கலோரி மீட்டர்.

திரவங்களின் அடர்த்தியை அறிய - ஹைட்ரோ மீட்டர்.

சூரியக் கதிர்வீச்சை அளவிட - பிரிஹிலியோ மீட்டர்.

உப்புக் கரைசலின் அடர்த்தியை அறிய- சலைனோ மீட்டர்.

திரவங்களின் பாகு நிலையை அறிய- பாய்க்னோ மீட்டர்.

திரவங்களின் பாய் திறனை (Flow rate) அறிய- வெஞ்சூரி மீட்டர்.

காற்றின் வேகத்தை அளக்க - போஃபர்ட்ஸ் ஸ்கேல்.

புவி அதிர்ச்சியின் அளவை அறிய - ரிக்டர் ஸ்கேல்.

புவி அதிர்ச்சியின் செறிவை அளவிட - மெர்காலி ஸ்கேல்.

பொருட்களின் கடின, மென் தன்மைகளை அறிய - மோஸ் ஸ்கேல்.

பொய் சொல்வதை கண்டுபிடிக்க - பாலிகிராஃப்.

நில நடுக்கத்தைக் கண்டுபிடிக்க - சீஸ்மோகிராஃப்.

தாவரத்தின் வளர்ச்சியை அறிய - கிரஸ்கோகிராஃப்.
Good
ReplyDelete