இந்திய மாநிலங்கள் - 9
|
Posted Date : 10:12 (14/12/2013)Last updated : 10:12 (14/12/2013)
தாத்ரா-நாகர் ஹவேலி
பழங்குடியினர் நிறைந்த பகுதி. 79% மக்கள் பழங்குடியினர்.வரலாறு: போர்ச்சுகீசியர், மராட்டியர்களுக்கு இடையே சண்டை நிலவியது. 1779-ம் ஆண்டு, டிசம்பர் 17-ம் தேதி அன்றைய மராட்டிய அரசு போர்ச்சுகீசியர்களுக்கு சில கிராமங்களை விற்றது. அவற்றை 1954-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். பின்பு, மக்களே ஆட்சியைக் கைப்பற்றினர். 1961-ம் ஆண்டு இது இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதியாக இணைந்தது. எல்லைகள்: குஜராத்துக்கும், மகாராஷ்டிராவுக்கும் இடையில் உள்ளது. மூன்றாம் நிலைத் துறை
டாமன் டையூ
இரண்டாவது மிகச்சிறிய யூனியன் பிரதேசம்.வரலாறு: கோவா, டாமன், டையூ ஆகியவை 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்களின் காலனி பகுதியாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு இந்தியாவுடன் இந்தப் பகுதிகள் இணைக்கப்பட்டன. 1987-ம் ஆண்டு கோவா தனி மாநிலமானபோது டாமன், டையூ மத்திய ஆட்சிப் பகுதியாகவே தொடர்ந்தன. பொருளாதாரம்: மீன்பிடித்தல், விவசாயம் போன்றவை முக்கிய தொழில்கள். அனைத்து கிராமங் களும் மின் வசதி பெற்றுள்ளன. எல்லைகள்: குஜராத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள யூனியன் பிரதேசம். வடக்கில் கோலக் ஆறு, கிழக்கில் குஜராத், தெற்கில் கலை ஆறு, மேற்கில் கேம்பே வளைகுடா. முதன்மைத் துறை மூன்றாம் நிலைத் துறை
புதுச்சேரி
பிரெஞ்சு கலாசரத்தின் ஜன்னல் என்று
பண்டிட் ஜவஹர்லால் நேருவால் குறிப்பிடப்பட்டுள்ள அரவிந்தர் ஆசிரமம் இந்த
யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது.வரலாறு: சோழர், பல்லவர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்திருக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் புதுச்சேரி சிறந்த துறைமுக நகராக விளங்கியதுக்கு அரிக்கமேடு சாட்சியாக உள்ளது. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி புதுச்சேரியில் 1674-ல் வியாபார நிறுவனத்தை ஏற்படுத்தியது. 1720-ம் ஆண்டில் மாஹியையும், 1731-ல் ஏனாமையும் பிரான்ஸ் வாங்கியது. 1954, நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் இந்தியாவுடன் இணைய ஒப்பந்தமாகி 1962, ஆகஸ்ட் 16-ம் தேதி அன்றுதான் புதுச்சேரி அதிகாரப்பூர்வமாக இந்தியப் பகுதியானது. இந்தியாவில் இணைந்தாலும் தனி மாநிலமாகாமல், மத்திய ஆட்சிப்பகுதியாக உள்ளது. தனக்கென தனி சட்டப்பேரவை, முதல்வர், அமைச்சர்கள் கொண்ட இரண்டு மத்திய ஆட்சிப்பகுதிகளில் இதுவும் ஒன்று. முக்கிய இடங்கள்: புதுச்சேரி அழகிய கடற்கரைகள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், மணக்குள விநாயகர் கோயில். முதன்மைத் துறை இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை
லட்சத் தீவுகள்
மிகச்சிறிய யூனியன் பிரதேசம். இந்தியாவின் ஒரே பவழப் பாறை தீவுக்கூட்டம்.வரலாறு: இத்தீவுகளில் முதல் குடியேற்றம் கேரளாவை ஆண்ட சேரமான் பெருமான் காலத்தில் நடந்ததாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. பண்டைய தமிழ் இலக்கியத்தில் லட்சத் தீவுகள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தீப லக்ஷம் என்ற பெயரில் இந்தப் பகுதி பல்லவ அரசுக்கு உட்பட்டதாக கூறுகிறது. சோழர்கள், கண்ணூர் அரசுகள் இந்தப் பகுதியை ஆட்சி செய்திருக்கின்றன. இத்தீவுகளைச் சேர்ந்த மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14-ம் நூற்றாண் டில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய தாகவும் நம்பப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. 1956-ல் மத்திய ஆட்சிப் பகுதியாக மாறியது. லக்காத்வ், மினிக்காய், அமின்டிவி ஆகிய தீவுகள் சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1973, நவம்பர் 1-ம் தேதி லட்சத் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது. போக்குவரத்து: விமானம், கப்பல் சேவை இந்தத் தீவுகளுக்கு உள்ளது. முதன்மைத் துறை மூன்றாம் நிலைத் துறை
தேசிய தலைநகர் பகுதி-டெல்லி
தலைநகர ஆட்சிப் பகுதி டெல்லி, இந்தியாவின் தலைநகர்.வரலாறு: மகாபாரதத்தில் பாண்டவர்களின் தலைநகராக விளங்கிய இந்திரப்பிரஸ்தமே இன்றைய டெல்லி என்று நம்பப் படுகிறது. இதன்பிறகு, மௌரியர்கள் ஆட்சிக்காலத்தில் செழித்து ஓங்கிய நகர்பகுதிகளின் எச்சங்கள் டெல்லியில் கண்டறியப்பட்டுள்ளன. தொமாரா, சௌகான் ராஜபுத்திரர்கள் ஆண்டனர். பிறகு, சுல்தான்கள் ஆட்சியின் கீழ் வந்தது. முகலாயர்கள் டெல்லியில் இருந்துதான் தங்கள் ஆட்சியை நடத்தினர். பின்னர், மராத்தியர்கள், முகலாயர்களுக்கு இடையே டெல்லியை கைப்பற்ற பல போர்கள் நடந்தன. 1803-ல் மராத்தியர்களை தோற்கடித்து டெல்லியை பிரிட்டிஷின் கிழக்கு இந்திய கம்பெனி கைப்பற்றியது. 1857-ல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் டெல்லி வந்தது. 1911-ல் கல்கத்தாவில் இருந்த தலைநகரம் டெல்லிக்கு மாற்றப்பட்டது. 1991-ல் 69வது சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய ஆட்சிப் பகுதியாக விளங்கிய டெல்லி, தேசிய தலைநகர ஆட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. முக்கிய ஆறு: யமுனை. முதன்மைத் துறை இரண்டாம் நிலைத் துறை மூன்றாம் நிலைத் துறை |
Friday, 24 January 2014
இந்திய மாநிலங்கள் - 9
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment