ஆந்திரப்பிரதேசம்
வரலாறு: கி.மு.
800-களில் எழுதியதாக கருதப்படும் அய்த்ரேய பிரமாணத்தில் ஆந்திரத்தைப்
பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆந்திராவின்
பெரும்பாலான பகுதி சென்னை மாகாணத்திலும், ஹைதராபாத் பகுதி நிஜாம்
கட்டுப்பாட்டிலும் இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு, சென்னை மாகாணத்தில்
இருந்து, தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த பகுதியைப் பிரித்து, மொழிவாரி
மாநிலமாக அமைக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திரப்பிரதேசம். 1956-ம் ஆண்டு,
நவம்பர் 1-ம் தேதி உருவானது. தனி தெலங்கானா அமைக்க வேண்டும் என்று 1960-ம்
ஆண்டு முதல் போராட்டம் நடந்து வருகிறது.
எல்லைகள் : வடக்கே மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் ஒடிசா. தெற்கே தமிழ்நாடு, மேற்கே கர்நாடகம், கிழக்கே வங்காள விரிகுடா.
முக்கிய ஆறுகள் : கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்ரா நதிகள் இம்மாநிலத்தில் பாய்கின்றன.
முதனிலை துறைகள்

மாநிலத்தின் 62% மக்கள் விவசாயத்தையே மேற்கொள்கின்றனர்.

அரிசி, கரும்பு, பருத்தி, மிளகாய், மாங்காய், புகையிலை ஆகியவை மிக முக்கியமான விளைபொருட்கள்.

இந்தியாவில் புகையிலை, முட்டை உற்பத்தியில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது.றீ

கனிம வளத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது.

கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் மிக அதிக அளவிலான இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோல் வளம் கண்டறியப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இரண்டாம் நிலைத் துறை

விசாகப்பட்டினம் மிகப்பெரிய துறைமுகமாகவும் கப்பல் கட்டும் தளமாகவும் உள்ளது.

ஹைதராபாத்
Hotel City என்றழைக்கப்படுகிறது.
மூன்றாம் நிலைத் துறை

முக்கிய நகரங்கள் : ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா, திருப்பதி, நெல்லூர், கர்னூல், வாரங்கல்.

சுற்றுலா தலங்கள்: சார்மினார், நாகார்ஜுன சாகர், திருப்பதி, வாராங்கல், கோல்கொண்டா கோட்டை, பிர்லா மந்திர்.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் இங்குள்ளது.

குச்சுப்புடியின் பிறப்பிடம்.

இந்தியாவின் மிகப்பெரிய புலிகளின் சரணாலயமான நாகார்ஜுன ஜிசைலம் நல்லமலை வனப்பகுதியில் அமைந்துள்ளது.

கிழக்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரம் மகேந்திரகிரி (1500 இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
அருணாசலப்பிரதேசம்
சீனாவின் எல்லையை
ஒட்டி உள்ள மாநிலம். இம்மாநிலத்தின் பனி படர்ந்த சில பகுதிகள் இன்றும்
சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன. சூரியன் உதிக்கும் நிலம் என்றும் இது
அறியப்படுகிறது.
வரலாறு: இதன்
பண்டைய கால வரலாறு அறியப்படவில்லை. இருப்பினும், மகாபாரதம் மற்றும் இதர சில
காவியங்களில் அருணாச் சலப்பிரதேசம் பற்றிய குறிப்பு உள்ளதாக இம்மாநில அரசு
கூறு கிறது. அருணாச்சலப்பிரதேசத்தின் நவீன வரலாறு 1826-ம் ஆண்டில் இருந்தே
தொடங்குகிறது. 1962 வரை வடகிழக்கு ப்ராண்டியர் ஏஜென்சி என்று இது அழைக்கப்
பட்டது. 1972-ல் அருணாச்சல பிரதேசம் என்ற பெயரில் மத்திய ஆட்சிப் பகுதியாக
மாறியது. 1987, பிப்ரவரி 20-ம் தேதி இது இந்தியா வின் 24-வது மாநிலம்
ஆனது. 20-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எல்லைகள்: வடக்கே
சீனா, தெற்கே அஸ்ஸாம், நாகாலாந்து, கிழக்கே மியான்மர், மேற்கே பூடான் இதன்
எல்லைகள். பூடான், திபெத், சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுடன் எல்லையைப்
பகிர்ந்துகொள்கிறது.

திபாங், கம்லா, போஹித், சுபன்சிரி ஆகியவை முக்கிய ஆறுகள்.

பிரம்மபுத்திரா நதி அருணாச்சலப் பிரதேசத்தின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.
முதனிலைத் துறைகள்

மாநிலத்தில்
80% மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை,
கரும்பு, இஞ்சி, எண்ணெய் வித்துக்கள் பெருமளவில் விளைகின்றன.

இம்மாநிலத்தின் 75% நிலப்பரப்பு காடுகளால் சூழப்பட்டுள்ளது. காடு சார்ந்த பொருளாதாரம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

'
Thumming' என்பது பல காலமாகக் கடைப்பிடித்து வரும் இடமாற்று விவசாய முறை ஆகும்.

ஆர்க்கிட்டுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. 600-க்கு மேற்பட்ட இனங்கள் இங்கு காணப்படுகிறது.
இரண்டாம் நிலைத் துறைகள்

கைத்தறி, பழங்கள் பதப்படுத்துதல் ஆகியவை மிக முக்கியத் தொழில்களாக உள்ளன.
மூன்றாம் நிலைத் துறைகள்

முக்கிய நகரங்கள்: இட்டா நகர், பசிக்காட் அளினி, அலோங், கோன்ஸா, ஜெப்ரோ, நோக்டே தேஜீ, தவாங்.

விமானநிலையம் : அலோங், தபோரிஜோ, பசிக்காட் தேஜீ, ஸைரோ.

முக்கிய இடங்கள் தவாங், பரசுராம், குண்ட், பஸ்மக், இட்டாநகர், மோம்திலா.

இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயம் தவாங்கில் உள்ளது. (கோல்டன் நங்கியேல் லாத்ஸே)

நோக்கடே மக்களின் சாலோலோகூ, புரிபூட்டு, பரசுராம மேளா போன்றவை முக்கிய விழாக்களாகும்.

இந்தியாவில் குறைந்த மக்கள்அடர்த்தி கொண்ட மாநிலம்.

பழங்குடியின மக்களின் நாட்டுப்புற நடனங்கள் சிறப்பு வாய்ந்தவை.
அசோம்
தேயிலைக்குப் பெயர் பெற்ற மாநிலம்.
வரலாறு: அஸ்ஸாம்
என்ற வார்த்தை அஸோம் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்தது. இதற்கு
ஒப்பற்றது அல்லது ஈடு இணையற்றது என்று பொருள். இருப்பினும், அகோம் என்ற
அரசு இந்தப் பகுதியை 600 ஆண்டுகள் ஆண்டதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்
என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆட்சி முடிவுக்குப்
பிறகு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டபோதும் அஸ்ஸாம் என்ற பெயரே தொடர்ந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தனி மாகாணமாக இது விளங்கியது.
சுதந்திரத்துக்குப் பிறகு, இம்மாநிலத்தில் இருந்து நார்த் ஈஸ்ட்
ப்ரான்டியர் ஏஜென்சியும் (அருணாச்சலப் பிரதேசம்) 1963-ல் நாகலாந்தும்,
1972-ல் மேகாலயா, மிசோரமும் பிரிக்கப்பட்டன.
எல்லைகள்: கிழக்கே
அருணாச் சலப்பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர். மேற்கே மேற்கு வங்கம்,
மேகாலயா, வங்கதேசம். வடக்கே அருணாச்சலப் பிரதேசம், பூடான்.தெற்கே
நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா.
முக்கிய ஆறுகள் : கங்கை, காண்டக், கோஸி, தாமோதர், பஹ்மதி, சுவர்ண ரேகை, துர்காவதி.
முதனிலைத் துறைகள்

மக்கள் 69% பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். விவசாயத்தில் தேயிலை மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. உலகப் பிரசித்தி பெற்றது.

அரிசி, சணல், பருத்தி, எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

உலக தேயிலை உற்பத்தியில் 15 சதவீத உற்பத்தி செய்வதோடு, இந்திய தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. (55%)

உலகிலேயே அதிக மழை பெறும் இடம் ஆகும். (178 cm to 305 cm).

அஸ்ஸாம் மாநிலம் 'இந்தியாவின் தேயிலைத் தோட்டம்' என சிறப்பிக்கப்படுகிறது.

தங்க நிறமான 'முகா' பட்டு உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் நிலைத் துறைகள்

(Camellia Assomics) அஸ்ஸாம் தேயிலை உலகத் தேநீர் வரிசையில் தனித்துவம் பெறுகிறது. அஸ்ஸாம் பள்ளத்தாக்கில் மட்டுமே கிடைக்கிறது.
மூன்றாம் நிலைத் துறைகள்

முக்கிய நகரம் : கௌகாத்தி, நௌவ் காங்க், திஸ்பூர்.

விமான நிலையம் : கௌகாத்தி, திப்ருகர், திஸ்பூர், ஜோர்ஹட், லக்கிம்பூர், சில்ச்சார்.

5 தேசியப் பூங்காக்கள், 11 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

காஸிரங்கா தேசியப் பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கும், மனாஸ் பெங்கால் புலிக்கும் பிரசித்தி பெற்றவை.

பிஹு நடனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
குஜராத்
இந்தியாவின்
நீளமான கடற் கரை கொண்ட மாநிலம் இது. மொத்த கடற்கரையின் நீளம் 1,600 கி.மீ.
இந்த மாநிலம், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்ளிட்ட
பெருந்தலைவர்கள் பிறந்த பூமி, இதிகாசங்களின் நாடு.
காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை முதலில் (சபர்மதி ஆசிரமம்) இம்மாநிலத்திலிருந்து தொடங்கினார்.
வரலாறு: குப்தர், ராஷ்டிரகூடர்,
சாளுக்கிய ஆட்சிக்கு இந்தப் பகுதி உட்பட்டு இருந்தது. ஆங்கிலேய
ஆட்சியின்போது பம்பாய் மாகா ணத்துடன் இணைந்து இருந்தது. சுதந்திரத்துக்குப்
பிறகு, மொழி வாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது 1960-ம் ஆண்டில் சவுராஷ்டிரம்,
கட்ச் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்த்து குஜராத் உருவாக்கப்பட்டது.
எல்லைகள்: வட கிழக்கில் பாகிஸ்தான், வட மேற்கில் ராஜஸ் தான், தெற்கில் மகாராஷ்டிரா, கிழக்கில் அரபிக்கடல், மேற்கில் மத்தியப்பிரதேசம்.
முக்கிய ஆறுகள்: நர்மதை, தபதி, பனாஸ், மாஹி, சபர்மதி, சரஸ்வதி, பாதர், டாமன்.
முதனிலைத் துறைகள்

பருத்தி, நிலக்கடலை, கரும்பு போன்றவை அதிகம் விளைகின்றன.

பால் பொருட்கள், சிமென்ட், பெட்ரோல் போன்ற தொழில் துறைகளில் சிறந்து விளங்குகிறது.

வைரம் வெட்டி மெருகூட்டுவது இம்மாநிலத்தில் மிக முக்கியத் தொழிலாகும்.

இந்தியாவில் மிக அதிக உப்பு (60%) உற்பத்தி செய்யும் மாநிலம்.
இரண்டாம் நிலைத் துறைகள்

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் மையங்களுள் ஒன்று குஜராத்.

உலகின் மிக வேகமாக வளர்ச்சி பெற்றுள்ள தொழில் நகரங்களில் ஒன்றாக அகமதாபாத் விளங்குகிறது.

சூரத், அகமதாபாத் மர வேலைப்பாடுகள் புகழ்பெற்றவை.

ஜம் நகரில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.

அலங் பகுதியில் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் தளம் உள்ளது.

இயற்கையான முறையில் சாயமேற்றும் கலையான பத்தினி மிகவும் புகழ்பெற்றது.
மூன்றாம் நிலைத் துறைகள்

முக்கிய நகரங்கள் அகமதாபாத், போர்பந்தர், கண்ட்லா, துவாரகை, ராஜ்கோட், சூரத், திஸா.

கண்ட்லா நகரம் மிகப்பெரிய துறைமுகம். இதுதவிர 40 சிறிய துறைமுகங்கள் உள்ளன.

முக்கிய
இடம் : மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தர், சபர்மதி ஆசிரமம், கிக்காடு,
சூரத், சோமநாதபுரம் கோயில், மொதேராவில் உள்ள சூரியர் கோயில்.

விமான நிலையம்: அகமதாபாத், வடோதரா, பாவ் நகர், பந்தர், புஜ், ஜாம் நகர், கண்ட்லா, கேஷோத், போர்பந்தர், ராஜ்கோட், சூரத், திஸா.

தாண்டியா, கர்பா போன்ற நடனங்கள் புகழ் பெற்றவை.

விழாக்கள்: நவராத்திரி, ஹோலி, தீபாவளி, ரக்ஷாபந்தன், ஜென்மாஷ்டமி.

நவராத்திரி வேளையில் நிகழ்த்தப்படும் கர்பா நடனம் மிகவும் புகழ் வாய்ந்தது.
பீகார்
வரலாறு: பழங்காலத்தில்
பீகார் மாநிலம் மகதம் என்று அழைக்கப் பட்டது. சமஸ்கிருதம் மற்றும் பாலி
மொழி வார்த்தையில் இருந்து பீகார் என்ற சொல் தோன்றியது. இதற்கு
புத்தவிகாரங்கள் நிறைந்த நாடு என்று பொருள். 1764-ல் நடந்த பக்சர்
போருக்குப் பிறகு, இது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது.
1912-ம் ஆண்டு வரை இது வங்க மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதன்
பிறகுதான் பீகார், ஒடிசா என பிரிக்கப்பட்டன. மாநில எல்லை மறு
சீரமைப்பின்போது 1956-ல் பீகார் மாநிலம் உருவாக்கப் பட்டது. 2000-ம்
ஆண்டில் பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்கண்ட் என்ற புதிய மாநிலம்
பிரிக்கப்பட்டது.

சமண, பௌத்தர்களின் புண்ணிய பூமி. ஆயிரம் ஆண்டுகள் கல்வி, கலாசாரத்தின் மையமாக விளங்கிய பூமி.

புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடம்.

காந்தி தனது முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை துவங்கிய இடம் சம்பாரன் இம்மாநிலத்தில் உள்ளது.

கோஸி நதி பீகாரின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
எல்லைகள்: வடக்கில் நேபாளம், தெற்கில் ஜார்கண்ட், கிழக்கில் மேற்கு வங்காளம், மேற்கே உத்தரப் பிரதேசம் ஆகியவை இம்மாநிலத் தின் எல்லைகள்.
முக்கிய ஆறுகள் : கங்கை, காண்டக், கோஸி, தாமோதர், பஹ்மதி, சுவர்ண ரேகை, துர்காவதி.
முதனிலைத் துறைகள்

அரிசி, கோதுமை, சோளம், ராகி, பருப்பு வகைகள் போன்றவை முக்கிய உணவுப் பயிர்கள்.

நாட்டின் மொத்த லீச்சிப் பழ உற்பத்தியில் 65% பீகாரிலிருந்தே கிடைக்கிறது.
இரண்டாம் நிலைத் துறைகள்

அரிசி, கோதுமை, சோளம், ராகி, பருப்பு வகைகள் போன்றவை முக்கிய உணவுப் பயிர்கள்.
மூன்றாம் நிலைத் துறைகள்

சேவைத் துறை 55% வருமானத்தைப் பெற்றுத் தருகிறது.

முக்கிய நகரங்கள் : பாட்னா, கபா, பகல்பூர், பூர்ணிபா, முஸாஃபர் பூர்.

பிஸ்மில்லா
கான், எழுத்தாளர்கள் ஷிவ் புஜன் சஹாப், ராம் பிரிக்ஷா பேனிபுரி,
பனிஷ்வர்நாத் வேணு, கோபாலசிங்போன்றவர்கள் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

விமான நிலையம் : பாட்னா.

சுற்றுலா தலங்கள் : புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், புத்த கயா, இந்துக்களின் புண்ணியத் தலம் கபா, பாட்னா, வைசாலி, பாவாபுரி.

கார்த்திகை
மாதம் நடைபெறும் சாத் பூஜை (Chkatth). சாமசக்கேவ், மகாசிவராத்திரி,
மகாவீர் ஜெயந்தி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முக்கிய விழாக்கள் : சாத் பூஜை, சமா சாக்வா, ராம நவமி.

கங்கை
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலம் (5.575 KM)
இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.

சாவூ, கர்மா, ஜாத்ரா போன்ற நடனங்கள் சிறப்பானவை.
No comments:
Post a Comment