Friday, 24 January 2014

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

* தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து -  352

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

* தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

* 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

* ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து -  356

*முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

* முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

* நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து-  360

* நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

* நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

* நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

* 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்

* நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

* நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

* நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

* நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

* நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

* முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

* முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்

* பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்

* பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ

* நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.


தேர்தல் ஆணையம்

* தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

* தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் 324

* தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

* தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

* தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து  324 (5)

* தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

* தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

* ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

* தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

* புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

* முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.

* கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு

* திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்

* திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்

* திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு

* தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

* தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

* ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு

* தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்

* ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள

* தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்.

* அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்.

* 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்

* இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

* ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.

நேதாஜி


சர்வதேசப் போர்க் குற்றவாளியாக நேதாஜி,,, இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின் போது காங்கிரஸ் செய்த துரோக சதி !!!

“நேதாஜி பயணம் செய்த விமானம் மதியம் 12.45 மணிக்கு மஞ்சூரியாவை விட்டுப் புறப்படும்போது, எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானதில் நேதாஜி உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள். அவரது உதவியாளர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினார்கள்” என்று 1945 ஆகஸ்ட் 22-ல் ஜப்பான் வானொலி சேதி சொன்னது. நேதாஜி அபிமானிகள் இந்தச் செய்தியை நம்பவில்லை. காரணம், அதற்கு முன்பும் பலமுறை அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருக்கின்றன.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நேதாஜிக்கும் நெருக்கம் உண்டு. நேதாஜி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, தேவர் அரசியல் கைதியாக ஆந்திர மாநிலம் அமராவதி சிறையில் இருந்தார். அங்கிருந்தபடியே, “விமான விபத்து ஏதும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட நாடகம்” என்று அறிக்கை கொடுத்தார். ஆனால், விடுதலையான பிறகு, இரண்டு ஆண்டுகள் நேதாஜியைப் பற்றி எதுவும் பேசவில்லை தேவர். 1949 ஜனவரி 23-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய தேவர், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது” என்று உறுதிபட அறிவித்தார். இந்த நிலையில், 1950-ல் தேவரும் தலைமறைவானார். அவர் எங்கே போனார் என்ற விவரம் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், ஓராண்டு கழித்து, மீசையை மழித்துக்கொண்டு பாகவதர் கிராப்பில் வித்தியாசமான தோற்றத்துடன் மீண்டும் வெளியுலகுக்கு வருகிறார்.

1951-ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில், “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை நான் சந்தித்துவிட்டு வந்தேன்” என்று மீண்டும் அறிவித்தார் தேவர். நான்கு ஆண்டுகள் கழித்து, பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேவர், “நம்முடைய நேதாஜி இறக்கவில்லை. இந்தியா, சீனா, பர்மா ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் சுஜ்ஜோ என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அதற்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கிறார் நேதாஜி. அங்கே ‘ஆசிய சுதந்திர சேனா’அமைத்து, போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவில் ராணுவ ரீதியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். இவை அனைத்தும் பிரதமர் நேருவுக்கும் அவரது சகோதரியும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும். தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் மௌனம் காக்கிறார்கள்.

விமான விபத்தே நடக்கவில்லை - தாய்வான்

1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் எம்.கே. முகர்ஜி என்பவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்கள். விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் தாய்வான் நாட்டு அரசிடம், 1945 பிப்ரவரியிலிருந்து டிசம்பர் மாதம் வரை நடந்த விமான விபத்துகள்பற்றிய விவரங்களைக் கேட்டது முகர்ஜி ஆணையம். அதற்கு, ‘அந்தக் காலகட்டத்தில் எந்த விமான விபத்தும் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை’ என அங்கிருந்து வந்த அறிக்கையால் மேலும் சர்ச்சையானது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் நாடாளுமன்றம் வராமலேயே அறிக்கை படுத்துக்கொண்டது. இதற்கிடையில், 1964-ல் நேரு இறந்தபோது, அவருக்கு நேதாஜி அஞ்சலி செலுத்த வந்ததாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகும், நேதாஜி ரஷ்யாவில் இருக்கிறார், மத்தியப் பிரதேசம் சவுல்மாரி ஆசிரமத்தில் கும்னாமி பாபாவாக இருந்த துறவிதான் நேதாஜி என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

சர்வதேசப் போர்க்குற்றவாளியாக நேதாஜி

இவை எதுவுமே நம்பும்படியாக இல்லை என்று சொல்லும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர்கள், ‘‘இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின்போது நேதாஜி சர்வதேசப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட நேதாஜி, அங்கேயே சிறை வைக்கப்பட்டார். அவர் மீதிருந்த நல்லெண்ணத்தால் கூட அவரை ஸ்டாலின் பிரிட்டிஷ் காரர்களிடம் ஒப்படைக்காமல் இருந்திருக்கலாம். இது சம்பந்தமான 33 கோப்புகளை ரஷ்ய அரசாங்கம் இந்திய அரசிடம் ஒப்படைத்திருக்கிறது. அதில் உள்ள விவரங்களை வெளியிட மறுக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்கள்.

அந்த 33 கோப்புகளில் இருப்பது என்ன? போராடும் நேதாஜியின் உறவுகள்

நேதாஜி பற்றிய ரகசியக் கோப்புகளை வெளியிட உதவுமாறு நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் போஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் ஒரு ஆண்டுக்கு முன்பே கோரிக்கை மனு கொடுத்தார். ‘‘தாத்தா நேதாஜி போஸ் தொடர்பாக ரஷ்யா தங்களிடம் அளித்த 33 கோப்புகள் பத்திரமாக இருப்பதாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட ஒரு நபருக்குப் பதில் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. அதை வெளியிட்டு, தாத்தா பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்காகத் தான் மம்தாவின் உதவியை நாடினோம். ஆனாலும், இதுவரை எங்களது கோரிக்கை எடுபடவில்லை. இனியாவது, தாத்தா சம்பந்தமாக மத்திய அரசும் உளவு அமைப்புகளும் தங்கள் வசம் உள்ள ரகசிய விவரங்களை உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்’’ என்கிறார் சந்திரகுமார் போஸ்.

அரசியலமைப்பு

1. 36வது அரசியலமைப்புத் திருத்தம் சிக்கிம் மாநிலத்தை எத்தனையாவது மாநிலமாக மாற்றியது - 22வது மாநிலமாக
2. நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்பின் மீது பாராளுமன்றம் சட்டமியற்ற வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 250
3. அரசியலமைப்பில் 63வது ஷரத்து குறிப்பிடுவது - நகர்பாலிகா
4. பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல் என்பது எந்தப் பட்டியலில் உள்ள தலைப்பாகும் - பொதுப் பட்டியல்
5. குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டத்தின் கால வீச்சு - 6 வாரங்கள்
6. பாராளுமன்றத்தின் இரு சபைகளில் அரசியலமைப்பு திருத்த மசோதாவில் முரண்பாடு ஏற்பட்டால் எந்த சபைக்கு அதிகாரம் அதிகமாக உள்ளது - இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது.
7. உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வளவு காலத்திற்குள் உறுப்பினராக வேண்டும் - 6 மாதங்களுக்குள்
8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை - 3
9. இந்திய அரசியலமைப்பு 395 ஷரத்துக்களைக் கொண்டுள்ளது.
10. புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950

11. அரசியலமைப்பு இந்தியாவை - மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.
12. முகவுரையைத் திருத்திய அரசியலமைப்பின் திருத்தம் - 42வது திருத்தம்.
13. இந்திய குடியரசுத் தலைவரே அட்டர்னி ஜெனரலை நியமிக்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 76
14. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷர்தது 320
15. இராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் திராப்பட நடிகை - நர்கீஸ் தத்
16. அதிகாரப் பட்டியல்களில் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது - மத்திய அரசு வசம்
17. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு அலுவலரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்.
18. மதசார்பின்மை என்பது குறிப்பது - எல்லா மதமும் சமம்
19. பத்திரிக்கைச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
20. பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராகவும் பேசவும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்ற இவர் பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாது. அவர் அட்டர்னி ஜெனரல்
21. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம்
22. குடியரசுத் தலைவர் இதுவரை மூன்று முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார்.
23. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம்
24. பாராளுமன்றத்தில் ஒரு சபையில் தலைமை வகித்தாலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாதவர் - துணை குடியரசுத் தலைவர்
25. மக்களவையில் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவது - நிதியமைச்சர்

26. பாராளுமன்ற அரசாங்க முறையில் யார் கேபினெட் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது - பிரதமர்
27. இந்தியாவில் பொதுநல அரசை நிறுவ மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழிகாட்டும் நன்னெறிக் கோட்பாடுகள் - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
28. பாராளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் - 30 உறுப்பினர்கள்
29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கத் தேவைப்படுவது - அரசியலமைப்பு திருத்தம்
30. மக்களவையின் தலைமைச் செயலகம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழே இயங்குகிறது - சபாநாயகர்
31. மரணம், இராஜிநாமா, பதவி நீக்கம் ஆகியவை காரணமாக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த நேரிட்டால் அப்பதவி காலியானதிலிருந்து எத்தனை மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - 6 மாதங்கள்
32. குடியரசுத் தலைவருக்கெதிராக குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன் எத்தனை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் - 14 நாட்கள்
33. இந்தியாவில் உள்ள அரசாங்க வகை - பாராளுமன்ற அரசாங்கம்
34. மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக அங்கத்தினர்களாக இருக்க வேண்டியது - பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில்
35. மக்களவைக்கு நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியர்கள் - இருவர்
36. இந்திய அரசியல் நிர்ணய சபை - காபினெட் மிஷன் திட்டம் மூலம் தோற்றுவிக்கப்பட்டது.
37. இந்தியாவில் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952
38. இந்தியா குடியரசாக மாறிய ஆண்டு - 1950
39. மக்களவையி்ன் சபாநாயகரை பதவி நீக்கம் செய்வது - மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானம் மூலமாக
40. மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகிறது.
41. ஒரு மசோதா மீதான முரண்பாடு குறித்த பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்
42. இந்திய அரசிலமைப்பை உருவாக்கியது - இந்திய அரசியல் நிர்ணயசபை
43. ஒரு சபையின் உறுப்பினராக அல்லதா ஒருவர் அதன் தலைவராகப் பணியாற்றுகிறார். அவர் - துணைக் குடியரசுத் தலைவர்
44. சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருப்பது - பாராளுமன்றம்
45. இந்திய குடியரசுத் தலைவர் பெயரளவில் தலைவர்
46. மத்திய அமைச்சரவை பொறுப்பாக இருப்பது - லோக்சபைக்கு
47. குடியரசுத் தலைவர் தம்க்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும் - அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில்
48. ஆசியராக இருந்து பின்னர் குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர் - டாக்டர். இராதாகிறுஷ்ணன்
49. மக்களவைப் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் - பிரதமர்
50. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த வழக்குகளில் முடிவெடுப்பது - உச்சநீதிமன்றம்

51. அமைச்சரவை யாருக்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாக உள்லது - மக்களவைக்கு
52. இந்திய பாராளுமன்றத்தில் அடங்குவது - குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
53. குடியரசுத்தலைவரின் ஊதியம் வருமான வரிக்கு உட்படாதது.
54. ஒரு மசோதா நிதி மசோதாவா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் பெற்றவர் - சபாநாயகர்
55. இந்திய அரசியலமைப்பில் பொதுநலக் கோட்பாடு எதில் பிரதிபலிக்கிறது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
56. குடியரசுத் தலைவர் ஒரு சாதாரண மசோதாவை மீண்டும் சபைக்கு எத்தனை முறை திருப்பி அனுப்பலாம் - ஒரு முறை
57. புதிய மாநிலத்தை உருவாக்கத் தேவைப்படும் பெரும்பான்மை - பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை
58. இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு ஏனெனில் அதிகாரப் பிரிவினை உள்ளது.
59. இராஜ்யசபை பண மசோதாவைப் பொறுத்தவரை காலதாமதம் செய்யக்கூடிய கால அவகாசம் - 14 நாட்கள்
60. இராஜ்யசபையில் அதிக இடங்களைப் பெற்றுள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
61.. இரட்டைக் குடியுரிமை முறை கொண்ட நாடுகளுக்கு உதாரணம் - அமெரிக்கா, சுவிட்சர்லாந்து
62. வாக்குரிமை பெற நிறைவடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது - 18
63. நீதி மறுபரிசீலனை என்பது - சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது
64. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது - அரசியல் சமத்துவம்
65. நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது - சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது
66. அமைச்சரவை கூட்டாக - பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது.
67. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலாக பிரிக்கப்பட்ட மாநிலம் - பம்பாய் (பம்பாய் மாகாணம் மகாராஷ்ட்ரா + குஜராத் என்று பிரிக்கப்பட்டது)
68. மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1969
69. ஆந்திர மாநிலம் முதல் முதலாக மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - அக்டோபர் 1, 1953
70. இந்தியாவின் 25வது மாநிலம் - கோவா
71. இந்தியாவிற்கு கிரிப்ஸ் குழு வருகை தந்த ஆண்டு - 1942
72. இந்தியாவில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாநிலம் - உத்திரபிரதேசம்
73. இந்திய அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சம் - கூட்டு சேராமை
74. நவீன இந்தியாவின் சிற்பி - ஜவகர்லால் நேரு
75. காந்தி-இர்வின் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு - 1931

76. அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு உரிமைகளை உயர்நீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து - 226
77. இந்தியா பின்பற்ரும் ஆட்சி முறை - பாராளுமன்ற மக்களாட்சி முறை
78. மறைமுக மக்களாட்சி முறையில் முக்கியப் பங்கு வகிப்பவை - அரசியல் கட்சிகள்
79. அரசாங்கத்தில் ஆளும் கட்சியைக் கண்காணிக்கும் கட்சி - எதிர்க்கட்சி
80. திட்டமிடுதல் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப் பட்டியல்
81. மின்சாரம் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப் பட்டியல்
82. மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை எந்த பட்டியலில் உள்ளது - பொதுப்பட்டியல்
83. காடுகள் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - பொதுப்பட்டியல்
84. காவல் துறை என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - மாநிலப் பட்டியல்
85. விவசாயம் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது - மாநிலப் பட்டியல்
86. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 368
87. அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு ஆணைகளை உச்சநீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 32
88. தேரதல் ஆணையம் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 324
89. இந்தியாவில் அடிப்படை உரிமைகளை யார் தற்காலிகமாக இரத்து செய்ய இயலும் - குடியரசுத் தலைவர்
90. 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1976
91. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை இணைத்த திருத்தம் - 42வது திருத்தம்
92. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950
93. இந்தியாவின் இறைமை மிக்கவர் - மக்கள்
99. மத சார்பின்மையைப் பின்பற்றும் நாடு - இந்தியா
100. இந்தியாவின் ஆட்சி மொழி - இந்தியா

அலைபேசி

கண்டுபிடிப்பு
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பான தொலைபேசிக்குப் பின்னர் 1906-ஆம் ஆண்டில் சார்லஸ் ஈ அல்டன் என்பவர் முதன் முதலில் வெஸ்ட் பாக்கெட் எனும் அலைபேசி சாதனத்தைக் கண்டுபிடித்தார். அதுவே அப்போதைய அலைபேசி வளர்ச்சியின் ஆரம்பமாய் அமைந்தது. இருப்பினும் சார்லஸ் ஈ அல்டனினால் பெரிய அளவில் அவருடைய கண்டு
 பிடிப்பை வளர்ச்சி பெறச் செய்ய முடியவில்லை.
அதிக எடை
 இதன் பின்னர் 1946-ஆம் ஆண்டளவில் சிக்காகோவிலிருந்து பெல் சிஸ்டம் தொலைபேசி ஊடாக நடமாடும் ஒரு அலைபேசியில் இருந்து பரிசோதனை அழைப்பு, அதுவும் காரிலிருந்து ஏற்படுத்தப்பட்டது. அப்போது பயன்படுத்தப்பட்ட அலைபேசியின் எடை 36 கி.கி. ஆகும். கணினி போலவே அலைபேசியும் பெரியனவாக இருந்தே சிறியதாகியிருக்கின்றன.
 1956-ஆம் ஆண்டு நதஅ எரிக்ஸன் ஙபஅ என்ற மிகப்பெரிய வடிவிலான அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் எடை மிக அதிகமாக இருந்திருக்கிறது. இந்த போன் முதன்முதலில் ஸ்வீடன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டபொழுது 1956 முதல் 1967 வரை வெறும் 125 பயனாளர்கள்தான் இருந்திருக்கிறார்கள்.
கையடக்க அலைபேசி
 அதன் பின்னர் இதன் ஈர்ப்பு மிக மெதுவாக அதிகரிக்க 1973-ஆம் ஆண்டில் ஜோன் எப் மிட்சல் என்பரால் கையடக்கமான முதலாவது அலைபேசி தயாரிக்கப்பட்டது. அப்போதிருந்துதான் அலைபேசிகளின் பரிணாம வளர்ச்சி ஆரம்பமானது.
 அந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக 1973-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனத்தின் ஆய்வுக் கூடத்திலிருந்த ஜோயலுக்கு கூப்பர் என்பவர் முதலாவது அழைப்பினை ஏற்படுத்தினார். அதுவே ஏனையோரும் அலைபேசியின் அழைப்புக்குச் செவி மடுக்க வைக்க போடப்பட்ட அடித்தளமாக அமைந்தது எனலாம். இந்த அலைபேசி அன்று அமெரிக்க டாலர் 3995-க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
விற்பனை
 முதன் முதலாக வணிக ரீதியிலான அலைபேசிகள் என்.ரீ.ரீ எனும் ஜப்பான் நிறுவனத்தால்
 1979-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து பல நிறுவனங்கள் அலைபேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.
 1983-ஆம் ஆண்டில் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதலாக மோட்டோரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் செங்கல் அளவில் அலைபேசியை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்திருக்கிறார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாகவே அலைபேசி இருந்து வந்துள்ளது.
அலைபேசி நிறுவனங்கள்
 செங்கல் போன்ற வடிவிலான அலைபேசியில் இருந்து, மோட்டோரோலா நிறுவனத்தால்தான் சற்றே சிறிய வடிவிலான அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் 1989-ஆம் ஆண்டில் மாறுதல் பெற்று 1994-ஆம் ஆண்டில் மீண்டும் மோட்டோரோலா நிறுவனத்தால் வடிவத்திலும், தொழில்நுட்பத்திலும் மாறுதல் பெற்றிருக்கிறது. ஆனால் 1980-களில் இம்மாதிரியான அலைபேசிகளை "கார் போன்கள்' என அழைத்துள்ளனர்.
 அதைத் தொடர்ந்து 1997-ஆம் ஆண்டில் நோக்கியா அலைபேசி நிறுவனம் அடித்தளம் அமைத்துள்ளது. 2002-ஆம் ஆண்டில் ப்ளாக் பெர்ரி, 2007-களில் ஆப்பிள் ஐபோன் எனத் தொடர்ந்து பல நிறுவனங்கள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு அலைபேசிக்கு நவீன பாதையமைத்து கொண்டு வந்தன. இவைகளே இன்றைய நவீன ஸ்மார்ட் போன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நமது பார்வையில் அலைபேசி
 உலக வரலாற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் பழையனவாய் மாறியே முழுமையான அங்கீகாரத்தினை பெறுகின்றன. அந்த ஆய்வு வரிசையில் அலைபேசிக்குத் தனி இடம் உண்டு. ஏனெனில் அலைபேசிகள் வரவிற்கு ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் பரவலான எதிர்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் அதன் தேவையைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றார்கள்.
 இவ்வாறு அன்று உருவான அலைபேசிகள் இவ்வருட இறுதியில் உலக மக்கள்தொகையை விஞ்சும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வுகளின் முடிவுகளிலிருந்து ஐக்கிய நாடுகளின் தொடர்பாடல்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறுதியாக!
 அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்குத் தகவல்களை எளிமையாகவும், உடனுக்குடன் கொண்டு சேர்க்க மிகவும் அருமையான நவீன தொழில்நுட்பக் கருவியாக இருக்கிறது என்பதே. இன்றைக்கும் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ அசம்பாவிதங்களைத் தடுப்பதற்குப் பயனுள்ள சேவையாக அலைபேசி இருந்து வருகிறது. அதை நாம் எப்படிப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோம் என்பது பயன்படுத்துவோரின் மனநிலையைப் பொறுத்து இருக்கிறது. இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்குக் கிடைத்துள்ள அலைபேசி என்னும் அற்புதமான ஆயுதத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கத்தைச் சரியாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும்.

அறிவுக்கான அரங்கம்

அதிக அளவில் நீராவிப்போக்கு இலைத்துளைகள் மூலமாக நடைபெறுகிறது என்பதை நிரூபிக்கும் சோதனை - மண் ஜாடி சோதனை
*  தாவரத்தின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது எச்செயலினால் - நீராவிப்போக்கு
*  நீராவிப்போக்கின் வகைகளின் எண்ணிக்கை - மூன்று
*  நீராவிப்போக்கு அதிகயளவில் நடைபெறுவது - இலைத் துளை நீராவிப்போக்கில்
*  மிகக் குறைந்த அளவில் நீராவிப்போக்கு நடைபெறுவது - லென்டிசெல் நீராவிப்போக்கு
*  அதிக அளவில் நீராவிப்போக்கு இலைத்துளைகள் மூலமாக நடைபெறுகிறது என்பதை நிரூபிக்கும் சோதனை - மண் ஜாடி சோதனை
*  ஒளிச்சேர்க்கையின் போது உருவாகும் வேதிப்பொருள் - ஸ்டார்ச் (தரசம்)
*  ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்சிஜன்
*  ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி தேவை என்பதை நிரூபிக்கும் சோதனை - கேனாங்கின் ஒளித்திரைச் சோதனை
*  ஒளிச்சேர்க்கைக்கு கார்பன் டை ஆக்சைடு அவசியம் என்பதை நிரூபிக்கும் சோதனை - மோலின் அரை இலைச் சோதனை
*  ஆக்சிஜனை முழுமையாகப் பயன்படுத்தி ஸ்டார்ச்சை முழுமையாக சிதைத்து ஆற்றலைப் பெறும் சுவாசத்தின் பெயர் - காற்றுச் சுவாசம்
*  செல்லின் ஆற்றல் நிலையம் - மைட்டோகாண்டிரியா
*  உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் - டயலின்(அமைலேஸ்)
*  டயலின் என்ற நொதியின் செயல் - ஸ்டார்ச்சின் மீது செயல்பட்டு மால்டோசாக மாற்றுவது
*  சீரண மண்டலத்தின் எப்பகுதியில் புரதத்தின் செரித்தல் துவங்குகிறது - இரைப்பை
*  இரைப்பையில் உணவு தங்கியிருக்கும் நேரம் - சுமார் 4 மணி நேரம்
*  உணவில் உள்ள கொழுப்பை செரிப்பது - கல்லீரல் சுரக்கும் பித்த நீர்
*  புரதம் செரித்தலின் முடிவில் அமினோ அமிலங்களாக மாற்றமடைகிறது.
*  கொழுப்பு செரித்தலின் முடிவில் கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றமடைகிறது.
*  வயிற்றின் மேல்பகுதியின் பெயர் - கார்டியாக்
*  வயிற்றின் கீழ்பகுதியின் பெயர் - பைலோரிக்
*  மாடுகளின் இரைப்பையில் நான்கு அறைகள் உள்ளன.
*  பறவைகளின் முன் கழுத்தில் உள்ள அமைப்பு - தீனிப்பை
*  மனித இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - நான்கு
*  இதயத்தைச் சுற்றியிருக்கும் உறையின் பெயர் - பெரிகார்டியம்
*  இதயத்தின் மேல் அறைகளின் பெயர் - ஆரிக்கிள் (அ) ஏட்ரியம்
*  இதயத்தின் கீழ் அறையின் பெயர் - வெண்ட்ரிக்கிள்
*  சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - தமனி
*  இரத்த ஒட்டத்தினை முதன் முதலில் கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி (1678)
*  இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கான நிறமி - ஹிமோகுளோபின்
*  ஒரு மனிதனின் சராசரி இதயத்துடிப்பு - நிமிடத்திற்கு 70-72
*  இதயத் துடிப்பைக் கண்டறிய உதவும் கருவி - ஸ்டெதஸ்கோப்
*  மீன்களின் இதயம் எத்தனை அறைகளால் ஆனது - இரண்டு
*  இருவாழ்விகளின் இதயம் எத்தனை அறைகளால் ஆனது - மூன்று (தவளை)
*  ஊர்வனவற்றின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது - இரண்டு ஆரிக்கிள் மற்றும் முழுவதுமாக பிரிக்கப்படாத இரண்டு வென்ட்ரிக்கிள்
*  பறவைகளிலும், பாலூட்டிகளிலும் இதயம் எத்தனை அறைகளால் ஆனது - நான்கு
*  புரதத்தின் வளர்சிதை மாற்றத்தினால் உண்டாகும் கழிவுப்பொருள் - நைட்ரஜன் கழிவுப்பொருள்
* சிறுநீரகத்தில் செயல்படும் முக்கிய அலகு நெஃப்ரான்
* நெஃப்ரானில் காணப்படும் இரு பகுதிகள் - மால்பீஜியன் உறை, சிறுநீரக நுண்குழல்
* ஒரு நாளைக்கு வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 முதல் 2 லிட்டர் வரை
* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை
* இலைத்துளையின் இரு மருங்கிலும் காணப்படுவது - காப்புச் செல்கள்
* தண்டில் உள்ள சிறு துளைகளின் பெயர் - லென்டிசெல்
* சூழ்நிலை என்ற சொல்லை உருவாக்கியவர் - ரெய்ட்டர்
* சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் - ஹெக்கல்(1869)
* சூழ்நிலைக் காரணிகளின் இரு வகைகள் - உயிர்க்காரணிகள், உயிரற்ற காரணிகள்
* உயிர்க்காரணிகளி்ன் மூன்று வகைகள் - உற்பத்தியாளர், நுகர்வோர், சிதைப்பவை
* சிதைப்பவைகளுக்கு உதாரணம் பாக்டீரியா, காளான்கள்
* ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - நரி, ஒநாய், பாம்பு
* அனைத்துண்ணிகளுக்கு உதாரணம் - நாய், மனிதன்
* தாவர உண்ணிகளுக்கு உதாரணம் - மான், முயல், பசு

"பொறியாளர்களின் பொறியாளர்' ------ இந்திய நீர்மின் திட்டங்களின் தந்தை

டாக்டர் எம்.விஸ்வேஸ்வரய்யா, மைசூர் மாகாணத்தில் சிக்கவால்புரி எனும் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் 1861-இல் பிறந்தார். தந்தை சீனிவாச சாஸ்திரி. பரம ஏழை. சாப்பாட்டுக்கு வழி செய்வதே கஷ்டமாக இருந்தது. அவ்வளவு கஷ்டத்திலும் விஸ்வேஸ்வரய்யா நன்றாகப் படித்தார். பள்ளி இறுதி வகுப்பில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேறிய அவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அறிவியல் பட்டம் பெற்றார்.
 பூனாவில் ஒரு அறிவியல் கல்லூரியை ஆங்கிலேயர் நடத்தி வந்தனர். அங்கே படித்து பொறியியல் கல்வியில் கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் பெற்றால், அரசின் பொதுப்பணித் துறையில் உடனடி வேலைவாய்ப்பு என்னும் ஒரு விதி இருந்தது. விஸ்வேஸ்வரய்யா ஒவ்வொரு ஆண்டும் முதலாவதாக வந்து நேரடியாக பொதுப்பணித்துறையின் இணைப் பணியாளர் பதவிக்குத் தனது 23-வது வயதில் மும்பையில் பணியிலமர்த்தப்பட்டார்.
 எத்தகைய எண்ணத்திற்கும் உடனடியாக வடிவம் கொடுத்து, அதைக் கட்டடமாகக் கொண்டு வந்து நிறுத்துவதில் அவர் திறமையுள்ளவராக இருந்ததை அதிகாரிகள் அறிந்து கொண்டார்கள்.
 காண்டேஷ் மாகாணத்தில்தான் அவரது திறமைக்கு முதல் சவால் இருந்தது. அங்கே துலியா காட்டாறு அடிக்கடி தனது கொடிய ஆற்றுவெள்ளம் மூலம் சொல்லொண்ணாத் துயரங்களை மக்களுக்குத் தந்தது. ஆங்கிலேயே அதிகாரிகளால் மதயானை என்றழைக்கப்பட்ட அந்த ஆற்றின் உபரி நீரைக் கொண்டு காண்டேஷ் மாகாணம் (3 மாவட்டங்கள்) முழுவதும் குடிநீர் பஞ்சத்தைத் தீர்த்தார் விஸ்வேஸ்வரய்யா.
 இவரைப் "பொறியாளர்களின் பொறியாளர்' என்றும் "இந்திய நீர்மின் திட்டங்களின் தந்தை' என்றும் அழைத்தனர்.
 காண்டேஷ், பூனா, பெங்களூர், மைசூர், பரோடா என்று 42 நகரங்களில் இன்றும் குடிநீர்ப் பஞ்சம் கிடையாது. அதற்குக் காரணம் ஒரே ஒரு மனிதர். அவர்தான் விஸ்வேஸ்ரய்யா.
 சிந்து நதியிலிருந்து நீரை அருகிலிருந்து ஒரு மலையிலிருந்த பெரிய குளத்துக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து குழாய்கள் மூலம் அப்பகுதியின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்த்து வைத்தவரும் இவரே.
 தமது 30-வது வயதில் பாராட்டு மழையில் நனைந்து, அகமகிழ்ந்தார்.
 இவரால் நிறுவப்பட்ட, கிருஷ்ணராஜசாகர் அணை இந்தியாவின் முதல் அணை மட்டுமல்ல முதல் நீர் மின்நிலையமும் கூட. பல ஊர்களுக்கு இன்றும் ஒளியைத் தருகிறது.
 அந்த அணையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அன்றைய பிரதமர் நேரு, "தான் அடுத்த ஜென்மத்தில் விஸ்வேஸ்வரய்யாவாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று கூறிப் புகழாரம் சூட்டினார்.
 1962-ஆம் ஆண்டு விஸ்வேஸ்வரய்யா காலமானார். அவரது பிறந்த நாளை "பொறியியலாளர் தினமாக' நம் நாடு அனுசரித்து வருகிறது.

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார்.

தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன்.

இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

பிறப்பு: தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி ஐயருக்கும் - இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக டிசம்பர்.11.1882 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன், எனினும் சுப்பையா என்று அழைக்கப்பட்டார். அவருடைய 5 வயதில் 1887ஆம் ஆண்டு அவருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார். அதனால் பாரதியார் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

இளமைப் பருவம்: சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்த இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'. அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார். ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனக்கு "ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார்.

திருமண வாழ்க்கை: பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு அதாவது 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி: ‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு: சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு: விடுதலைக்காக வீர தமிழ் முழக்கம் செய்து வந்த பாரதி 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11 ஆம் தேதி, தனது 39 ஆவது வயதில் வீர தமிழனின் நா ஓய்ந்தது. எனினும் அவரின் வீர உரைகளும், பாடல்களும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

பாரதியின் குரு: ஞானகுருவாக சாருநிவேதிதாவையும் (விவேகானந்தரின் சிஷ்யை), அரசியல் குருவாக பாலகங்காதர திலகரையும் ஏற்றுக் கொண்டார். "மகாகவி' என்றும், "தேசியகவி' என்றும் மக்களால் போற்றப்பட்டார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை ""பைந்தமிழ்த்தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த்தேனீ, சிந்துக்குத் தந்தை'' என்று பாராட்டி மகிழ்ந்தார். பாரதியார் தன்னுடைய கடமையாக, ""நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக கண்ணனைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

படைப்புகள்:

01. குயில் பாட்டு

02. கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

03. சுயசரிதை

04. தேசிய கீதங்கள்

05. பகவத் கீதை

06. பாரதி அறுபத்தாறு

07. ஞானப் பாடல்கள்

08. தோத்திரப் பாடல்கள்

09. விடுதலைப் பாடல்கள்

10. விநாயகர் நான்மணிமாலை

11. பாரதியார் பகவத் கீதை (பேருரை)

12. பதஞ்சலியோக சூத்திரம்

13. நவதந்திரக்கதைகள்

14. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு

15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)

16. சின்னஞ்சிறு கிளியே

17. ஞான ரதம்

18. பகவத் கீதை

19. சந்திரிகையின் கதை

20. பாஞ்சாலி சபதம்

21. புதிய ஆத்திசூடி

22. பொன் வால் நரி

23. ஆறில் ஒரு பங்கு

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்: பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்டு 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆகஸ்ட் 1905 முதல் - 1906 ஆகஸ்ட் வரை) பணியாற்றினார். இந்தியா என்ற வார இதழில் (மே 1905 முதல் - மார்ச் 1906, செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.

தேசியக் கவி: விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்: பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (ஸ்ரீஹழ்ண்ஸ்ரீஹற்ன்ழ்ங்) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.

பெண்ணுரிமைப் போராளி: தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதி படைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்: தமிழக அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லத்தையும் நினைவு இல்லமாகவும் பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக...

* பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)

* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

* பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

* பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

* பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

* பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

* பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

* பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

* பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

* பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

* பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

* பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.