Wednesday, 19 October 2016

GK

1. துருக்கியர்
கான்ஸ்டாண்டி நோபிளைக்
கைப்பற்றிய ஆண்டு-1453
2. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டை அடைந்த
ஆண்டு-1498
3. அல்புகர்க் கோவவாவைக்
கைப்பற்றுதல்-1510
4. டச்சுக்காரர்கள்
மசூலிப்பட்டினத்தில் வணிக
தலம் நிறுவுதல்-1605
5. சென்னையை ஆங்கிலேயர்
விலைக்கு வாங்குதல்-1639
6. மும்பையை ஆங்கில
கிழக்கிந்திய
வணிகக்குழு பெறுதல்-1661
7. பிரஞ்சு கிழக்கிந்திய
வணிகக்குழு நிறுவுதல்-1664
8. வில்லியம்
கோட்டையை கொல்கத்தாவில்
ஆங்கிலயர் கட்டுதல்-1696
9. ஹைதராபாத் அரசை நிசாம்
உல்முக் நிறுவுதல்-1724
10. மாஹியை பிரஞ்சுக்காரர்
கைப்பற்றுதல்-1725
11. டியுப்ளே பாண்டிச்சேரி ஆளுநர்
ஆதல்-1742
12. முதல் கர்நாடகப் போர்
ஆரம்பம்-1746
13. முதல் கர்நாடகப் போர்
முடிவு-1748
14. இரண்டாம் கர்நாடகப்போர்
முடிவு-1754
15. பாண்டிச்சேரி உடன்படிக்கை-1755
16. இருட்டரைத் துயரச்
சம்பவம்-1756
17. மூன்றாம் கர்நாடகப்போர்
ஆரம்பம்-1756
18. பிளாசிப்போர் நடைபெற்ற
ஆண்டு-1757
19. பக்சார் போர் நடைபெற்ற
ஆண்டு-1764
20. அலகாபாத்
உடன்படிக்கை நடைபெற்ற
ஆண்டு-1765
21. முதல் மைசூர் போர்
தொடங்கிய ஆண்டு-1767
22. முதல் மராத்திய போர்
நடைபெற்ற ஆண்டு-1772
23. சூரத் உடன்படிக்கை ஏற்பட்ட
ஆண்டு-1775
24. புரந்தர் உடன்படிக்கை-1776
25. சால்பை உடன்படிக்கை-1782
26. மங்கழூர் உடன்படிக்கை-1784
27. வேலூர் புரட்சி-1806
28. சதி ஒழிப்பு-1829
29. முதல்
இப்புப்பாதை மும்மை-
தாணா துவங்கப்பட்ட
ஆண்டு-1853
30. முதல் இந்திய சுதந்திரப்
போர்-1857
31. மவுண்ட்பேட்டன் திட்டம்-1947
32. அமைச்சரவைத் தூதுக்குழு,
இடைக்கால அரசு-1946
33. இரண்டாம் உலகப்போர்
முடிவு-1945
34. கிரிப்ஸ் தூதுக்குழு,
வெள்ளையனே வெளியேறு இயக்கம்-1942
35. ஆகஸ்டு நன்கொடை-1940
36. இரண்டாம் உலகப்போர்-1939
37. இந்திய அரசுச்சட்டம்-1935
38. மூன்றாம்
வட்டமேஜை மாநாடு,
பூனா உடன்படிக்கை-1932
39. காந்தி இர்வின் ஒப்பந்தம்,
இரண்டாம்
வட்டமேஜை மாநாடு-1931
40. முதல் வட்டமேசை மாநாடு,
சட்டமறுப்பு இயக்கம்,
உப்பு சத்தியாகிரகம்-1930
41. லாகூர்
காங்கிரசு மாநாடு-1929
42. சைமன்குழு வருகை-1927
43. சௌரி சௌரா நிகழ்ச்சி-1922
44. ஒத்துழையாமை இயக்கம்-1920
45. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச்
சட்டம், ஜாலியன் வாலாபாக்
படுகொலை, ரௌலட்
சட்டம்-1919
46. முதல் உலகப்போர்
துவக்கம்-1914
47. மிண்டோ மார்லி சீர்திருத்த
சட்டம்-1909
48. முஸ்லீம் லீக் தோற்றம்-1906
49. வங்கப் பிரிவினை-1905
50. இந்திய பல்கலைக்கழகச்
சட்டம்-1904
51. இந்திய தேசிய
காங்கிரசு தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1885
52. இல்பர்ட் மசோதா-1883
53. இந்திய மக்கள்
தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்-1881
54. தொழிற்சாலை சட்டம்-1881
55. வட்டார மொழிகள்
பத்திரிக்கை தடைச்சட்டம்-1878
56. ஆரிய சமாஜம், பிரம்ம
ஞானசபை தொடங்கப்பட்ட
ஆண்டு-1875
57. குழந்தைத் திருமணம்
தடை சட்டம்-1872
58. இந்திய கவுன்சில் சட்டம்-1861
59. விக்டோரியா மகாராணியின்
பேரறிக்கை-1858
60. காஷ்மீர் இந்தியாவுடன்
இணைதல்-1948
61. பூமிதான இயக்கம், முதல்
ஐந்தாண்டுத் திட்டம்-1951
62. பஞ்ச சீலக் கொள்கை-1954
63. தீண்டாமை குற்றச் சட்டம்-1955
64. வரதட்சணைத் தடுப்புச்
சட்டம்-1961
65. இந்தியா-சீனா போர்-1962
66. தாஷ்கண்ட் ஒப்பந்தம்-1966
67. சிம்லா ஒப்பந்தம்-1972
68. சம ஊதியச் சட்டம்-1976
69. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்
சட்டம்-1989
70. சிறுபான்மையினர் தேசிய
ஆணையச் சட்டம்-1992
71. சுவசக்தி திட்டம்-1998
72. கார்கில் போர்-1999
73. W.W ஹண்டர் தலைமையில்
கல்விக்குழு-1882
74. சுயராஜ்யக்
கட்சி தொடங்கப்பட்ட
ஆண்டு-1923
75. பஞ்சாபின் சிங்கம்
என்றழைக்கப்பட்டவர்-
லாலா லஜபதிராய்
76. இந்திய ரிசர்வ்
வங்கி தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1935
77. ஐ.நா சர்வதேச மனித
உரிமைகள் பிரகடனம்
வெளியிடப்பட்ட நாள்-1948
டிசம்பர் 10
78. கி . பி .1025 – ல் மாமூத்
கஜினியால் தாக்கப்பட்ட
புகழ்பெற்ற இந்து ஆலயம்
இருந்த இடம் – சோமநாதபுரம்
79. அண்ணாமலை பல்கலைக்கழகம்
எந்த ஆண்டு நிறுவப்பட்டது?-
1929
80. தெற்காசிய பிராந்திய
நாடுகளின்
கூட்டமைப்பு (SAARC) எந்த
ஆண்டில் ஏற்பட்டது?- 1985
81. வனவிலங்கு தடுப்புச்சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890
82. 1930 உப்பு சக்தியா கிரகம்/
தண்டி யாத்திரை/
சட்டமறுப்பு இயக்கம்,
83. அடையார் அவ்வை இல்லம்
(முத்து லெட்சுமி)
84. 1387 பாமினி அரசு தோற்றம்
85. 1453 துருக்கியர்
கான்டான்னோபிலை கைப்பற்றல்
86. 1487
நன்னம்பிகை முனையை அடைந்தவர்
பார்த்தலோமிய டயஸ்
87. 1764 பிளாசி போர்
88. 1679 ஜெசியா வரி மீண்டும்
(அவுரங்கசீப் )
89. 1793 நிலையான
நிலவரி திட்டம்
90. 1781 பிரான்சு லேமண்ட்
தந்தியை கண்டுபிடித்தார்
91. 1824 சென்னை மகாணத்தில்
தாமஸ் மன்றோ ஆளுநராக
பதிவி , சரஸ்வதி மகால்
92. 1829 சதி ஒழிப்பு
93. 1833 மகல்வாரி திட்டம்
94. 1835 மருத்துக்கல்லூரி 1854
பல்கலைக்கழகமாக மாற்றம்
95. ஆங்கில
ஆட்சி மொழி, .அதிகாரம் 3
பட்டியலாக பிரித்தது
96. 1853 முதல் ரயில்
பாதை மும்மை- தானே (34
மைல்)
97. 1854 சார்லஸ் உட் அறிக்கை
98. 1856 சென்னை – அரக்கோணம்
ரயில் பாதை (2nd)
99. 1856 விதவை மறுமணம் சட்டம்
100. 1856 The General service Enlistment
Act
101. 1857 தமிழகத்தில் பெரும்
பகுதி ரயத்துவாரி அமுல்
102. 1857
தந்தி (டல்ஹௌசி பிரபு)அறிமுகம்
103. 1867 சைக்கிள் கண்டுபிடிப்பு
104. 1875
இந்தியா வானிலை மையம்,
தலைமை புனே
105. 1882 ஹண்டர் குழு
106. 1882 வந்தே மாதரம்
வெளியிடு
107. 1883 ஏரி புதுபிக்கும்
திட்டம் ,புதிய
பன்ணைமுறை
108. 1891 சென்னை சட்ட கல்லூரி
109. 1897 இராமகிருஷ்ண இயக்கம்
தொடக்கம்
110. 1911 டெல்லி தலைநகர் மாற்றம்
(ஹார்டிஞ்சு பிரபு)
111. வாஞ்சிநாதன் ஆஷ்
துறையை சுட்டு கொலை
112. 1914-18 முதல் உலக போர்
113. 1915
இந்தியா பாதுகாப்பு சட்டம்
இயற்றப்பட்டது
114. 1916 தென்னிந்திய
விடுதலை சங்கம்
115. 1917 நிதிகட்சி அன்னிபெசன்ட்
கல்கத்தா காங்கிரஸ்
மாநாடு முதல் பெண்
116. 1919 இரட்டை ஆட்சி ,உலக
நாடுகள் கழகம் (League of
National)
117. 1920
நிதிகட்சி சுப்ராயலு ஆட்டி அமைத்தல்
118. முஸ்ஸிம் அலிகார்
பல்கலைக்கழகம்
119. 1921 சாந்திநிகேதனில்
விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
(தாகூர்)
120. சென்னைக்கு வேல்ஸ் இளவரசர்
வருகை
121. Population Higher Rate
122. 1922 உடல்
ஊனமுற்றொருக்காக
இயக்குநரகம்
123. 1925 பெரியார்
குடியரசு பத்திரிக்கை
124. 1924 வைக்கம் போராட்டம்
வெற்றி(பெரியார்)
125. இந்தியாவின் ஒலிம்பிக் சங்கம்
126. 1926 தொழிற் சங்கசட்டம்
127. 1929
அண்ணமலை பல்கலைக்கழகம்,நிலவள
வங்கி
128. இந்திய
அரசி தேர்வாணையக்குழு
129. 1930 தேவதாசி ஒழிப்பு சட்டம்
130. 1931 சென்னையில் முதல்
பேசும் படம்,
131. கடைசி ஜாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பு
132. 1934 மேட்டூர் திட்டம்
133. 1935 மாகாண ஆட்சி , இந்திய
சுரங்கச் சட்டம்
134. 1935- 45 2 ம் உலக போர்
135. 1936 இந்திய
வானொலி நிலையம்
136. 1937 வார்தா கல்வி திட்டம்
(காந்தி)
137. 1938 ல் சென்னையில் நடந்த
பெண்கள் மாநாட்டில்,
பெரியார் பட்டம் வழங்கள்
138. 1943 தமிழ் இசை சங்கம்
139. 1944 சார்ஜன் கல்வி திட்டம்
140. 1948 இந்திய தொழிற்சங்கம்
சட்டம்,2. ஐ.நாடு மனித
உரிமை பிரகடனம்
141. 1948 Dr, Radha krishnan
கல்விகுழு அதன்படி 1949 ல்
மாற்றம்.
142. மின்பகிர்வு திட்டம்
143. 1940 தனி நபர்
சக்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர்
ஆச்சாரியா வினோபா பாவே
144. 1951 தோட்ட தொழிலளார்
சட்டம்
145. பூமிதான இயக்கம் (ஆசார்ய
வினோவாபாவே) ,
சர்வோதயாஇயக்கம்
146. 1952 மே-13 முதல் நாடளுமன்ற
கூட்டட்த்தொடர்
147. 1953 லெட்சுமனன்
சுவாமி மற்றோர்
கல்விக்குழு (கற்றலும்
செயலும்)
148. மாநில சீரமைப்பு தலைவர்
பாஸல் அலி
149. 1954 திருமணச் சட்டம்
150. தமிழ்நாடு சமூக நலவாரியம்
151. 1955 இந்து திருமண சட்டம் ,
பான்டுங் மாநாடு,
152. ஊனமுற்றோர் சட்டம்,
திண்டாமை சட்டம் (1983 ல்
திருத்தப்பட்டது)
153. 1956
இந்து வாரிசு உரிமை சட்டம்,
இந்து இளவர் மற்றும்
காப்புரிமை சட்டம்
154. 1957 தேசிய பண்டக கழகம்
155. தமிழ்நாடு மின்சார வாரியம்
156. 1958 தேசிய
மலேரியா ஒழிப்பபு திட்டம்
157. NAFED National Agriculturar Co-
Operation marketing Federation
158. 1960 பாரத
மின்னனு தொழிற்சாலை திருச்சி
159. 1960 சிறார் நல வாரியம்
160. 1961 பெண்கள் சிசுவதை சட்டம்
161. அனிசேரா மாநாடு(பெல்கிரேடு)
162. மகப்பேறு சலுகை திட்டம்
163. வரதட்சனை சட்டம்(1984 T.N ல்
திருத்தப்பட்டது)
164. 1961-62 மாநிலங்களில் நில
உச்ச வரம்பு சட்டம்
165. 1962 காங்கிரஸ் மாநில
ஆதிக்கம் இழந்தது
166. 1963 திராவிட
நாடு கருத்தினைஅண்ணா வெளியிட்டார்
167. இயல் ,இசை நாடகம்
க்கு கலைமாமனி விருது வழங்கிவருகிறது
168. 1964
பொதுவுடமை கட்சி பிளவு
169. கோத்தாரி தேசிய
கல்சிக்குழு(ஒரேமாதிரி கல்விதிட்டம்)
170. பள்ளி மாணவர்கள் நலத்திட்டம்
171. 1965 பசுமைபுரட்சி திட்டம்
172. IFC Iindian Food Corporation
173. 1966 Seed Act 1988 the New Policy
of Seed Development
174. 1967 முதல் ராக்கெட்
ரோகினி , திரைபடம் அலிம்
அரா
175. 1970 தமிழ்
பயிற்று மொழி கல்லூரிகளில்
176. 1971 அமெரிக்கா மனித
உரிமை மசோதா நிறைவேற்றல்
177. வரதச்சனை ஒழிப்பு சட்டம்
178. மருத்துவரிதியாக
கரு கலைப்பு சட்டம்
179. Agriculture Price Commission
180. மிசா சட்டம்
181. 1972 வ.உ.சி சிதம்பரம்
நினைவு தாபல்
தலைவெளியீடு, பின்
கோடு அறிமுகம்
182. MPEDA Marine Products Exports
Development Authority
183. 1973 கூட்ருறவு கொள்கை
184. 1974 முதல்
அணுகுண்டு சோதனை
185. 1975 முதல் வின்கலம்
அர்யப்பட்டா
186. 1976 சம ஊதிய சட்டம், கான்பூர்
செயற்கை உடல் உறுப்புகல்
தாயரிப்பு நிறுவனம்
187. 1977 குடுப்ப நலத்திட்ட
வழிமுறைகள் பற்றிய
சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia
Apporoach)
188. 1978 ஐ.நாடு பெண்கள்
ஆண்டாக அறிவிப்பு
189. முதல்
சோதனை குழந்தை பிறப்பு
190. சிப்கோ இயக்கம்
191. 1979
ஐ.நாடு குழந்தைகள்ஆண்டாக
அறிவிப்பு
192. 1980 மாவட்ட தொழில் மையம்
193. India Forest Strick Law
194. 1983 கிரமபுற மக்களின்
நலச்சங்கம் (WARD)
195. 1984 Dec 4 கோபால்
விஷவாயு கசிவு (மெத்தில்
ஐசோசயனேட்)
196. 1985 இந்திரா அவாஸ்
யோசனா
197. ஏர் இந்தியா வமானம்
கனிஷ்கா விபத்து
198. 1986 புதிய கல்விக்
கொள்கை , செர்னோபில்
ரஷ்யா அணூ உலை கசிவு
199. 1989 ஜவகர்
வேலைவாய்ப்பு திட்டம்,
முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்
200. ஒட்டு வயது 21 லிருந்து 18
குறைக்கப்பட்டது (ராஜிவ்
காந்தி)
201. 1990 தேசிய பெண்கள்
அணையச் சட்டம்
202. 1991 வளைகுடா போர்
203. Denkel proposals
204. 1992 செயல் திட்டம்
(கரும்பலகைத்திட்டம்)
205. 1992 சிறுபான்மையினர்
தேசிய ஆணையம்,தொட்டில்
குழந்தை திட்டம்
206. 1993 இராஷ்டிரிய மகிள
கோஷ்/ பெண்களுக்கான
தேசிய கடன்
207. 1993 பெண்களுக்கு எதிரான
வன்முறை தடுப்பு சட்டம்
208. 1993 தமிழ் இசை கழகம் மற்றும்
பொண்விழா ,IUPAC NAME
ஆண்டு
209. 1993 வியன்னாவில் மனித
உரிமை மாநாடு தேசிய
மனித உரிமை அணையம்
210. 1994 விதிகள் நடைமுறை
211. 1994 பிளேக் நோய்
212. 1997 தேசிய ஊனமுற்றோர்
வளர்ச்சி நிதி நிறுவணம்
213. 1997 பாலிக
சம்ரிதி யோஜனா 1999
மாற்றம் செய்யப்பட்டது
214. அருந்ததி ராய் புக்கர்
பரிசு பெற்றார் , The Gold of
Small things
215. மேகாலாயா – ஷில்லாங்,
ஆலப்புழா ஊர்
216. 1998 சுவ- சகதி திட்டம் /சுய
உதவி குழு
217. அணுகுண்டு சோதனை
218. 1999 யுரோ பணம் அறிமுகம்
இங்லாந்து ஏற்ற வில்லை
219. 2006 புகைபட வாக்களர்
அட்டை(சேஷன்) அறிமுகம்
220. 1749-54 பாரிஸ்
உடன்படிக்கை(1763)
221. 1780-84 மங்களுர் உடன்படிக்கை
222. 1986-93 சீரங்கப்பட்டிணம்
உடன்படிக்கை
223. 1968 – சர்வதேச மனித
உரிமை ஆண்டு.
224. * 1970 – சர்வதேச
கல்வி ஆண்டு.
225. * 1974 – சர்வதேச
மக்கள்தொகை ஆண்டு.
226. * 1975 – சர்வதேச பெண்கள்
ஆண்டு.
227. * 1979 – சர்வதேச குழந்தைகள்
ஆண்டு.
228. * 1985 – சர்வதேச இளைஞர்
ஆண்டு.
229. * 1986 – சர்வதேச
அமைதி ஆண்டு.
230. * 1994 – சர்வதேச குடும்ப
ஆண்டு.
231. * 1996 – சர்வதேச
ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
232. * 2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு.
233. * 2004 – சர்வதேச
அரிசி ஆண்டு.
234. * 2005 – சர்வதேச இயற்பியல்
ஆண்டு.
235. * 2006 – சர்வதேச பாலைவன
ஆண்டு.
236. * 2007 – சர்வதேச துருவ
ஆண்டு.
237. * 2008 – சர்வதேச சுகாதாரம்/
உருளைக்கிழங்கு/மொழிகள்
ஆண்டு.
238. * 2009 – சர்வதேச வானியல்
ஆண்டு.
239. * 2010 – சர்வதேச நுரையீரல்/
உயிரினம் ஆண்டு.
240. 2011 – பன்னாட்டு காடுகள்
ஆண்டு.
241. 2012 – கூட்டுறவு ஆண்டு.
242. 2013 – பன்னாட்டு நீர்
ஒருங்கிணைப்பு ஆண்டு.
243. 2014 – பன்னாட்டு நீர் விவசாய
குடும்ப ஆண்டு.
244. 2015 – பன்னாட்டு மணல்
ஆண்டு.
245. 2016 – பன்னாட்டு தானியம்
ஆண்டு.

கண்ணதாசன்

"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!

கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.

ராமநாதபுரம் மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.

சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.



ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் டெஸ்ட்பாட்ச் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான். 

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.



கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.

”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள். 

 கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.

காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!



கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்


* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.

* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது  யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.

* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.

* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.

*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Monday, 26 September 2016

பொது அறிவு

 பொது அறிவு

1. பூமியின் வடிவமானது

(a) கோள வடிவம் (b) ஜியாய்டு வடிவம்

(c) முட்டை வடிவம் (d) நீண்டகோள வடிவம்

2. பின்வருவனவற்றுள் எந்த நேரக்கோடு இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?

(a) 53.5 கி (b) 82.5 மே

(c) 53.5 மே (d) 82.3 கி

3. வளிமண்டலத்தில் காற்று சுழற்சி எதன் அடிப்படையில் சுழல்கிறது?

(a) பூமியின் சுழற்சி

(b) தோன்றக்கூடிய அழுத்த மண்டலம்

(b) 10 ஆகஸ்ட் கி.பி.1939

(c) 8 ஆகஸ்ட் கி.பி.1942

(d) எதுவும் இல்லை

4. ஒரு நாட்டில் மக்கள் தொகைக்கும் அந் நாட்டில் உள்ள நிலப்பகுதிக்கும் இடைப் பட்ட விகிதம் எவ்வாறு அழைக்கப் படுகிறது.

(a) இந்திய தலைமை நீதிபதி (b) பிரதமர்

(c) ஜனாதிபதி (d) சபாநாயகர்

5. சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப் பெரிய கோள் எது?

(a) புதன் (b) வௌ்ளி

(c) சனி (d) வியாழன்

6. உலகிலேயே மிகப்பெரிய தீவு

(a) மடகாஸ்கர் (b) கிரேட் பிரேட்டன்

(c) கிரீன்லாந்து (d) நியூ கினியா

7. ஆரவல்லி மலை எப்பொழுது உருவானது?

(a) மீசோசோயிக் சகாப்தம்

(b) டொ்சியரி சகாப்தம்

(c) பிரிகேம்ப்ரியான் சகாப்தம்

(d) லேட் பிரிகேம்ப்ரியான் சகாப்தம்

8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தீபகற்ப பீடபூமியில் காணப்படுவதில்லை

(a) ஆரவல்லிஸ் (b) பூர்வாஞ்சல்

(c) மால்வா பீடபூமி (d) தக்காண பீடபூமி

9. உலகிலேயே மூன்றாவது உயரமான கஞ்சன் ஜங்கா சிகரம் எங்கு உள்ளது?

(a) ஜம்மு காஷ்மீர் (b) உத்தரகாண்ட்

(c) சிக்கிம் (d) அருணாச்சலப்பிரதேசம்

10. இந்தியாவில் எது நகர மாநிலமாக உள்ளது?

(a) சண்டிகார் (b) சத்தீஸ்கார்

(c) டெல்லி (d) டேராடூன்

11. பொருத்துக

A. ஹரப்பா 1. பி.பி.லால்

B. லோத்தல் 2. ஜே.பி. ஜோ

C. காலிபங்கன் 3. சர் ஜான் மார்ஷல்.

D. தொளவீரா 4. எஸ்.ஆர். ராவ்

கீழ்கண்டவற்றுள் சரியான குறியீடுகளை தேர்ந்தெடுக்கவும்

A B C D

(a) 3 1 4 2

(b) 3 4 1 2

(c) 4 3 2 1

(d) 4 2 3 1

12. பொருத்துக

A. முதல் புத்த மாநாடு - 1. பாடலி புத்திரம்

B. 2ம் புத்த மாநாடு - 2. இராஜகிருகம்

C. 3ம் புத்த மாநாடு - 3. குண்டலவனா

D. 4ம் புத்த மாநாடு - 4. வைசாலி

கீழ்கண்டவற்றுள் சரியான குறியீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்

A B C D

(a) 2 1 4 3

(b) 2 4 1 3

(c) 1 4 2 3

(d) 1 4 3 2

13. இந்தியாவின் மாக்கியவல்லி எனப் படுபவர் யார்?

(a) மெகஸ்தனிஸ் (b) கவுடில்யா

(c) ஃபாஹியான் (d) யாரும் இல்லை.

14. ஏக பிராமணா என்ற பட்டத்தை யார் பெற்றார்?

(a) கவுதமிபுத்திரா சதகர்னி

(b) சிமுகா

(c) வசிட்ட புத்திர புலுமாயி

(d) எதுவும் இல்லை.

15. மத்தவிலாசபிரகாசனம் எந்த மொழியில் எழுதப்பட்டது

(a) தமிழ் (b) பிராகிருதம்

(c) சமஸ்கிருதம் (d) தெலுங்கு

16. கவிராஜமார்கம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது

(a) வீராச்சார்யா (b) மூன்றாம் கிருஷ்ணா

(c) அமோகவிருத்தி (d) முதலாம் அமோகவர்

17. எந்த முஸ்லீம் அரசர் இந்துக்களை ஜிம்மி என்றும் அவா்கள் மீது ஜிஸியா என்ற வரிவிதிப்பையும் முதலில் அறிமுகப் படுத்தினார்?

(a) இல்துமிஷ் (b) முகமது பின் காசிம்

(c) கோரி முகமது (d) கஜினி முகமது

18. எந்த டெல்லி சுல்தான் வேளாண்மையை ஊக்குவிக்க எண்ணி தக்காவி என்ற வேளாண்மை கடன்களை வழங்கினார்

(a) ஐபக் (b) அலாவுதீன் கல்ஜி

(c) முகமது பின் துக்ளக் (d) பிரோஸ் துக்ளக்

19. பின்வரும் எந்தத் திட்டத்தில் நிலத்தின் உற்பத்தியின் அடிப்படையில் வருவாய் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது?

(a) ரயத்துவாரி முறை

(b) மகல்வாரி முறை

(c) நிலையான நிலவரித்திட்டம்

(d) ஐந்தாண்டு நிலவரித்திட்டம்

20.பொருத்துக

A. மெக்காலே அறிக்கை- 1. கி.பி.1904

B. உட்ஸ் அறிக்கை- 2. கி.பி.1882

C. ஹண்டர் ஆணையம்- 3. கி.பி.1854

D. இந்திய பல்கலை. சட்டம்- 4. கி.பி.1835

A B C D

(a) 1 2 3 4

(b) 3 2 1 4

(c) 4 3 2 1

(d) 1 4 3 2

21. பின்வருபவர்களில் யார் மிதவாதிகள் தலைவர் இல்லை?

(a) தாதாபாய் நவுரோஜி (b) எம்.ஜி.ரானடே

(c) கோபால கிருஷ்ண கோகலே (d) திலகர்

22.வெள்ளையனே வெளியேறு தீர் மானத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றிய நாள்

(a) 8 ஆகஸ்ட் கி.பி.1940 (b) 10 ஆகஸ்ட் 1939

(c) 8 ஆகஸ்ட் கி.பி. 1942 (d) ஏதுவுமில்லை

23. எந்த அரசியலமைப்பு சட்டத்திருத் தத்தின் மூலம் சிக்கிம் இந்தியாவின் கூட்டாட்சி மாநிலமாக இணைக்கப் பட்டது?

(a) 1972, 30-வது சட்டத்திருத்தம்

(b) 1973, 32-வது சட்டத்திருத்தம்

(c) 1974, 35-வது சட்டத்திருத்தம்

(d) 1975, 33-வது சட்டத்திருத்தம்

24.கலாச்சார மற்றும் கல்வி உரிமைகளை வழங்கும் ஷரத்துகள் எவை?

(a) ஷரத்து 25-28 (b) ஷரத்து 29-30

(c) கண்டத்துக்கும் கடலுக்கும் உள்ள பரவல்

(c) ஷரத்து 23-24 (d) ஷரத்து 32

25. எந்த அரசியலமைப்பு சட்டதிருத்தம் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமை யிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டது?

(a) 42-வது சட்டத்திருத்தம் கி.பி.1976

(b) 44-வது சட்டத்திருத்தம் கி.பி.1978

(c) 73-வது சட்டத்திருத்தம் கி.பி.1992

(d) 74-வது சட்டத்திருத்தம் கி.பி.1992

26. நெறிமுறை கோட்பாடுகள் இதனை அடிப்படையாக கொண்டது

(a) காந்திய கொள்கைகள்

(b) பரந்த-அறிவுசார் கொள்கைகள்

(c) சமூகவியல் கொள்கைகள்

(d) வெப்பச் சமநிலை

(d) மேற்கூறிய அனைத்தும்.

27. நாடாளுமன்றத்தின் கூட்டமர்வு யாரால் கூட்டப்படும்?

(a) மக்களவை சபாநாயகர்

(b) பிரதமர்

(c) குடியரசுத் தலைவர்

(d) மாநிலங்களவை தலைவர்

28.ஒரு மசோதாவை பண மசோதா (அல்லது) மற்ற மசோதா என தீர்மானிப்பது யார்?

(a) சபாநாயகர் (b) ஜனாதிபதி

(c) பிரதமர் (d) மாநிலங்களவை தலைவர்

29. மாநில அரசுத் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்வது?

30. எந்த மாநிலத்தில் முதன்முதலாக ஊராட்சி அரசாங்கம் அறிமுகப்படுத் தப்பட்டது?

(a) குஜராத்

(b) ராஜஸ்தான்

(c) பீகார்

(d) ஆந்திரப்பிரதேசம்

31. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(a) அமைச்சர் (b) சேர்மன்

(c) மேயர் (d) அங்கத்தினர்

(a) மக்கள் தொகை அடர்த்தி

32.சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை எப்போது தொடங்கப்பட்டது?

(a) 2001 (b) 2002

(c) 2003 (d) 2004

34. ஒரு புவி நிலை செயற்கைக் கோளின் சுற்றுக்காலம்

(b) மக்கள் தொகை குறியீடு

(a) 24 மணிநேரம் (b) 30 நாட்கள்

(c) 365 நாட்கள் (d) தொடர்ந்து மாறும்

35.ஒலி அதிவேகமாக பயணிப்பது எவற்றில்

(a) வெற்றிடத்தில் (b) காற்றில்

(c) தண்ணீரில் (d) இரும்பில்

36.முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பூஞ்சைக் கொல்லி எவை?

(a) போர்டியாக்ஸ் கலவை

(b) டிடிடீ (DDT)

(c) நைட்ரஜன்

(d) சுரமின் பூ

(c) மக்கள் தொகை பரவல்.

37. வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கும் நொதிகளை தூண்டிவிடும் முக்கிய நொதிகள் கிடைப்பது?

1. ரிபோஃளேவின்.

2. நிக்கோடின்நமைடு.

3. அஸ்கார்பிக் அமிலம்.

4. குளுட்டமேட்

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான வற்றை தேர்ந்தெடு

(a) 1 மற்றும் 2. (b) 2 மற்றும் 3

(c) 3 மற்றும் 4 (d) 1 மற்றும் 4.

38. பின்வருவனவற்றுள் துணைக்கோள்கள் இல்லாதவை எவை?

1. செவ்வாய் 2. வௌ்ளி

(d) பாலின விகிதம்.

3. புதன் 4. நெப்டியூன்

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடு

(a) 1 மற்றும் 2 (b) 2 மற்றும் 3

(c) 1 மற்றும் 3 (d) 2 மற்றும் 4

எம்.கார்த்திகேயன், கல்வி ஆலோசகர்

விடைகள்: 1.b 2. d 3. d 4. a 5. d 6. c 7. c 8. b 9. c 10. c 11. b 12. b 13. b 14. a 15. c 16. d 17. b 18. c 19. b 20. c 21. d 22. c 23. c 24. b 25. b 26. d 27. c 28. a 29. c 30. b 31. b 32. d 33. c 34. a 35. d 36. a 37. a 38. b

ஹீமோபீலியா

உடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும் போது உறைதலுமே, ரத்தத்தின் இயல்பு. மனிதர்களில் சிலருக்கு, அடிபட்டு அல்லது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியில் வந்தால், ரத்தம் உறையாமல், வெளியேறி கொண்டே இருக்கும். அதற்கு, 'ஹீமோபீலியா' எனும் ரத்தம் உறையாமை நோய் என்று பெயர்.
ரத்தம், முழுமையாக திரவ நிலையில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான அணுக்கள் இருக்கும். ஆனால் உடலை விட்டு வெளியேறும்போது, வெளிக்காற்றுபட்ட உடன், உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். ரத்தப்போக்கு தொடர்ந்தால், உயிரிழப்பு ஏற்படும்.
'ஹீமோபீலியா' மரபணு குறைபாடுகளால் ஏற்படுவது. பத்தாயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கும். ஒருவருக்கு அடிபட்டால், மூன்றாவது நிமிடத்தில், ரத்தம் உறைய வேண்டும். ஆனால், 'ஹீமோபீலியா' உள்ளோருக்கு, 30 நிமிடங்கள் கடந்த பிறகும், ரத்தம் உறையாது.
தாயின் கருப்பையில், குழந்தை உருவாகும்போது, அதன் பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். அவை, ஆணின் உடலில் 'எக்ஸ், ஒய்' குரோமோசோம்களாகவும், பெண் உடலில், 'எக்ஸ், எக்ஸ்' குரோமோசோம்களாகவும் இருக்கும். 'எக்ஸ்' குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே, 'ஹீமோபீலியா' வர முதன்மை காரணம். அதனால், ஒரு 'எக்ஸ்' குரோமோசோம் கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால், சமாளிக்க முடியாது.
இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்கள் கொண்ட பெண்களுக்கு, ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு 'எக்ஸ்' குரோமோசோமில் உள்ள மரபு பண்புகளை கொண்டு, ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும்.
இந்த நோயின் தன்மைக்கு ஏற்றவாறு, சிகிச்சைகள் உள்ளன. 'க்ரையோ பிசிபிடேடர்' எனும் ஊசி உள்ளது. ஆனால், இதை தயாரிக்கும் செலவு அதிகம். நம் நாட்டில் இம்மருந்து அதிகம் கிடைப்பதில்லை.

லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா

1966 ல், மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில், Administrative Reforms Commission (ARC) அன்மிஸிஸ்டிரேடிவ் ரிபார்ஸ் கமிஷன் ஒன்றின் பரிந்துரையில், மத்திய அரசில் லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா என்னும் அமைப்புக்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியது. லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா என்பவர் மத்திய மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அதிகாரி. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதி மன்ற நீதிபதியாக இருக்கலாம். அவர் கீழ் அமையும் அமைப்புக்கு, பொது மக்கள் தொடுக்கும், புகாரின் பேரில், அரசு ஊழியர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பற்றிய ஊழல்களை, தவறுகளை விசாரிக்கவும் தண்டனை அளிக்கவும் அதிகாரம் இருக்கும். அந்த மாதிரியான விசாரனையில், பொது மக்களின் குறைகளை விரைவில் களைய ஒரு வழி கிடைக்கும் என்று முடிவானது.
1971 ல் முதன் முதலாய், மகாராஷ்டிர மாநிலத்தில், லோக் ஆயுக்தா நியமிக்கப் பட்டார். அடுத்து 19 மாநிலங்களில் லோக் ஆயுத்தா நியமிக்கப் பட்டனர். மற்ற இதர மாநிலங்களில் இன்னும் நியமிக்கப் படவில்லை, குறிப்பாக இதுவரை தமிழகத்தில் லோக் ஆயுத்தா உள்ளே நுழையவே இல்லை. கர்நாடக மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன், சந்தோஷ் ஹெக்டே அவர்கள் லோக் ஆயுத்தா வாக தீவிர மாக செயல் பட்டு, 12,000 கோடி சுரங்க ஊழலை கண்டு பிடித்து, முதலமைச்சராய் இருந்த திரு யெடியூரப்பா அவர்களை சிறைக்கு அனுப்பினார். குஜராத்தில், திரு நரேந்திர மோடி பல காலமாய் லோக் ஆயுக்தா நியமிக்க தடையாய் இருந்து, இறுதியில் கவர்னரின் குறிக்கீடில் நியமிக்கப் பட்டார்.
சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா செயல் படுத்தப் பட்டதே தவிர, மத்திய அரசில் வரவேண்டிய, லோக் பால் என்ற அமைப்பு வரவே இல்லை. அப்படி ஒரு அமைப்பை கொண்டு வரவே, திரு அன்னா ஹாசாரே அவர்கள் தலைமையில் ஒரு புரட்சி துவங்கியது

பரம்பரையின் இரகசியம் அடங்கிய செல்

பரம்பரையின் இரகசியம் அடங்கிய செல்

உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளதாகும். மரம், செடி, கொடி, தாவரங்கள் அனைத்தும் செல்லின் தொகுப்பே. சுருக்கமாகச் சொல்வதானால் உயிரினத்தின் துவக்கமே செல்தான்.

கருவின் நிலையும் இந்த செல்களின் தொகுப்பு என்பதால், செல்லின் செயல்பாடுகள் பற்றியும், அதன் அங்கங்கள் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது, கருவறையில் சங்கமமாகும் விந்தணு, சினை முட்டை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு துணை புரியும்.

மேலும், அங்கு உருவாகும் கருவின் பாலை (Sex) விந்தணு எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் உறுதுணையாக அமையும்.
ஒரு செல்லின் சராசரி எடை, ஒரு கிராமின் நூறு கோடியில் ஒரு பகுதியாகும் என்றால், செல் எந்தளவிற்கு நுண்ணியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதில் சில நிமிடங்கள் மட்டும் உயிர் வாழக் கூடியது, இரண்டு மாதங்கள், பல வருடங்கள், அதற்கும் மேலாக உயிர்வாழக் கூடியது என பல வகையான செல்கள் உண்டு. நாம் மனிதக் கருவியல் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் உள்ளதால் மனித செல்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்வோம்.ஒரு மனிதனின் உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பாகும். மனித உடலில் இடைவிடாது செல் பெருக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு வினாடிக்கு 12.5 கோடி எனும் விகிதத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 750 கோடி செல்கள் பெருக்கம் நடை பெறுகிறது. அதன்படி ஒரு மணிநேரத்தில் எத்தனை கோடி செல்கள், ஒரு நாளைக்கு எத்தனை கோடி செல்கள் புதுபிக்கப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

பழைய செல் செயலிழந்து இறந்து விடும் போது, புதிய புதிய செல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நாம் அறியாமலேயே இந்நிகழ்ச்சி நமது உடலில் இடை விடாது தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த மனித செல்களில் மிகச் சிறியது ஆண் உயிரணுவாகவும், மிகப் பெரியது பெண் கருமுட்டையாகவும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



    இணையாநிலை


Add FavoritesShare to FacebookCopy Link
#2

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:02 pm
செல் அங்கங்கள்

முக்கியமாக செல்சுவர், அதனை அடுத்து திரவ வடிவத்திலான சைட்டோபிளாசம், அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியா, அதன் மையப்பகுதியில் உட்கருவாகத் திகழும் நியூக்ளியஸ் ஆகிய முக்கிய பகுதிகளை அங்கங்களாகக் கொண்டுள்ளதாகும் ஒரு செல். மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று, செல் சுவாசிப்பதற்கு துணை புரிவதாகும்.

இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ் ஒரு செல்லின் மிக மிக முக்கிய பகுதியாகும். இந்த உட்கரு இன்றி ஒரு செல் தனது பயணத்தை தொடர முடியாது. இந்த நியூக்ளியஸித்திற்குள் மிக சிறிய துணுக்குகளாக புரோட்டின்கள் உள்ளன. இதனை குரோமோசம் என்று கூறப்படும்.

ஒவ்வொரு செல்லினுள் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமத்திற்குள் தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் என்று ஒன்று உண்டு. அதனைச் சுருக்கமாக டி. என். ஏ. (D.N.A.) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) என்று கூறப்படும். இது முதன் முதலில் 1953ம் ஆண்டுதான் பிரட்னில் காவண்டிஷ் ஆய்வுக் கூடத்தில் வாட்ஸன் (Watson), க்ரிக் (Crick) ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த டி.என்.ஏ ஆய்வில் மேலும் பல அறிஞர்கள் ஈடுபட்ட போது வியக்கத் தக்க பல கோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

வம்ச பரம்பரைச் செய்திகள், பின் வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள், ஒரு மனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் என வேறுபட்ட பல செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு வெவ்வேறு செய்திகளை குறிப்பிட நியூக்ளிக் அமிலங்கள் கொண்ட பல தொகுப்புகள் இந்த டி.என்.ஏ.வில் உள்ளது. இந்தத் தொகுப்புகளைத்தான் ஜீன் (gene) என்று குறிப்பிடுகின்றனர். கண், காது, மூக்கு, கை, கால், உடலமைப்பு உறுப்புகள் எவ்வாறு எந்த இடத்தில், எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இந்த ஜீன்தான். முன்னோரின் தோற்றம் வாரிசுகளுக்கு ஏற்படுவதற்கும் இந்த டி.என்.ஏ.வில் உள்ள ஜீன்தான் காரணம்.
கருவில் வளரும் குழந்தை பிறந்து, இறக்கும் வரை அதன் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் இரத்த அழுத்தம், பார்க்கும், கேட்கும், விளங்கும் திறன் அனைத்தையும் தீர்மானிப்பதும் இந்த ஜீன்கள்தான். ஒவ்வொரு வயதிலும் எவ்வாறு உடலமைப்பு இருக்கும் என்பதையும் இந்த டி.என்.ஏ.வில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்த ஜீன்களின் தீர்மானத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால் கூட, கண் இருக்க வேண்டிய இடத்தில் காதும், மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் வாயும் என மாறிவிடும். மேலும், பல்வேறு பிறவி நோய்கள், பிறவி ஊனங்கள் ஏற்படுவதற்கும், புற்று நோய் தோன்றுவதற்கும் காரணமாகவும் அது அமைகிறது.

இதில் வியப்பு என்னவெனில், டி.என்.ஏ. வில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளில் 3 விழுக்காடுதான் இது வரை அறியப்பட்டுள்ளன மீதமுள்ள 97 விழுக்காடு செய்திகள் இதுவரையும் அறியப்பட வில்லை என்று விஞ்ஞான உலகம் கையை விரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்? திகைப்பூட்டும் இந்த ஆய்வு, இறுதியில் இறை நம்பிக்கையில் போய் முடிகிறது. அறிய முடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப்பதிந்து வைத்த இறைவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுத வேண்டிய செய்திகள் ஏராளம். இது அதற்குரிய இடம் இல்லை. எனவே, நமது நோக்கத்திற்கு வருவோம்.



    இணையாநிலை


#3

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:03 pm
செல் பெருக்கம்

செல் பெருக்கம் மனித உடலில் இடையுறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று பார்த்தோம். உடலியல் செல், இனவிருத்தி செல் என இருவகை செல்கள் உள்ளன. இந்த இரண்டின் பெருக்கமும் இரு வேறு முறையில் நடைபெறுகிறது.

ஒரு உடலியல் செல் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் தன்னைத் தானே இரட்டிப்பாக ஆக்கிக் கொள்கிறது. அப்போது, அதன் உட்கருவான நியூக்ளியஸ் குறுக்கு வாக்கில் இரண்டாக பிரிந்து, அதனுள் இருக்கும் 46 குரோமோசோம்கள் 23, 23 என பிரிந்து எதிரெதிராக ஒதுங்கிவிடுகிறது. அப்போது குரோமோசோம்களில் உள்ள டி.என்.ஏ. வானது நீளவாக்கில் பிளந்து கொள்ளும். அதனால் ஏற்கனவே இரண்டாகப் பிரிந்து, ஒதுங்கியிருந்த ஒவ்வொரு 23 குரோமோசோம்களும் நீளவாக்கில் பிளந்து கொள்கின்றன.

நீளவாக்கில் பிரிந்த குரொமோசோம்கள், ஆர்.என்.ஏ. (ரிபோ நியூக்ளிக் ஆசிட்)வின் துணையுடன் எதிர் எதிராக உள்ளதுடன் இணைந்து, இரண்டு தனிச்செல்களாக ஆகிவிடுகிறது. அப்போது ஒவ்வொரு செல்லும் 46 குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். தாய் செல்லில் இருந்த அனைத்து தகவலும், பிரிந்த செல்கள் இரண்டிலும் ஆர்.என்.ஏ. வின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வகையான செல் பெருக்கத்தினை மைடாஸிஸ் (Mitosis) என்று கூறப்படும். அதாவது மிகுதல் பிரிகை ஆகும்.



    இணையாநிலை


#4

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:03 pm
இனவிருத்தி செல் பெருக்கம்
இனவிருத்தி செல் பெருக்கம் இதற்கு சற்று மாறு பட்ட முறையில் நடைபெறும். இனவிருத்தி உறுப்புகளில் உருவாகும் ஆணுயிர் செல்லானது 23 ஜோடி குரோமோசோம்களையும், பெண் கருமுட்டை செல்லானதும் 23 ஜோடி குரோமோசம்களையும் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொன்றிலும் முள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடியானது வம்சப் பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. இதனை உடற்கூறு குரோமோசோம்கள் (Autosomes) என்று கூறப்படும். இந்த வகைக் குரோமோசோம்கள் தான் பிறக்கப் போகும் சிசுவின் உடல் கூறு இயல்புகளையும், அதன் இயக்கங்களையும், அதன் இயல்புகளையும் தீர்மானிக்கும்.

23 வது ஜோடியானது பாலினத்தை (Sex) தீர்மானிக்கும் செய்தியினை உள்ளடக்கி இருக்கும். இதனை பாலினக் குரோமோசம் (Sex Chromosomes) என்று குறிப்பிடுகின்றர். இதில் ஆண் உயிரணுவில் உள்ள 23வது ஜோடியான இனக் குரோமோசம் X, Y என்றும், பெண் கருமுட்டையில் X, X என்றும் இருக்கும். Y என்பது ஆண் பாலைத் தீர்மானிக்கும், X பெண் பாலைத் தீர்மானிக்கும் குரோமோசம் ஆகும்.இந்த 23 ஜோடி குரோமோசம்கள் முதிர்ச்சி அடையும் போது, இரண்டாக பிரிந்துவிடுகிறது. விந்தணுச் செல் இரண்டாகப் பிரியும் போது, 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசோம்), ஒரு
X எனும் பெண் இனக் குரோமோசம் என்ற ஒரு பாதியாகவும், 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசம்), ஒரு Y எனும் ஆண் இனக் குரோமோசம் என்ற இன்னொரு பாதியாகவும் பிரிந்து விடும்.

சினை முட்டை செல்லிலும் இதே போன்றுதான் இரு பாதிகளாகப்பிரிந்து நிற்கும். ஆனால், இங்கு இரு பாதியிலும் X எனும் பெண் இனக் குரோமோசம்தான் இருக்கும். இதனை மையாஸிஸ் (Meosis) குன்றுதல் பிரிகை என்று கூறப்படும்.விந்தணுச் செல், சினை முட்டையை அடையும் போது இரண்டிலும் உள்ள பிரிந்த 23, 23 செல்கள் ஒன்றிணையும். அப்போது ஒரு செல்லுக்குத் தேவையான 46 குரோமோசம்களைக் கொண்ட ஒரு செல்லாக வடிவம் பெறுகிறது. இவ்வாறு ஒன்றிணையும் போது விந்தணுச் (ஆணுயிர்) செல்லின் இனக் குரோமோசோம்
X ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு பெண்ணாகவும், விந்தணுச் செல்லின் இனக் குரோமோசோம் Y ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு ஆணாகவும் இருக்கும் என இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறிக் கொண்டிருக்கிறது. சினை முட்டை செல்லின் பாலினக் குரோமோசம் எல்லா நிலையிலும் ஒன்றுபோலவே இருக்கும். பாலினத்தை (Sex) தீர்மானிப்பதில் இதற்கு எந்த பங்களிப்பும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.

இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, விந்தணுவும், சினை முட்டையும் ஒன்றிணையும் போதே அந்தக் கருவின் பாலினம் என்னவாக இருக்கும் என்பது தீர்மானிக்கபட்டுவிடுகிறது. ஆனால் அதனை உணர்ந்து கொள்ளும் திறனோ, அதனை கண்டு பிடிக்கும் அறிவியல் ஆற்றலோ மனிதனிடம் இல்லை. அது இறைவன் மட்டுமே அறிந்த இரகசியமாக உள்ளது. இந்த இடத்தில், கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே! என்ற இறை வசனம் விஞ்ஞானத்தை மிகைத்து நிற்பதை உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.



    இணையாநிலை


#5

Re: உடலியல் - குரோமோசோம்கள்

Post by Guest on Sat Oct 23, 2010 11:05 pm
செல் தியரி

செல் எனும் வார்த்தைப் பிரயோகமே 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள செல் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.

அவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம் ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி செல்லின் மையப்பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) எனவும் பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.

பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது. மேலும் பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற் கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 1890ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனை இன்று மைட்டோ காண்ட்ரிய (Mitochondtia) என்று நாம் அறிந்து வருகிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனால், 1953ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.ஏ. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டு பிடிப்பு உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பல் வேறு தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.
மரபணுக்கூறான டி.என்.ஏ. (D.N.A) வில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் மட்டும் பல இலட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது மேதைகளுக்கே தலை சுற்றாக விளங்குகிறது. எனவேதான், 1958ம் ஆண்டு கோட்டர்ட் என்பர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்று அறிவிப்புச் செய்தார். அதன் பொருள்: இது வரையும் செல் பற்றிய செய்திகளையும், அதில் சார்ந்திருக்கும் மரபணுக் கூறான டி.என்.ஏ. பற்றியும் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர் பறை சாற்றுகிறார்.

செல் ஆய்வின் பின்னணியை புரிந்து கொண்ட நாம், 1665ம் ஆண்டுக்கு அதாவது 338 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் செல் பற்றியும், அதில் அடங்கியுள்ள குரோமோசம்கள் பற்றியும் துளி கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, இதன் பெயர்களைக் கூட அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் எனும் போது 1423 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் இந்த செய்திகளை யெல்லாம் அறிந்திருந்தார் என்று சொன்னால் அதனை ஏற்க முடியுமா? நிச்சயமாக யாரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டி.என்.ஏ. (D.N.A) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

GK

--இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்
--சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்
--சுதந்திர கட்சி - ராஜாஜி
--இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே
--சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்
--இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
--இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி
--இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்
--இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்
--இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்
--பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
--ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்
--சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்
--பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே
--சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா
--லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
--தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்
--தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
--தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
--தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்
--வைக்கம் வீரர் - தந்தை பெரியார்
--ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
--பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்
--அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி
--சாரதா சதன் - பண்டித ராமாபாய்
--லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்
--இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்
--பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி
இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்
--கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்
--சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி
--வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்
--சாரணர் படை - பேடன் பவுல்
--இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்
--ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்
--செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்