Tuesday, 27 December 2016

தேர்தல் ஆணையர்


வரிசை எண்
தேர்தல் ஆணையர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
1
சுகுமார் சென்
2
கே.வி.கே. சுந்தரம்
3
எஸ்.பி. சென் வர்மா
4
நாகேந்திர சிங்
5
டி. சுவாமி நாதன்
6
எஸ்.எல். சக்தார்
7
ஆர்.கே. திரிவேதி
8
ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி
9
வி.எஸ். ரமாதேவி
10
டி.என். சேசன்
11
எம்.எஸ். கில்
12
ஜே.எம். லிங்டோ
13
டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
14
பி.பி. தாண்டன்
15
என். கோபாலசுவாமி
16
நவின் சாவ்லா
17
எஸ்.ஒய். குரைசி
18
19
20
சையது நசீம் அகமது ஜைதி
பணியில்

தீர்த்தங்கரர்



தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். நம்மிடம் நண்ணியிருப்பவனை 'நண்பன்' என்பது போன்றது இது. ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன. இவர்களது வாழ்நாள் பற்றிய கணக்கு ஒன்றும் உள்ளது. இவற்றில் குறிப்பிடப்படும் எண்கள் கலைநோக்குக் கற்பனை வடிவம் கொண்டுள்ளன.
24 தீர்த்தங்கரர்களின் பெயரும் வாழ்நாளும்

24 தீர்த்தாங்கரர்கள்

ரணக்பூர், ராஜஸ்தான், ஆதிநாதர் கோயிலில் உள்ள 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதரின் சிலை



  1. ரிசபதேவர் (ஆதிநாதர்) - 1000 அண்டுகள் தவம் செய்து 84 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  2. அஜிதநாதர் - 72 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  3. சம்பவநாதர் - 60 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  4. அபிநந்தனநாதர் - 50 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  5. சுமதிநாதர் - 40 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  6. பத்மபிரபா - 30 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  7. சுபர்சவநாதர் - 20 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  8. சந்திரப்பிரபா - 10 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  9. புட்பதந்தா - 2 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  10. சீதாலநாதர் - ஒரு லட்சம் பூர்வம் ஆண்டுகள்
  11. சிரேயான்சநாதர் - 84 லட்சம் ஆண்டுகள்
  12. வாசுபூச்யா - 72 லட்சம் ஆண்டுகள்
  13. விமலநாதர் - 60 லட்சம் ஆண்டுகள்
  14. அனந்தநாதர் - 30 லட்சம் ஆண்டுகள்
  15. தர்மநாதர் - 10 லட்சம் ஆண்டுகள்
  16. சாந்திநாதர் - ஒரு லட்சம் ஆண்டுகள்
  17. குந்துநாதர் - 95,000 ஆண்டுகள்
  18. அரநாதர் - 84,000 ஆண்டுகள்
  19. மல்லிநாதர் - 55,000 ஆண்டுகள்
  20. முனிசுவிரதநாதர் - 30,000 ஆண்டுகள்
  21. நமிநாதர் - 10,000 ஆண்டுகள்
  22. நேமிநாதர் - 1,000 ஆண்டுகள்
  23. பார்சுவநாதர் - 100 ஆண்டுகள்
  24. மகாவீரர் - 72 ஆண்டுகள்

இரத்தம் பற்றிய சில தகவல்கள்

இரத்தம் பற்றிய சில தகவல்கள்:-
🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
🍎 இரத்த வகைகள் - A, B, AB, O
🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
🍎 இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
🍎 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
🍎 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
🍎 120 mmHg என்பது - Systolic Pressure
🍎 80 mmHg என்பது - Diastolic Pressure
🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்

1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
🍉 பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000

இந்தியா என்ற யூனியன்

 I. Union and its territories:
1. Name and territory of union இந்தியா என்ற யூனியன்
2. establishment of new states- புதிதாக மாநிலங்களைஉருவாக்குதல்
3. formation of new states and alteration of areas-எல்லையை மாற்றுதல்

shortstory:
இந்திய என்ற யூனியனில்(article 1) புதிதாக மாநிலங்களை(article 2) உருவாக்குவதற்கு அம்மாநில எல்லையை (article 3)மாற்ற வேண்டும்.

II) . Citizenship - குடியுரிமை சம்பந்தமான சரத்துகள்:(citizenship related articles 5 to 11)

art 5)குடியிரிமை பெறப்படுதல்.
art 6)பாகிஸ்தானில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு.
art 7)பின்னர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்பவர்களுக்கு.
art8) பின்னர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உண்டான குடியிரிமை
art 9)பின்னர் அவர்கள் வெளிநாட்டில் தானாக முன்வந்து அந்த நாட்டு குடியுரிமையை பெறுவது.
art 10)அவர்கள் வெளி நாட்டு குடியுரிமையை பெற்றால் நம் நாட்டில் அவர்கள் குடியிரிமை தொடருமா இல்லையா?
என்பதை முடிவு செய்யும் உரிமை பாராளுமன்றத்துக்கு(art 11) உள்ளது.

சர்வதேச_ஆண்டுகள் !!


சர்வதேச_ஆண்டுகள் !!

* 1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு.
* 1970 - சர்வதேச கல்வி ஆண்டு.
* 1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
* 1978 - சர்வதேச பெண்கள் ஆண்டு.
* 1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
* 1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.
* 1986 - சர்வதேச அமைதி ஆண்டு.
* 1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.

* 1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
* 2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.
* 2004 - சர்வதேச அரிசி ஆண்டு.
* 2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.
* 2006 - சர்வதேச பாலைவன ஆண்டு
* 2007 - சர்வதேச துருவ ஆண்டு.
* 2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
* 2009 - சர்வதேச வானியல் ஆண்டு.
* 2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம்ஆண்டு.
* 2010-2011 - அனைத்துலக இளைஞர் ஆண்டு
* 2013 - சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு, சர்வதேச தினை ஆண்டு
* 2014 - சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு.
* 2015 - சர்வதேச ஒளிவருடம் (Year of Light) , சர்வதேச மண்வருடம் (Year of Soil)
* 2016 - சர்வதேச பருப்பு ஆண்டு

வஉசி

வஉசி

நட்புக்கு அடையாளம் சிவாவும் சிதம்பரமும்! #கப்பலோட்டியதமிழர்

கப்பல்

பண நோட்டுகளை மாற்ற மக்கள் அலை மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தனது மகளுக்கு 200 கோடிக்கு மேல் செலவழித்து திருமணம் நடத்தும் மனிதர்கள் வசிக்கும் அதே நாட்டில்தான் அந்த மனிதரும் பிறந்தார். பெயர் வ.உ. சிதம்பரம். சுருக்கமாக வ.உ.சி.கப்பல் ஓட்டிய தமிழர் என்றழைக்கப்படுபவர். தூத்தூக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சொந்த ஊர். பாரதியிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.  இருவரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

வஉசி மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவர்.  மிகச்சிறந்த படிப்பாளி. வக்கீலுக்கு படித்தவர். எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். கடந்த 1890 முதல் 1900-ம் ஆண்டுகளில் நாட்டில் சுதந்திர வேட்கைத் தீவிரமடைந்த காலக்கட்டம். வஉசி, மராட்டிய வீரர் பாலகங்கதாரத் திலகரை குருவாக ஏற்றார். சென்னையில் ஒரு முறை விவேகானந்தரின் சீடர் ராமகிருஷ்ணரை சந்தித்தார் வஉசி. அப்போது 'நாட்டு சுதந்திரத்துக்கு ஏதாவது செய்யுங்கள் ' என வஉசியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து 1905-ம் ஆண்டு காங்கிரசில் இணைத்துக் கொண்ட வஉசி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார். சுப்ரமணிய பாரதியும் தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல தொழில்களை வஉசி தொடங்கினாலும் சுதேசிக் கப்பல் கம்பெனிதான் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

'பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி' என்பது ஆங்கிலேயருக்கு சொந்தமானது. வஉசி தொடங்கிய கப்பல் நிறுவனத்தின் பெயர் சுதேசிக் கப்பல் கழகம். தொடக்கத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செயயப்பட வேண்டுமென்பது திட்டம். நிதி திரட்ட 40 ஆயிரம் பங்குகள் வெளியிடப்பட்டது. அதன் முகமதிப்பு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த எவரும் பங்குகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்த ஜமீந்தார் பாண்டித்துரை நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணம் அவ்வளவு எளிதில் திரட்ட முடியவில்லை.  பாரதி  ' இந்தியா' பத்திரிகையில் நிதி திரட்ட தலையங்கம் எழுதினார். ஆனாலும் குறைந்த அளவே நிதி  சேர்ந்திருந்தது.

முதலில் சுதேசிக் கப்பல் கம்பெனி கப்பலை வாடகைக்கு எடுத்து தூத்தூக்குடியில் இருந்து கொழும்புக்கு ஓட்டியது. ஆனால் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி கொடுத்த நெருக்கடியில் கப்பலை வாடகைக்கு கொடுத்த நிறுவனம் குத்தகையை ரத்து செய்தது. இது வஉசிக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது. நாடு முழுவதும் சுற்றினார். பங்குகளை விற்று பணத்தை திரட்டும் பணியில் தீவிரமானார். 'ஒன்று கப்பல் வாங்குவேன் அல்லது கடலிலேயே கரைந்து விடுவேன் ' என சூளுரைத்தார். நிதி திரண்டது. தேவையான நிதி சேர்ந்ததும் முதலில் எஸ்.எஸ் காலியோ கப்பலை வாங்கினார். கப்பல் தூத்தூக்குடி வந்தடைந்ததும் பெரிய விழா எடுக்கப்பட்டது. காலியோவை தனது முதல் பிள்ளை என்பார் வஉசி. அடுத்து பிரான்சில் இருந்து லாவோ வந்தது.

இரு கப்பல்களும் பிரிட்டன் கப்பல் கம்பெனிக்கு எதிராக தூத்தூக்குடியில் இருந்து  கொழும்புவுக்கு ஓடத் தொடங்கின. போட்டி உருவானது. பிரிட்டன் கப்பல் கொழும்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் என்றது.சுதேசிக் கப்பல் 50 பைசாவுக்கு பயணிகளை அழைத்துச் சென்றது. ஆடிப் போனது பிரிட்டன் கப்பல் கம்பெனி. நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்தித்தது பிரிட்டிஷ் கம்பெனி. தேசப்பற்று மிக்க மக்கள் பிரிட்டிஷ் கப்பல்களை புறக்கணித்ததும் இதற்கு ஒரு காரணம்.

தூத்துக்குடியில் மதுரா கோட்சின் கோரல் மில் இயங்கி வந்தது. இந்த மில்லில் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து வஉசி போராடினார். சிதம்பரத்துடன் சுப்பிரமணிய சிவாவும் சேர்ந்து கொண்டார். சுப்பிரமணியம் சிவா மீதும் பிரிட்டன் அரசு பல வழக்குகளைப் போட்டிருந்தது. சிதம்பரமும் சிவாவும் ஸ்ட்ரைக்கை முன்னின்று நடத்தினர். இந்த ஸ்ட்ரைக் மற்ற ஆங்கிலேய நிறுவனங்களையும் பாதிக்கத் தொடங்கியது. சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த கோபமும் சிதம்பரம் மீது ஆங்கில அரசுக்கு இருந்தது.

தூத்துக்குடியில் சிதம்பரமும் சிவாவும் கலகத்தை ஏற்படுத்துவதை அறிந்த ஆங்கிலேயே அரசு சிதம்பரத்தை மடக்க திட்டமிட்டது. திருநெல்வேலிக்கு சிவாவுடன் வருமாறு சிதம்பரத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஞ்ச் துரை கேட்டுக் கொண்டார். பேச்சுவார்த்தைக்கு வந்த சிதம்பரத்திடம் 'இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது போராட்டங்களில் ஈடுபடக் கூடாது' என ஆங்கிலேயே அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. சிதம்பரம் மறுத்தார். உடனடியாக கைது செய்யப்பட்டார். 1908 மார்ச் 12-ம் தேதி சுப்பிரமணிய சிவாவும் சிதம்பரமும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்தூக்குடியில் பெரும் கலவரம் வெடித்தது. வழக்கு நேர்மையாக நடைபெறதாத காரணத்தினால் விசாரணையில் பங்கேற்க வஉசி மறுத்துவிட்டார். முடிவில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 20 ஆண்டுத் தண்டனையும் அடங்கியிருந்தது. முதலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார் . தண்டனை விதிக்கப்பட்டபோது வஉசிக்கு 36 வயதே ஆகியிருந்தது. பின்னர் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மேல் முறையீட்டுக்கு பிறகு தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

வஉசி சிறைக்கு சென்று விட்டதால், பங்குதாரர்களால் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்த முடியவில்லை. கப்பல்களை விற்க முடிவு செய்தனர். விடுதலையாகி வெளியே வந்தபோது, வஉசியை வரவேற்க அவரது ஆத்ம நண்பர் சுப்பிரமணியம் சிவா இன்னும் சிலர் மட்டுமே சிறைக்கு வந்திருந்தார்கள்.  அவரது முதல் பிள்ளையான எஸ்எஸ் காலியோ யாரை எதிர்த்து கப்பல் ஓட்டினாரோ... அவர்களுக்கே விற்கப்பட்டிருந்தது!.