Friday, 21 August 2015

மாணவர்கள் வெற்றிபெற 8 உறுதிமொழி

மாணவர்கள் வெற்றிபெற 8 உறுதிமொழி

* உனக்குள் ஓர் அரும்பெரும் சக்தி உள்ளது. அதில் வெற்றி எண்ணத்தை வளர்த்து உன் சக்தியால் வெற்றி அடைந்தே தீரவேண்டும்.
* ஒவ்வொரு நாளும் ஆசிரியர் சொல்லும் பாடங்களை அன்றைய இரவே படிக்க வேண்டும்.
* அறிவுபெட்டகமாக திகழும் உன் ஆசிரியர்களின் வாழ்வுமுறையை தெரிந்து அவர்களை  மதித்து நடக்க வேண்டும்.
* பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்க வேண்டும்.
* நீ பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
* நீ வெற்றிபெற்று மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடி மகிழவேண்டும்.
* உன் வீட்டில் ஒரு சிறுநூலகம் அமைத்து தினமும் 30 நிமிடமாவது புத்தகங்களை படிக்க வேண்டும்.
* பிரச்னைகளை கண்டு பயப்படக்கூடாது. தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து விடாமுயற்சியுடன் உன்னத லட்சியத்தை அடைய வேண்டும்.  வெற்றிக்கு மூலக்காரணமான அறிவு, உழைப்பு, தைரியம், விடாமுயற்சியை பின்பற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு கூறிய கவிதை

நான் பறந்து கொண்டே இருப்பேன்!
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற மன உறுதியுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்த, பலரும் சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அந்த உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பலரும் யோசிக்க மறந்து விடுகிறார்கள்.

திட்டமிடாத கடின உழைப்பு என்பதில் பலன் மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஆனால், காலமும், உடல் உழைப்பும் மிக அதிகம் செலவிடப்பட்டிருக்கும். எனவே, எந்த விஷயத்திலும், சாமர்த்தியமாக திட்டமிட்டு உழைத்தால்தான், முழுமையான வெற்றி கிடைக்கும். அதற்கான சில ஆலோசனைகளைப் பற்றி இங்கே அலசுவோம்,

நோக்கத்தைப் பற்றி தெளிவான புரிதல்

ஒருவருக்கு தனது இலக்கைப் பற்றிய தெளிவான புரிதல் வேண்டும். பலர், தான் எதற்காக உழைக்கிறோம் என்பது தெரியாமலேயே, தேவையின்றி கடினமாக உழைத்து, தங்களின் ஆற்றலையும், நேரத்தையும் வீணாக்கி விடுகிறார்கள். எனவே, இந்த விரயத்தை தவிர்க்க, நோக்கத்தை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டும்.

எதற்கு முக்கியத்துவம்?

ஒரு காரியத்தை மேற்கொள்கையில், முதலில் எதை செய்தால் வேலை விரைவாக முடியும் மற்றும் பலன் அதிகமாக கிடைக்கும் என்பதை தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மதுரையிலிருந்து, சென்னைக்கு சாலை வழியாக பயணம் செய்யும் ஒருவர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக பயணம் செய்தால் விரைவாக வந்து விடலாம். சிறந்த சாலை வசதியும் உண்டு. மாறாக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று, அங்கிருந்து காரைக்குடி வழியாக திருச்சி வந்து, கரூர் சென்று, சேலம் சென்று, விருத்தாச்சலம் வந்து, பிறகு விழுப்புரம் சென்று, திண்டிவனம் மற்றும் காஞ்சிபுரம் வழியாக சென்றால் எவ்வளவு தேவையில்லாத ஒன்றோ, அதுபோலத்தான் அம்சங்களை அலசி ஆராயாத உழைப்பும்.

ஒரு இலட்சியத்திற்காக உழைக்கையில், எந்த காரியத்தை முதலில் செய்தால், விரைவாகவும், எளிதாகவும் வேலை முடியும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, கடைசியில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்சத்திற்கு, ஆரம்பத்திலேயே அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

குழப்பிக் கொள்ளாதீர்…

உங்களின் லட்சியத்தை அடையும் முயற்சியில், வேலைகளை பிரித்து செய்யும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வேலையை, ஒரேநேரத்தில் கவனம் செலுத்தி விரைவாக முடிக்க வேண்டும். அதைவிடுத்து, பல வேலைகளை ஒரேநேரத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு, குழப்பிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக்கூடாது.

அனைத்தும் தயாராக இருத்தல்

ஒரு வேலையை துவங்கும்போது, அதற்கு தேவையான உதவி உபகரணங்கள் அனைத்தையும் முதலிலேயே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு வேலையானது தொடங்கப்பட்டு விட்டால், விரைவாக சென்று கொண்டே இருக்க வேண்டும். தேவையான உபகரணங்கள் அனைத்தும் இருந்தால்தான் தடையின்றி செல்ல முடியும். வேலையின்போது, தேவையானவற்றை அங்குமிங்கும் தேடினால், மனஉளைச்சல் ஏற்படுவதுடன், பல்வேறான தீங்குகள் ஏற்படும்.

சரியான சூழல்

முக்கியமான ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, அதற்கான புறச்சூழலை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். தொந்தரவற்ற, தேவையானால் அமைதியான, நிம்மதியான சூழலை அமைத்துக் கொண்டால், உங்களின் வேலை விரைவாக, வெற்றிகரமாக முடிவதை உறுதி செய்யலாம்.

உதவி கேட்கலாமா?

பொதுவாக, ஒருவர் தனது வேலையை பிறரின் உதவியின்றி, யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் தானே செய்து முடிக்க வேண்டும் என்று இயல்பாக நினைப்பார். அது ஒரு நல்ல கொள்கையும்கூட. ஆனால் சில சமயங்களில் பிறரின் உதவியை கேட்டே ஆக வேண்டிய நிலையேற்படும்.

அந்த நேரத்தில், பிடிவாதம், வரட்டு கவுரவம் பார்க்காமல் பிறரிடம் உதவி கேட்பதில் தவறில்லை. இதன்மூலம், உங்களின் லட்சியம் எளிதாக அடையப்படலாம்.

ஒதுக்கி விடவும்…

வாழ்க்கையில் தெளிவான இலக்கின்றி நாம் இருக்கையில், எது முக்கியம், எது முக்கியமற்றது என்பது நமக்குப் புரியாது. எனவே, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செயல்படுவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்தப் பின்பாக, தேவையற்றதை ஒதுக்குவதற்கு தயங்கக்கூடாது.

மதிப்பாய்வு செய்க…

ஒரு நீண்ட செயல்பாட்டில் நீங்கள் ஈடுபடுகையில், அதன் தொடர் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் அவசியம். எந்த செயல் அதிக பலனைத் தந்தது, எந்த செயல் நேரத்தை வீணடித்தது என்பதை மதிப்பிடுவது மிகவும் அவசியம் மற்றும் நல்லது. இதன்மூலம் தேவையற்றதை ஒதுக்கி, நமது பணியை விரைந்து முடிக்கலாம்.

முடிவே முக்கியம்

வெறுமனே ஒரு செயலை செய்கிறோம் என்றில்லாமல், எதை செய்கிறோம் என்ற தெளிவு வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு ஆகும் நேரத்தைவிட, அதனால் கிடைக்கும் நன்மைதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

Do

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்



அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

Monday, 3 August 2015

SK

வரலாறு உங்கள் கையில். (History is in ur hand)(Pls read the short story to know about the chronological order of Governor General and Viceroys from warren hastings to mountpatten - from 1773 to 1947)
வாரன் ஹேஸ்டிங்ஸ்(1773) முதல் மவுண்ட்பேட்டன் (1947) வரை
சுமார் 174 வருடங்கள் வரிசைகிரகமாக இந்தியாவை ஆட்சி செய்த
கவர்னர் ஜெனெரல் மற்றும் வைசிராய் பற்றி அறியவேண்டுமா!.கீழே
கொடுக்கப்பட்டுள்ள சிறுகதையை படியுங்கள்.

Chronological order:
Governor Generals of India (1773 - 1858)
1)warren hastings (WARREN)
2)Corn wallis (CORN)
3)John Shore(SHORE)
4)Wellessy(WELL)
5)Barlow(BAR)
6)Minto I(MINT)
7)lord hastings
8)Amherest (ARREST)
9)William Bentick
10)Metcafe (MET)
11)Auckland (LAND)
12)Ellenborough (BORROW)
13)Hardinge I (HARD)
14)Dalhousie (HOUSE)
15)Cannig (SUGARCANE)
Viceroys of India (From 1858-1947)
1)Canning
2)Elgin I
3)John Lawrence
4)Mayo (MAY)
5)Northbrook (NOTRHINDIA)
6)Lytton (லைட்)
7)Ripon (ரிப்பன்)
8)Dufferin (ரின் சோப்பு)
9)Lansdovene (டவ் shampoo)
10)Elgin II
11)Curzon (SON)
12)Minto II(MINT)
13)Hardinge II(HARD)
14)Chemsford(CHEMS)
15)Reading(READ)
16)Irwin(WIN)
17)Wellington(DON)
18)Linlithlow(LOW)
19)Wavell(WAVES)
20)Mountpatten(MOUNT)
Short story to remember all the Governor Generals and Viceroy's
.(சிறுகதை- EACH AND AVERY WORD SHOW A NAME OF GOVERNOR GENERAL AND VICEROY)
SHORTSTORY:
Warren (Warren hastings), Corn (Corn wallis) ரெண்டு பேரும் friends. ரெண்டு பேரும்நடந்து போகும்போது "ஷோர்"(John shore) னு மழை பெய்து .மழை பெயிறதுனால கிணறு(Well was fllled - Wellessy) நிரம்புகிறது.
climate was cool due to rain. so they went to BAR(Barlow) to take mint (Minto I). there Lord hastings came.He arrests(Amherest) the both.arrest பண்ணி பெண்ட கழட்டிடுறாரு(William Bentick).that time he met(metcafe) a land(Auckland).about
to borrow(Ellenborough) that land..
it was very hard(Hardinge I).anyhow he brought
the land and built a house(dalhousie) and sow Sugarcane(canning) The name of the sugarcane variety is Elgin I(Elgin I). The variety was failed one.
So John lawrence came to study about sugarcane. He said may(Mayo) month is suitable for sugarcane its also in north india (Northbrook).so he went to north india with லைட்,ரிப்பன், ரின் சோப்பு, டவ் shampoo(லைட் - Lytton, ரிப்பன்-Ripon,
ரின் சோப்பு-Dufferin,டவ் shampoo- Lansdovene) then he sow the variety named Elgin II.
Then his son(Curzon) came. he took mint (Minto II) it was very hard(Hardinge II), then he took chems(Chemsford), Chems was sweet, then he was good in reading(readig),,
after good reading he wins(Irwin), after winning he became a
Don(Wellindon) , then his growth became low(Linlithow), after some years waves (Wavell)moves towards him, finally he hoisted the flag at Mount(Mountpatten).


Important National level Institutes which have their headquartarz as Hyderabad.
Codeword : " BOSS - C.N.PRATHIP"
B - Business School (Indian School of Business}
O -Ocean and Information (Indian National Centre for Ocean Information)
S - Surveyor Training (Indian Inst. of Survey Training)
S - Staff College (Administrative Staff College)

C - Community Development, Chemical Technology
N - Nutrition Institute (National Institute of Nutrition)
P - Police, Petroleum(National Police Academy,Internl.Inst.of Petroleum
R - Remote Sensing (National Remote Sensing Centre)
A - Agricultural Extension Mgnt.(National inst of Agri.Extension)
T - Telecom Finance(National Academy of Telecom Finance and Mgnt.)
H - Handicapped(National Inst. of mentally handicapped),
HITEC city(Hyderabad Information Technology and
Engineering Consultancy City)
I - Information Technology(Indian Inst.of Information Technology)
P - Physical(National Geo Physical Res.Inst)

Wednesday, 22 July 2015

ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பன் - மரியாதை கொடுப்போம்.

3. பணம் - அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகள்- முறிக்க மாட்டோம்.

5. வியாபாரம் - அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கை - உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

ஜெயித்தது எப்படி?

 ‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன.

தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.


சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.

கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின. இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.


கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.

‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன். அப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.
தருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.


சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.
காலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான்! காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!


வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.


ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.


ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்!


என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!தூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!


மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.
என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில்! துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!


*******
இறை நம்பிக்கை
அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!


ஜெயித்தது எப்படி?
சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!


இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..
தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!
கெட்ட பழக்கங்களை விட்டது எப்படி?
கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!


ஒரே கனவு
அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?