Friday, 25 July 2014

சிறுபொழுது ஒரு நிலத்தின் முக்கியமான த்னமையாக இருக்கும்,குறிஞ்சி நிலத்து மக்கள் அதிக வேலை செய்யும் நேரம் அதாவது விலங்குகளை வேட்டையாடுதல்,காதலன் காதலி புணர்ச்சி நடைபெறுவது யாமம்,முல்லை நிலத்தில் தலைவியை பிரிந்து சென்ற தலைவன் தலைவியை சந்திப்பது மாலை,மருத நிலத்து மக்கள் விவசாய வேலைக்கு செல்வது வைகறை,நெய்தல் நிலத்து மக்கள் மீன்பிடிக்க செல்வது எற்பாடு,பாலை நிலத்து மக்கள் வழிப்பறி செய்வது நண்பகல்


World Is Not A "Parking Area" to take rest.
It is A Racing Track.
So Keep On Moving.
No Matter When & Where You Start.
But Reach Your Goal & Make A New Record.


நீ திரும்பி பார்த்தால் நான் அழுவேன் என்று திரும்பாமல் செல்லும் என் தாய்க்கு தெரியும்...

அதற்கான காரணம்

நாளை என்னை இந்த உலகமே திரும்பி பார்ப்பதற்காகவே என்று!

அம்மா இன்று என் காலை பிடித்து நீ இருக்கையில் வருத்தப்பட்டேன்
ஆனால் நாளை சாதித்து அனைவரும் உலகமே என்னை பாராட்டும் போது
என் அன்னை இவள் என்று உன் காலில் விழுந்து கண்ணீர் துடைப்பேன்...

http://news.vikatan.com/article.php?module=news&aid=27878

அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை,
முடிஞ்சவரைக்கும் எல்லாரையும் சந்தோசப்படுத்துவோம்...

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/2014/05/17044207/from-Tea-vendor-to-PM-seat-lif.html


பிறர் சொல்வதை உடனே கிரகிப்பது, அந்த விஷயத்தை புத்தியில் நிலை நிறுத்துவது, அதை என்றும் மறவாமல் இருப்பது, கிரகித்ததைப் பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றல், அதையும் யுக்தி எனப்படும் தனிச் சிறப்போடு கூறுவது, அடுத்தவர் யுக்திகளை மறுப்பது, ஒருவர் பேசுவதன் பின்னணியில் உள்ள உண்மையைக் காண்பது, அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்வது என்பன.

http://thannambikkai.org/2003/09/01/4338/

http://thannambikkai.org/2003/08/01/3999/

http://thannambikkai.org/2004/01/01/3967/
உதறிவிட்டு பார்

எப்போதெல்லாம் நீ சிரமப்படுகிறாயோ அப்போதெல்லாம் அதற்காக யாரையும் குற்றம் சொல்லாதே.

அதன்மூலம் எந்த வேதனையும் படாதே. அதற்கு பதிலாக அதை பார், உணர்ந்து பார், கவனி, அதை எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலும் பார்.

அதை ஒரு தியானமாக மாற்று,

என்ன நிகழ்கிறதென்று பார். நோய்க்குள் நகரும் அந்த சக்தி, சிரமத்தை உண்டாக்கும் அந்த சக்தி, மாறுதலடையும். குணம் மாறும்.

அதே சக்தி உனது விழிப்புணர்வாக மாறிவிடுகிறது.

ஏனெனில் உன்னுள் இரண்டு விதமான சக்திகள் இல்லை, இருப்பது ஒரே சக்திதான்.

எப்போதெல்லாம் சிரமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடனே உன்னை உதறி கொள்.

கண்களை மூடி அந்த சிரமத்தினுள் பார்.

அது என்னவாக இருந்தாலும் சரி – மனேரீதியாக, உடல் ரீதியாக, வெளிப்புறத்திலிருந்து – அது எதுவாக இருந்தாலும் அதனுள் பார்,

பறவை தன்மீதுள்ள நீரை உதறிவிடுவதைப் போல அதை உன்னிலிருந்து உதறி விடு.

அதை தியானமாக மாற்று. அதை ஒரு பொருளை பார்ப்பது

போல பார்.

உன் துன்பம் மாறும் . உன்னுள் அமைதி வரும் ..

உன்னுள் மகிழ்ச்சி வரும் .

-ஓஷோ-



ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!
பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ..!
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக .. பசுவின் மீது மண்னை போட்டனர்
பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்னை அதன் மீது போட போட யாது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது ..
.
"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் " என்று பலவிஷயத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்.


“தூங்காதே தம்பி தூங்காதே”
______________________________

ஏணிப்படியாய் காலம் இருக்க
ஏனிப்படி நீ ஏங்குகிறாய்?
வாசற்கதவை வாய்ப்புகள் தட்ட
தாளிட்டுக் கொண்டேன் தூங்குகிறாய்?

காலம் உன்னை நினைக்கவில்லை
காலன் அவனோ மறக்கவில்லை
போதும், போதும் புவியின் வாழ்வு
வாடா ராஜா! என்கின்றான்.

ஓடியோடி நீ ஒளிந்தாலும்-அவன்
தேடிக் கண்டுப் பிடித்திடுவான்
வாட்டி, வதைத்து, உன்னுயிரை
உடல் கூட்டில் இருந்து பிரித்திடுவான்.

கொல்லாதே.. என்னைக் கொல்லாதே-என்ற
பொல்லாத வீண் கதறல் செல்லாதே..
நில்லாத காலத்தின் முன்னாலே-நீ
சொல்லாதே அவ்வாறு என்பானே!

விருப்பப்பட்டு சுமக்கும் பாரம்
அபார சக்தியை ஈட்டித் தரும்
வருத்தப்பட்டு சுமப்பவர்க்கோ..
சமாதி கல்லாய் மாற்றி விடும்

விழித்திடு, சிலிர்த்தெழு..
சோம்பலுக்கின்றே விடைகொடு!
தாயகம் காக்கத் துணிந்திடு!-ஒரு
புதுயுகப் புதினம் படைத்திடு!


புத்தர் சிந்தனைகள் :-
* வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும்
துன்புறுத்தாதீர்கள்.
* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது
உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.
* அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன்
அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.
* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை
உன்னை சோதனைக்குள்ளாக்கும்.
* வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின்
இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
- புத்தர்


அண்மையில் முகநூலில் படித்ததில் பிடித்தது.....இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் ஐ.ஏ.எஸ். பற்றி தெரிவித்த கருத்து

ஐ.ஏ.எஸ். என்பது பட்டமல்ல!

ஐ.ஏ.எஸ். என்பது பட்டமும் அல்ல; படிப்பும் அல்ல, அது பணி. பணிபுரியும் போது மட்டுமே அது பொருந்தும். சில மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். என்பதைப் பெ...யருக்குப் பின்னால் அறவே போடுவது கிடையாது. சிலரோ அது அலங்காரமல்ல என்றே கருதுகிறார்கள்.

பணிபுரிவது என்றால் யோக்யதை யுடனும், தன்முனைப் பற்றும், நேர்மை யுடனும், வாய்மையுடனும் தன்னலங் கருதாமல் செயலாற்றுவது மட்டுமே. சுபாஷ் சந்திர போஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறியபோது, 'அந்தப் பணி வேண்டாம்' என மறுத்தவர். அன்று வெள்ளையர்களின் கைக்கூலிகளாக மட்டுமே குடிமைப் பணிபுரிபவர்கள் இருந்ததால், அப்படிப்பட்ட முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது.

என்னுடைய குடிமைப் பணி முடிவுகள் வந்தபோது, நான் ஐ.ஏ.எஸ். என்பது தேர்வில் வெற்றி பெறுவது அல்ல என்பதை முழுமையாக உணர முடிந்தது. அப்பணிக்கு சிறிதும் தகுதியற் றவன் என்று என்னை யாரும் கருதி, அதனால் என்னால் அப்பணிக்கான மதிப்பு நீர்த்துப் போகக்கூடாது என்பதே எனக்கு மிகப் பெரிய அச்சமாக இருந்தது.

இன்றும் என்றும் இரண்டுவிதமான மதிப்பீடுகள் இருக்கின்றன. துறையில் இருப்பவர்களும் தொடர்புடையவர் களும் வைத்திருக்கும் மதிப்பீடு. அது வெளியே இருப்பவர்களுக் குப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அழுத்தமான ஆழமான பங்களிப்புகளை அவற்றின் வீரியத்தையும் விளைவையும் அறிந்தவர்கள் மட்டுமே எடைபோட முடியும்.

இன்றும் குடிமைப் பணிகள் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மேலோட்டமாக அரசளவில் சில அறிவிப்புகள் எல்லாக் காலகட்டங் களிலும் வெளியானாலும் அவற்றை கொள்கைகளாக அறிவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டவற்றை நடைமுறை யாக்கிக் காட்டு வதற்கும் பல கூர்மை யான அரசு அதிகாரிகள் பின்னணியில் தீவிரமாகச் செயல்படுவதைப் பார்க்க லாம். நல்ல குடிமை அதிகாரி அரசின் சார்பாகவே இயங்கி பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் ஊக்கியைப் போல் இருக்கிறார். அது ஒருவிதமான அடிப் படைக் கோட்பாடும் கூட. அவர் திட்டங் களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போது அவர் மீது விழும் வெளிச்சத்தை மட்டுமே அனுமதிக்கிறார். நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்துவது மேலோட்ட அதிர்வுகளைவிடக் கடினமானது. கலைப்படம் எடுப்பது சண்டைப் படத்தை விட நுட்பமாக இருப்பதைப் போல.

நேர்மை என்பது அடிப்படையான கட்டுமானம். ஆனால் அது ஒன்று மட்டுமே முக்கியத் தகுதியாகாது. ஆனால் மற்ற எல்லா திறமைகள் இருந் தாலும் நேர்மையில்லாவிட்டால் அவற் றின் ஆற்றல் பயனற்றுப் போய் விடும்.

அரசு இன்று கை நிறைய சம் பளம் அளிக்கிறது. குடிமைப் பணி அலுவலர்கள் அதிக அளவில் திறமை யுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதன் பொருட்டு தனியாருக்கு இணை யான சில வசதிகளும் தரப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்த ஒரு கட்டத் தில், ஊதியத்தை உயர்த்திக் கொடுத் தது அரசு மட்டுமே. எனவே அரசு அலுவலர்களின் பொறுப்பு ணர்வு கூடிக்கொண்டே போக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இந்தியக் குடிமைப் பணி அலுவலர்கள் வெறும் ஊதியத்துக்காக மட்டும் இப்பணியில் சேருவதில்லை. அவற்றின் மூலம் மிகப் பெரிய மறுமலர்ச்சியை அவர்களுக்கான எல்லையில் செம்மையாகச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் மிகக் கடினமான தேர்வை எதிர்கொள்ள உந்துசக்தியாக இருக்கிறது. இப்போது இத்தேர்வில் நீதிநெறி, நேர்மை போன்றவற்றில் ஒரு தாள் பொது அறிவுப் பகுதியில் 250 மதிப்பெண்களுக்குச் சேர்க்கப் பட்டிருக்கிறது. தேர்வில் வெற்றி பெறு பவர்களுடைய மனநிலை களத்திலும் கட்டாயம் இருக்கும் என்பதற்கு எந்த எழுதப் படாத விதியும் இல்லை என்றாலும் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

சவால்களை சந்திக்கும் மனப்பான் மையும் மக்களுடன் மக்களாக இணைந்து பணியாற்றும் ஆர்வமும் உள்ளவர் கள் இப்பணிகளில் அமைதி யாக அவர்களுடைய பணிகளைச் செய்து வருகிறார்கள்.

ஐ.ஏ.எஸ். என்பது படிப்பல்ல; பதவியுமல்ல; அது ஒரு சேவை மட்டுமே!






    விடிந்து விட்டது இளைஞனே
விழித்தெழு நீயும் விரைவாக
முடிந்துவிட்டது வாழ்க்கையென்று
முனகிக் கொண்டே இருக்காதே!

தொழில்களா இல்லை செய்வதற்கு
தோள்களா இல்லை சுமப்பதற்கு
வழிகளா இல்லை வாழ்வதற்கு
வலிமையே… வளமை காணவா!

இலக்கியம் நீயும் இயற்றணும்
இவ்வுலகம் உன்னை வியக்கணும்
கலகம் இல்லாச் சமுதாயம்
காண நீயும் விழையணும்

ஒற்றுமைக் கரங்கள் கோர்த்து
ஓங்கிடும் வலிமை காட்டு
தொற்றும் வேற்றுமை வெட்டிவீழ்த்தி
வழமை உணர்வைக் கூட்டு

பற்றுதல் இல்லா வாழ்க்கை
பகையாய் நினைத்து ஓட்டு
கற்றது எல்லாம் கல்லார்க்கு
கலங்கரை விளக்காய்க் காட்டு

சோதனைகள் சாம்பலாக எரியும்
சுடராய் நிமிர்ந்து விடு
சாதனை உலகம் மாலையிட – புதுச்
சரித்திரம் படைத்துவிடு



தூங்காதே தம்பி தூங்காதே”
______________________________

ஏணிப்படியாய் காலம் இருக்க
ஏனிப்படி நீ ஏங்குகிறாய்?
வாசற்கதவை வாய்ப்புகள் தட்ட
தாளிட்டுக் கொண்டேன் தூங்குகிறாய்?

காலம் உன்னை நினைக்கவில்லை
காலன் அவனோ மறக்கவில்லை
போதும், போதும் புவியின் வாழ்வு
வாடா ராஜா! என்கின்றான்.

ஓடியோடி நீ ஒளிந்தாலும்-அவன்
தேடிக் கண்டுப் பிடித்திடுவான்
வாட்டி, வதைத்து, உன்னுயிரை
உடல் கூட்டில் இருந்து பிரித்திடுவான்.

கொல்லாதே.. என்னைக் கொல்லாதே-என்ற
பொல்லாத வீண் கதறல் செல்லாதே..
நில்லாத காலத்தின் முன்னாலே-நீ
சொல்லாதே அவ்வாறு என்பானே!

விருப்பப்பட்டு சுமக்கும் பாரம்
அபார சக்தியை ஈட்டித் தரும்
வருத்தப்பட்டு சுமப்பவர்க்கோ..
சமாதி கல்லாய் மாற்றி விடும்

விழித்திடு, சிலிர்த்தெழு..
சோம்பலுக்கின்றே விடைகொடு!
தாயகம் காக்கத் துணிந்திடு!-ஒரு
புதுயுகப் புதினம் படைத்திடு!



கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!'

‘‘விதை வீரியமானதாக இருந்தாலும்
மண் சொந்த மண்ணாக இருக்க வேண்டும்
அண்டார்டிகாவில் அவரை விதையும்
ஆண்டிப்பட்டியில் ஆப்பிளும் தவறான சாகுபடி!’




அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிசேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே


பால கங்காதர திலகர்

பால கங்காதர திலகர் பிறந்தநாள் ஜூலை 23- தேசிய விடுதலை இயக்கத்தின் பிதாமகர்

சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கியவர் பால கங்காதர திலகர். 1856-ம் ஆண்டு ஜூலை 23 ல் பிறந்தார். சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப்போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்.அவர் ஒரு அறிஞர். கணிதத்தில் புலமை மிக்கவர். தத்துவவாதி. தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.

மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் திலகர். சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் அம்மாவை இழந்த திலகர் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்டார். அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர். அதனால் தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார்.

ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மாவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

தேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது.

இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.

1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
 1921-இல் உருவாக்கப்பட்ட இம்பீரியல் வங்கியின் தற்போதைய பெயர் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

வங்கிகள் தேசிய மயமாக்கல்: 1969 ஜூலை 19-இல் 14 வங்கிகளும், 1980-இல் ஏழு வங்கிகளும் தேசிய மயமாக்கப்பட்டன.

வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் முதலீடு செய்துள்ள நிதிக்கு வழங்கப்படும் வட்டி - ரிவர்ஸ் ரெப்போ ரேட் (Reverse Reporate)

இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்ட நாள் - 1935 ஏப்ரல் 1.

இந்திய ரிசர்வ் வங்கி தேசியமாக்கப்பட்ட நாள் - 1949 ஜனவரி 1

ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் - ஸி.டி. தேஷ்முக்.

இந்தியாவில்முதன்முதலில்ஏடிஎம்வசதியைஅறிமுகப்படுத்திய வங்கி - எச்.எஸ்.பி.சி வங்கி (1987)

இந்திய ரூபாய்களின் அடைௌயாளக் குறியீட்டை உருவாக்கியவர் - உதயகுமார்.

பணத்திற்கான தனி அடையாளக் குறியீட்டைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவின் இடம் - ஐந்து

இந்தியாவின் முதல் வங்கி - 1770-இல் கல்கத்தாவில் துவங்கப்பட்ட தி பாங்க் ஆஃப் இந்துஸ்தான் வங்கி

 BRICS மாநாடுகள்:

1 வது மாநாடு -- ரஷ்யா -- 16 ஜூன் 2009 .

2 வது மாநாடு -- பிரேசில் -- 15 ஏப்ரல் 2010.

3 வது மாநாடு -- சீனா -- 14 ஏப்ரல் 2011.

4 வது மாநாடு --- இந்தியா -- 29 மார்ச் 2012 .

5 வது மாநாடு --- தென்அப்பிரிக்கா -- 26 -27 மார்ச் 2013.

6 வது மாநாடு -- பிரேசில் -- 15-17 ஜூலை 2014.

7 வது மாநாடு -- ரஷ்யா.

> அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.

> உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக் 1.

> இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1950

> தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
c ராஜகோபலாச்சாரி.

> சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.

> சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.

> பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.

> தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.

> 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.

> சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.

> தமிழகத்தின் தேசிய பறவை எது?
புறா.

> தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மனோன்மணியம்

> உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.

> மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.

> போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.

> அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.

பொது அறிவு

பொது அறிவு
* தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உயர்விட்ட தமிழர்?
சங்கரலிங்கனார்
* தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர்?
தந்தை பெரியார்
* இந்தியா சுதந்திரமடைந்த நாளை துக்க நாளாக அறிவித்தவர்?
தந்தை பெரியார்
* தமிழகத்தின் கைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம்?
ஈரோடு
* தமிழகத்தின் பகத்சிங் என்று குறிப்பிடப்பட்டவர்?
வாஞ்சிநாதன்
* கலியுக ராமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்?
மாறவர்மன் சுந்தரபாண்டியன்
* காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்?
மதுரை
* நடமாடும் பல்கலைக்கழகம் என்று புகழப்பெற்றவர்?
நாவலர் நெடுஞ்செழியன்
* கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் எழுதிய திரைக்கதை?
பூம்புகார்
* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு?
ஜனவரி 1, 2000
* மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திய தமிழக முதல்வர்?
மு.கருணாநிதி
* தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
* சுயமரியாதை திருமணப் பாதுகாப்புச் சட்டத்தினை வெளியிட்டவர்?
அறிஞர் அண்ணாதுரை
* தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1982
* தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது இருந்த முதல்வர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
* வைகை அணை அமைக்கப்பட்டபோது தமிழக முதல்வர்?
காமராஜர்
* திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்?
செப்டம்பர் 17, 1949
* திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர்?
அறிஞர் அண்ணா
* அறிஞர் அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்த ஆண்டு?
1935
* அண்ணா என்ற பத்திரிகையைத் துவங்கி நடத்திய கட்சி?
அதிமுக
* இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு?
1965
* மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களின் எண்ணிக்கை?
5
* அன்னை தெரசா பிறந்த நாடு?
யூகோஸ்லோவியா
* தமிழ்நாட்டில் 1934ல் கட்டப்பட்ட அணை?
மேட்டூர் அணை
* தமிழகத்தின் நில உச்ச வரம்பு எல்லை?
15 ஏக்கர்
* சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஆண்டு?
14.01.1969
* ராஜ்ய சபையில் தமிழகத்திற்கு உள்ள இடங்கள்?
18
* ஆகஸ்ட் 15 ஆம் நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடும் மற்றொரு நாடு?
தென்கொரியா
* தமிழகத்தின் கரும்பு ஆராய்ச்சி மையம் இடம்?
கோயம்புத்தூர்
* தமிழகத்தில் சிங்கவால் குரங்குகள் சரணாலயம் உள்ள இடம்?
முண்டந்துறை
* முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
மலேசியா
* தமிழ்நாட்டில் தீயணைப்புப் படை துவங்கப்பட்ட ஆண்டு?
1908
* மேட்டூர் அணையின் பழைய பெயர்?
ஸ்டாலின் நீர்த்தேக்கம்
* வியாசர் விருந்து என்ற நூலை இயற்றியவர்?
ராஜாஜி
* வெல்லிங்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு?
படகுப்போட்டி
* மிக வேகமாக வளரக்கூடிய மர வகை?
யூகலிப்டஸ்
* அடகாமாபாலைவனம் அமைந்துள்ள நாடு?
சிலி
* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்?
அபுல் கலாம் ஆசாத்
* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு?
இஸ்ரேல்
* போபால் விஷ வாயு சம்பவம் ஏற்பட்ட ஆண்டு?
1984
* சென்னை விமான நிலையம் கட்டப்பட்ட ஆண்டு?
1945
* 20 அம்சத் திட்டத்தை அறிவித்த இந்தியப் பிரதமர்?
இந்திரா காந்தி
* தமிழகத்தின் வளம் மிகுந்த மண்?
வண்டல் மண்
* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாடு?
நவம்பர் 1, 1956
* தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?
1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்
* தமிழகத்தில் மலர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்?
திண்டுக்கல்
* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1981
* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1984
* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1985
* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறை புகுத்தப்பட்ட ஆண்டு?
1984

GK

01. ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட்
02. கிலாஃபத் இயக்கம் - அலி சகோதரர்கள்
03. சிவப்புச் சட்டை இயக்கம் - அப்துல் கபார்கான்
04. சர்வோதய இயக்கம் - ஆச்சார்யா
05. கால்சா இயக்கம் - குருகோவிந்த சிங்
06. சிப்கோ இயக்கம் - சுந்தல்லால் பகுகுணா
07. பக்தி இயக்கம் - சைதன்யர், ஜெயதேவர்.
08. பகுத்தறிவு இயக்கம் - ஈ.வே.ரா. பெரியார்.
09. தமிழியக்கம் - பாரதிதாசன்
10. பூதான இயக்கம் - விநோபா பாவே
11. சுயார்ஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை - பால கங்காதர திலகர்
12. வந்தே மாதரம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
13. இன்குலாப் ஜிந்தாபாத் - முகமது இக்பால்
14. செய் அல்லது செத்து மடி - காந்திஜி
15. ஜெய் ஹிந்த் - சுபாஷ் சந்திரபோஸ்
16. நான் ஒரு இந்தியன் - விவேகானந்தர்
17. டில்லி சலோ - சுபாஷ் சந்திரபோஸ்
18. என்மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் பிரிட்டீஷ்
சவப்பெட்டி மீது அடிக்கப்படும் அடியாகும் - லால லஜபதிராய்
19. பிரித்துவிட்டு, வெளியேறு - முகமது அலி ஜின்னா
20. வேத காலத்திற்குத் திரும்பிப்போ - சுவாமி தயானந்த சரஸ்வதி.
21. கலிங்கப்போர் - கி.மு.26
22. ஹைதாஸ்பஸ் போர் - கி.மு.326
23. அராபியர் சிந்தி படையெடுப்பு கி.பி. 712
24. இரண்டாம் தரைன் போர் - கி.பி.1192
25. முதலாம் பானி்பட்டோர் - கி.பி. 1526
26. ராக்ஷ்சிதங்கடி போர் - கி.பி. 1565
27. பிளாசிப்போர் - கி.பி - 1757
28. வந்தவாசி போர் - கி.பி. 1760
29. மூன்றாம் பானிபட்போர் - கி.பி. 1761
30. 3ம் ஆங்கில - மராத்தியப்போர் - கி.பி.1818.



1. UNO - New York
2. UNICEF - New York
3. UNESCO - Paris
4. UNIDO - Vienna
5. WHO - Geneva
6. UNFPA - New York
7. ILO - Geneva
8. IMF - Washington DC
9. WTO - Geneva
10. International Court Of Justice – The Hague
11. International Atomic EnergyAgency - Vienna
12. World Bank - Washington D.C.
13. International Committee of theRed Cross - Geneva
14. International MaritimeOrganisation - London
15. Universal Postal Union - Berne
16. Food and Agricultural Organisation- Rome
17. World Meteorological Organisation- Geneva
18. SAARC - Kathmandu
19. Amnesty International - London
20. Transparency International - Berlin
21. World Intellectual Property Organization - Geneva
22. International Renewable Energy Agency - Abu Dhabi (UAE)
23. Commonwealth of Nations -London




கணக்கியலின் தந்தை – லூக்கா பெசி யொவு

கணனியின் தந்தை – சாள்ஸ் பபேஜ்
-
சமூகவியலின் தந்தை – மக்ஸ் வெபர்
-
கணிதத்தின் தந்தை – ஆக்கி மிடிஸ்
-
குடித் தொகைக் கல்வியின்
தந்தை – ஜோன் கிரான்ட்
-
அரசியலின் தந்தை – அரிஸ்டோடில்
-
கம்யூனிச இயக்கத்தின் தந்தை – கார்ள் மாக்ஸ்
-
நவீன ஓவியத்தின் தந்தை – பிக்காசோ
-
கேத்திர கணிதத்தின் தந்தை – யூக் கிளிட்
-
மருத்துவத்தின் தந்தை – ஹிப்போகிரட்டிஸ்
-
பிறப்புரிமையின்/
மரபியலின் தந்தை – கிரிகர் மெண்டல்
-
நவீன பொருளாதாரத்தின் தந்தை – அடம் ஸ்மீத்
-
கூட்டுறவு இயக்கத்தின் தந்தை – றொபட் ஒவர்
-
சார்புக் கொள்கையின் தந்தை – ஜன்ஸ்மீன்
-
மின்சாரத்தின் தந்தை – மைக்கல் பரடே
-
இரசாயனத்தின் தந்தை – பரைட்சிக் ஒவர்
-
நவீன பத்திரிகையின் தந்தை- பனியல் டெஃபோ
-
வரலாற்றின் தந்தை – ஹெரடோடஸ்
-
பெளதீகத்தின் தந்தை – ஐசாக் நியூட்டன்
-


 

இலட்சுமி சோகல்

இலட்சுமி சோகல்
பங்களாதேஷ் போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப் பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமின்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றிய வரும், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களைவைப் பிரதிநிதியாகவும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியான கேப்டன் இலட்சுமி சோகல் அவர்களின் வீரச் செயல்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று இருந்த காலகட்டத்திலேயே பெண்களின் கையில் ஆயுதம் கொடுத்து இராணுவப் பயிற்சியளித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் தலைமையில் இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தின், பெண்கள் பிரிவான, ஜான்சி ராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பேற்றவர்தான் கேப்டன் லட்சுமி சேகல்.
பிறப்பு: 1914 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 ஆம் தேதி சுவாமிநாதன் - அம்மு தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.
இவரின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் அமெரிக்காவில் வானியல் துறையில் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் எழக்கறிஞர் என்ர பெருமதிப்பும் பெற்றவர். இவரின் தாய் அம்மு சுவாமிநாதன் கேரள மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர்.
கல்வி: இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் போன்றவற்றில் இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம் பெற்றுள்ளன. லட்சுமி ஒன்பதாம் வகுப்பு பயிலும்போதே மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். ஆங்கில அறிவின் மேன்மை காரணமாக ஆங்கில மிசினரி பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றும் அங்கு மருத்துவக் கல்விக்குத் தேவையான பாடங்கள் செம்மையாகப் போதிக்கப்படவில்லை என்று லேடி லிவிங்க்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.
மருத்துவக் கல்வியும் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்: 1930 ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியை இராணி மேரி கல்லூரியில் தொடர்ந்தார். 1938 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.
இராணி மேரிக் கல்லூரியில் பயிலும் போது கதர் மட்டுமே அணியும் தீவிர காங்கிரஸ் இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்ந்தார்.
இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய பி.இராமமூர்த்தி தலைவராக இருந்தார். ஒருமுறை லட்சுமி, பகத்சிங் வழக்குக்கு கல்லூரியில் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1930 ஆண்டில் அறப் போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒருநாள் முழுவதும் சிறையில் இருந்தார்.
அக்காலத்தில் கவிக்குயில் என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடுவின் உடன் பிறந்தவராக சுகாசினி நம்பியார், மீரட் சதிவழக்கில் தொடர்பு கொண்டவராகக் குற்றம் சாட்டப்பட்டு லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார்.
பொதுவுடைமை வாதியான அவரிடமிருந்து லட்சுமி மார்க்சிய தத்துவம் பற்றியும் உருசியப் புரட்சிப் பற்றியும் பலநூல்களை வாங்கி படித்தார். சமுதாய மாற்றம் புரட்சியினால்தான் சாத்தியமாகும் என்ற கருத்து ஆழமாக அவர் மனதில் இடம் பெற்றது. அத்தகைய ஓர் ஆயுதப் புரட்சியே அரசியல் விடுதலைக்கு உகந்ததாகும் என நம்பலானார். எனவே தனது தாயைப் பின்பற்றிக் காந்தியின் அகிம்சைக் கொள்கையில் ஈடுபட்டிருந்த லட்சுமி மேலும் அதில் ஈடுபடாமல் தனது மருத்துவக் கல்வியை முடித்தார்.
1939-40களில் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது தீவிரக் கதர் இயக்கங்களில் ஈடுபட்டோர்களும் அகிம்சை வழியில் ஈடுபட்டோர்களின் வாரிசுகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரித்தானியாவின் போர் சேவைக்காக இராணுவத்தில் பணிசெய்ய லட்சுமியின் மனது இசையவில்லை.
சிங்கப்பூர் பயணம்: லட்சுமியின் தாயாரும் தங்கையும் அமெரிக்காவில் இருந்தனர். தனது தங்கையும் 1930ல் இழக்க நேரிட்டது. சென்னையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வாழ்க்கையை கழித்துவந்த லட்சுமி தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவர் என்ற நிலையில் உதவிசெய்ய, 1940ல் சிங்கப்பூர் சென்றார். எளிய தென்னிந்திய தொழிலாளப் பெண்கள் மருத்துவர் இல்லை என்று கண்டார். அங்கேயே தங்கி தன் மருத்துவச் சேவையில் ஈடுபடலானார். சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனை தொடங்கி வெகு விரைவிலேயே நல்ல மருத்துவர் என்ற புகழை பெற்றார்.
இந்திய சுதந்திரக் கழகம்: 1941ல் ஜப்பானியர் சிங்கப்பூரைத் தாக்கினர். பிரித்தானியப்படை பின்வாங்கியது. பிரித்தானிய இந்தியப் படையின் மிகப்பெரிய தளமான பஞ்சாப் தளம் ஜப்பான் படையிடம் சரணடைந்தது. சரணடைந்த இப்படையிலிருந்த படைவீரர்கள், தளபதிகள், கைப்பற்றிய போர்த்தளவாடங்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவானதே இந்திய தேசிய இராணுவம் ஆகும்.
இதில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் ராஷ்பிகாரி போஸ் பொதுமக்களுக்கென்று இந்திய சுதந்திர லீக் என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்து செயல்படுத்தி வந்தார். இதன் சிங்கப்பூர் கிளையில் தீவிர உறுப்பினராக இருந்த மாத்ருபூமி என்ற கேரள இதழைத் தோற்றுவித்த கே.பி.கே.மேனன் என்பவரின் நட்பு லட்சுமிக்குக் கிடைத்தது. இந்நட்பின் மூலம் இந்தியச் சுதந்திர லீக்கின் முக்கிய உறுப்பினராக இணைந்தார்.
1942ல் பிரித்தானிய ஜப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்து உதவிகள் செய்தார். தொலைவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அகதிகளையும் நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். இந்திய சுதந்திர லீக்கின் பிரச்சாரப் பிரிவின் சார்பில் இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். இந்தியாவுக்கு வானொலி மூலம் செய்திகளை ஒலிபரப்பும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அத்துடன் மகளிர் பிரிவையும் பராமரித்தார்.
நேதாஜியுடன் சந்திப்பு: இந்திய சுதந்திர லீக்கின் அழைப்பின்பேரில், 1943ல் சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர் சென்றார், அப்போது இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் கிளைக்கு எல்லப்பா என்பவர் தலைவராக இருந்தார். அவரிடம் லட்சுமி இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தான் ஒரு முக்கிய பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரம் நேதாஜியும், ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேறக வேண்டும் என அழைப்பு விடுத்தார். இப்படைக்கு தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்ததும் அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார்.
1943ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சிராணி படையைத் தொடங்கினார். ிப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது. பெண்கள் படையை உருவாக்குவதை ஜப்பானியர் விரும்பவில்லை. விலையுயர்ந்த தளவாடங்கள், பெண்கள் இராணுவம் எனச் செலவழிப்பது வீண் எனக் கருதினர். ஆயினும் கிழக்காசியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைத் தந்தனர். பெண்கள் ஜான்சிராணி படையில் சேர படைத்தளபதியாக மட்டுமின்றி, பெண்கள் நலனுக்கான ஓர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
சிங்கப்பூரிலேயே 500 பெண்களைத் தேர்வு செய்து முதலில் ஜான்சிராணி படை துவங்கப்பட்டது. ஆனால் மலேயா-கோலாலம்பூர் போன்ற இடங்களில் இருந்தும் மகளிர் இதில் பங்குகொள்ள வந்தனர். இவர்களுள் ஆர்.லட்சுமிதேவி, தேவயானி, ஜானகி,எம்.எஸ்.தேவர் பாப்பாத்தி போன்ற சிலரும் அடங்குவர். பயிற்சி முடிந்ததும் ஜான்சிராணி படை சிங்கப்பூரிலிருந்து பர்மாவை நோக்கிப் பயணமாயிற்று. அங்கிருந்து படை தில்லியை நோக்கிய போர்முனைக்குச் செல்லும் லட்சுமி இந்தக் கடும்போரில் பங்கேற்றார். ஆனால் ஜான்சி ராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினர் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கியது. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால் அதன் நச்சுத் தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டன. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் லட்சுமி மறுத்துவிட்டார்.
இராணுவத்தில் மருத்துராக பணி: 1945 ஜூலை முதல் தேதி படையினருடைய வேதனைகளையும் நோயையும் ஆற்ற சிகிச்சை தேவை என உணர்ந்த லட்சும் அங்கு ஷா எஸ்டேட் என்ற இடத்தில் இந்திய தேதிய இராணுவத்தினரும் சேர்ந்து உருவாக்கப்பட்டிருந்த ஓர் மருத்துவ மனையில் அவர்களுக்கு சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேதாஜி லட்சுமியைத் திரும்பி வந்துவிடும்படி அழைத்தார். ஆனால் லட்சுமி பிடிவாதமாக மறுத்து விட்டார். மருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் கூட அன்றிரவே மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காகி மருத்துவமனை தரைமட்டமாயிற்று. விமானத்தைப் பார்த்ததும் பதுங்கு குழியில் மறைந்ததால் லட்சுமி உயிர்த் தப்பித்தார்.
தளபதி எல்லாப்பா மிகக் கடுமையாகக் பாதிக்கப்பட்டார். பிரித்தானிய இராணுவத்தினரால் லட்சுமியை எந்தப் பிரிவில் குற்றம் சாட்டுவது என முடிவு செய்ய முடிய வில்லை. ஏனெனில் இந்திய இராணுவத்தில் இருந்து வந்த அதிகாரியாகவோ, பர்மியராகவோ இல்லை. இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமாக அமைச்சராக இருந்தவர். எனவே சிறிது காலம் ரங்கூனில் ஆங்கிலோ-பர்மியர் வசிக்கும். பகுதியில் அவரை விட்டு வைத்தனர். அங்கு தனது நண்பரான கியான்புரி என்ற பெண் மருத்துவருடன் சிகிச்சையகம் சென்று காலம் கழித்தார். எனினும் இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
1945ல் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் கூடினர். அதில் இந்தியாவில் இருந்து வந்த மூன்று இதழியலாளர்களும் இருந்தனர். இக்கூட்டத்தில், "இன்னும் போர் முடிவடைய வில்லை இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவோம்" என்று இந்தியில் முழங்கினார். இந்த செய்தி பிரித்தானிய இராணுவத் தலைமைக்கு எட்டியது. உடனே லட்சுமியை கைது செய்து "கலாப்" என்ற இடத்தில் வைத்தனர். விசாரணை எதுவும் நடத்தப்படாமல் இவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். கல்கத்தா வந்து சேர்ந்த லட்சுமி அங்குள்ள காவல் நிலையத்தில் தனது வருகையைப் பதிவிடச் சென்றார். அங்கிருந்து அவர்கள் நேதாஜியின் சகோதரி மகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
1947 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு ஆங்கிலேயப் படையில் இருந்து பின்னர் இந்திய தேசிய இராணுவத்தில் அருந்தொண்டாற்றிய தன்னுடைய சகபோராளி தளபதி பிரேம் சாகல் என்பவரை லட்சுமி மணந்து கொண்டார். பிறகு கான்பூரில் குடியேறினார். இவருடைய மகள் சுபாஷினி அலி சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்.
மாநிலங்களவை பிரதிநிதியாக: சுதந்திர இந்தியாவில் தான் சந்தித்த ஆட்சியாளர்களுள், தனக்கு திருப்தியளிக்குமாறு நாட்டுப் பற்றுடன் ஆட்சி செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்ற முடிவிற்கு வந்த கேப்டன் லட்சுமி, ஜோதிபாசுவுடன் பங்களாதேஷ் போரின் போது இணைந்து அகதிகளுக்கு சேவையாற்றியதை பெருமிதமாக உணர்ந்தார் லட்சுமி தோழர் லட்சுமியாக.
1971ல் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களைவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். 1972ல் பங்களாதேஷ் போர் நடைபெற்றபோது வங்காள கவர்னராக இருந்த பத்மஜா நாயுடு என்பவருடன் கடிதம் மூலம் அனுமதி பெற்று வலிய உதவி செய்யச் சென்றார். போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப் பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமின்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றினார்.
நம்முடைய நிலைக்குப் பொருத்தமான ஒரு சோசலிசம் மட்டுமே நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நம்பிக்கை என்கிறார் கேப்டன் லட்சுமி சேகல். கல்லூரி நாட்களில் தொடங்கி இன்று வரை, அரசியல் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ, போராட்டம் மூலமாகவோ சமூகப்பணியாற்றி மனித குலத்திற்கான சேவைக்காக தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் செலவழித்துள்ளார் கேப்டன் லட்சுமி என்பது விளங்கும்.
2002 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்தியப் பொதுவுடைமை மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்விடைந்தார்.
இந்திய அரசு பத்மபூஷண் விருது கொடுத்து இவரைக் கௌரவித்துள்ளது.

FIFA BASED QUESTIONS

FIFA BASED QUESTIONS

1) 2014 FIFA World Cup was the ..... FIFA World Cup?
Ans. 20th
2) Which country hosted the FIFA World Cup 2014?
Ans. Brazil
3) The FIFA 2014 was held from __ to __?
Ans. 12th June to 13th July
4) Brazil had earlier hosted FIFA WC in which year?
Ans. 1950
5) How many countries participated in the FIFA WC 2014?
Ans. 32
6) Name the two new technologies used for the first time at a World Cup in 2014?
Ans. Goal-line technology and vanishing foam for free kicks.
7) When was the first FIFA World cup held?
Ans. 1930
8) Name the countries which have so far lifted FIFA WC since it's starting in 1930?
Ans. Argentina, Brazil, England, France, Germany, Italy, Spain and Uruguay
9) Which was the first team to be eliminated from FIFA WC 2014?
Ans. Spain (the champions of 2010 WC)
10) Germany lifted the FIFA WC 2014 defeating which team in the finals?
Ans. Argentina (By 1-0 margin)
11) Which team became the first European team to win a World Cup in the Americas?
Ans. Germany
12) Germany's win marked the first time that sides from the same continent had won three successive World Cups. Who were the earlier winners in 2010 and 2006?
Ans. 2010- Spain & 2006- Italy
13) Germany qualified for which tournament winning the world Cup?
Ans. 2017 FIFA Confederations Cup
14) First match of FIFA 2014 was between?
Ans. Brazil and Croatia
15) Who scored the first goal of FIFA WC 2014?
Ans. Marcelo of Brazil (It was a self-goal which earned Croatia the lead in the 11th minute.) But at the end Brazil won the match 3-1 with Neymar scoring 2 goals and Oscar one.
16) Who was the referee in the opening match?
Ans. Yuichi Nishimura from Japan
17) Who was the referee in the final match?
Ans. Nicola Rizzoli from Italy
18) Total how many venues where there for FIFA WC 2014?
Ans. 12
19) Which stadium hosted the final match between Germany and Argentina?
Ans. Maracana Stadium, Rio de Janeiro
20) Which was the official match ball of the 2014 FIFA World Cup?
Ans. Adidas Brazuca
21) Brazuca was manufactured in which country?
Ans. Sialkot, Pakistan
22) Which country reached their first quarterfinals since 1986 in FIFA WC 2014?
Ans. Belgium
23) Name the two first-time quarterfinalists in FIFA WC 2014?
Ans. Colombia and Costa Rica
24) Which country set a World Cup record with four consecutive semi-final appearances in FIFA WC 2014?
Ans. Germany
25) Who beacme the first player to appear in four World Cup semi-finals in FIFA WC 2014?
Ans. Miroslav Klose
26) Miroslav Klose broke whose record with 16 goals to become the highest scorer in the history of FIFA 2014?
Ans. Ronaldo
27) Which team secured third place in FIFA WC 2014?
Ans. Netherlands. The defeated Brazil 3–0 in third place play-off.
28) Germany and Argentina faced each other in how many WC finals?
Ans. Three (1986, 1990 and 2014)
29) Who was awarded the Golden Boot for scoring six goals in FIFA WC 2014?
Ans. James Rodríguez of Colombia. He was followed by Thomas Müller- 05, Lionel Messi, Neymar and Robin van Persie with 04 goals.
30) How many goals were scored in FIFA WC 2014 in total?
Ans. 171 goals by 121 different players.
31) How many self-goals were there in FIFA WC 2014?
Ans. 05
32) Which player was suspended during FIFA WC 2014 for nine international matches and banned from taking part in any footballing-related activity (including entering any stadium) for four months, following a biting incident on Italian defender Giorgio Chiellini?
Ans. Luis Suárez of Uruguay
33) Who scored the two hat-tricks of FIFA WC 2014?
Ans. Thomas Muller of Germany and Xherdan Shaqiri of Switzerland
34) Who won the Golden Ball in FIFA 2014 as best player of the tournament?
Ans. Lionel Messi of Argentina
35) Who was awarded the Golden Glove for best goal keeper?
Ans. Manuel Neuer of Germany
36) Who was given the Best Young Player award in FIFA WC 2014?
Ans. Paul Pogba of France
37) Which team won FIFA Fair Play Trophy?
Ans. Colombia
38) Which country will host the next FIFA WC in 2018?
Ans. Russia

இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது

இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
நடப்பாண்டு முதல், இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த அவர்: "தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கௌரவிப்பதிலும், சிறப்பிப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் வளர்த்த சான்றோர்களான கம்பர், கபிலர், உ.வே. சுவாமிநாத அய்யர், உமறுப் புலவர், ஜி.யு. போப் ஆகியோர் பெயரில் புதிய விருதுகள் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர, சொல்லின் செல்வர் விருது, கணினித் தமிழ் விருது மற்றும் தமிழ்த் தாய் விருது ஆகிய விருதுகளும் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் மொழியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்தது தமிழக அரசு.
"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"" என்று கம்பரையும், வள்ளுவரையும், இளங்கோவடிகளையும் போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார்.
இவர்களில், உலகப் பொது மறையாம் திருக்குறளை படைத்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயரில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கம்பர் பெயரில் கடந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டு முதல், நெஞ்சை அள்ளும் "சிலப்பதிகாரம்" என்று போற்றப்படும் காலத்தை வென்ற காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இளங்கோவடிகள் விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.
இதே போன்று, தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறுபவருக்கு 25,000 ரூபாய் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும். இவ்விருது, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும்.
மேலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தமிழறிஞர்களின் கோரிக்கையினை ஏற்று முன்னாள் முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பெருகி வரும் மாணவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டும், கட்டட வசதிகளின் தேவையைக் கருத்திற் கொண்டும், 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பழந்தமிழரின் சிறப்புக்களையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக் காட்டும் வகையில், சுடுமண் சிற்பம், சுதைச் சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழியை மேலும் வளர்க்கவும், தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கவும், பழந்தமிழரின் வாழ்வியல் நெறிகள் குறித்து இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி எதிர்கால தலைமுறையினரும், உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்". இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Monday, 7 July 2014

விதைத்த செயல்களை திரும்பிப் பாருங்கள்!

விதைத்த செயல்களை
திரும்பிப் பாருங்கள்!
சிதறிய செயல்களை
சீரமைக்க முயலுங்கள்!
இடையிடையே
முட்கள் முளைத்திருந்தால்
முதலில் அதை நீக்குங்கள்!
உங்களுடைய செயல்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் மிக்கவை. செயல்கள் தனித்தன்மை உடையதாயின் வெற்றியின் விளைச்சல் விரைவில் கிடைக்கின்றது. அதனால், உங்களுக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படும் மன நிறைவும் மகிழ்ச்சியும் தொடர்ந்து செயல்படுவதற்கு உரமாகவும் ஊக்கமாகவும் அமைந்து மென்மேலும் உங்களை உற்சாகப்படுத்துகின்றது.
மேலும், செய்கின்ற செயல்களில் ஏற்படுகின்ற சிறுசிறு குறைகளும் உள்களது வெற்றிக்கு தடை கல்லாக அமையக்கூடும். ஆகவே, அத்தகைய தடைகளை படிகளாக மாற்றுவதற்கு உங்களுடைய செயல்களை நீங்களே திரும்பிப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.
அதாவது உங்களுடைய செயல்களை மற்றவர்கள் ஆய்வு செய்து குறை கூறுவதை நீங்கள் தவிர்க்க விரும்பினால், உங்களால் செய்து முடிக்கப்பட்ட செயல்களை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள். இதைத்தான் சுய ஆய்வு என்கிறார்கள்.
ஆய்வின் அவசியம்
எந்த செயலையும் விருப்பு வெறுப்பற்ற சம மனநிலையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். ஒருவரின் உடலை மருத்துவர் ஆய்வு செய்து அவருக்குள்ள நிறைகளையும் குறைகளையும் சொல்கின்றார். மேலும் நோயாளிக்கு உள்ள குறைகளைப் போக்கிக் கொள்ள தேவையான மருந்துகளையும் உடற்பயிற்சி முறைகளையும் மருத்துவர் சிபாரிசு செய்கின்றார்.
அதுபோலவே, மண்ணியியல் நிபுணரும் வயலில் உள்ள மண்ணை எடுத்து விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து, அதிலே உள்ள சத்துக்களைப்பற்றியும், அந்த மண்ணில் என்னென்ன பயிர்களை வளர்க்கலாம், மேலும் நாம் வளர்க்கும் பயிருக்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றதா? அவ்வாறு தேவையான சத்துக்கள் இல்லை எனில் அவற்றை எவ்வாறு உரமாக கொடுப்பது என்றும் சிபாரிசு செய்கின்றார்.
ஆகவே, ஒன்றை ஆய்வு செய்வதன் நோக்கம் அதிலுள்ள குறை நிறைகளை அறிந்து அதற்கேற்ப நமது செயல்களை மாற்றி, ஏற்புடையவாறு அமைத்துக் கொள்வதாகும். ஆய்வு செய்து குறைகளைக் கண்டுபிடித்து விமர்சனம் செய்வதற்கு அல்ல. அந்தக் குறைகளை நிறைகளாக மாற்றுவதற்கே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நிறைகளை முதலீடு செய்யுங்கள்
உங்களுக்கு உள்ள நிறைகளையும் (Strength) திறமைகளையும் (Skills) செயல்களில் முதலீடு செய்யுங்கள். அப்பொழுதுதான். அவை வெற்றியாக உருவெடுக்கும். அவ்வாறு இல்லாமல் எனக்கு அந்தத் திறமை இருக்கின்றது. இந்தத் திறமை இருக்கின்றது எனக்கூறி கொண்டு இருப்பதால் எந்தப்பயனும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு விவசாயிடம் விதை நெல் இருக்கின்றது, அதை விதைத்து பயிர் செய்வதற்கு ஏற்ற நிலமும் சூழலும் இருக்கின்றது. ஆனால் அவர் அந்த விதை நெல்லை, விதைத்து பயிர் செய்யாமல், எதிர்காலத்தில் மழை வராவிட்டால் என்ன செய்வது? கிணற்றில் உள்ள நீர் வற்றிவிட்டால் என்ன செய்வது? பூச்சிகள் பயிரைத் தாக்கினால் என்ன செய்வது? எதிர்காலத்தில் அறுவடை செய்த மகசூலுக்கு நல்ல விலை கிடைக்கா விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் யோசித்துக் கொண்டு வெறுமனே இருந்தால் வெற்றி கிடைக்குமா? அல்லது காலம்தான் காத்திருக்குமா? கொஞ்சம் எண்ணிப் பார்ங்கள்.
படுத்துக் கிடப்பவனுக்கு
பகல்கூட இரவுதான்!
எழுந்து நடப்பவனுக்கு
திரும்பும் திசையெல்லாம் கிழக்கு தான்!
நம்புங்கள்! உங்களால் சாதிக்க முடியும். அத்தோடு உங்களுக்கு உள்ள திறமைகளை தொடர்ந்து பயன்படுத்தினால்தான் அவை மென்மேலும் வளரும்.
அனுபவ முத்திரைகள்
வெற்றியடையும் வரை உங்களுடைய பணிகளை தொடர்ந்து இடைவிடாமல் செய்து கொண்டே இருங்கள். ஒவ்வொரு முயற்சியின் போதும் நீங்கள் கற்றுக் கொள்ளும் புதிய பாடங்களின் அடிப்படையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க்கைப் பாதையெங்கும் மலர்களின் வரவேற்பை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் முட்களில் முகங்களும் உங்கள் மீது மோதக்கூடும். அதுபோன்ற சூழ்நிலைகளில் தன்னிலை இழக்காமல் நிதானமாகச் சிந்தித்துத் தெளிவுடன் செயல்படுங்கள். அப்பொழுதுதான் தொடர்ந்து உங்களால் வெற்றியடைய முடியும்.
மனதில் உறுதி
எதையும் மன உறுதியோடு எதிர் கொள்ளுங்கள். எதை இழந்தாலும் மன உறுதியை மட்டும் இழந்துவிடாதீர்கள். மனவலிமையே வெற்றிக்கு அடிப்படை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தோல்வி நேர்ந்து விட்டாலோ, இழப்பு ஏற்பட்டு விட்டாலோ, கவலையில் மூழ்கி விடாதீர்கள். சிலர் இதுபோன்ற சூழ்நிலைகளில் தங்களுடைய கற்பனைக்கு எட்டிய வரையில், ” இப்படி நேர்ந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்” ” அப்படி நேர்த்திருந்தால் என்ன செய்வது” என எல்லை இல்லாமல் கவலைப் படத் தொடங்கி விடுவார்கள்.
உதாரணமாக ஒரு விபத்து ஏற்பட்டு. அதில் இடது காலில் லேசாக எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது என்றால், விபத்தில் இருகால்களும் துண்டாகி இருந்தால் என்னவாகியிருக்கும். தலை பிளந்திருந்தால் என்னவாகியிருக்கும். தலை பிளந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று விபரீதமாக சிந்திக்கவும், அதைப் பற்றி பெரும் கவலை அடையவும் தொடங்கி விடுவார்கள். இது போன்று சிந்திப்பதால் மனம் மேலும் பலவீனம் அடையுமே தவிர உறுதி அடையாதது.
புதிய பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் ஒவ்வொரு செயலையும், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் திரும்பிப் பார்க்கும் போது, புதிய பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறி விடாதீர்கள். புதிய பாடங்களே வாழ்விற்கு வளர்ச்சியைக் கொடுக்கும் மூல மந்திரங்கள்.
கற்ற பாடங்களை வாழ்க்கையில் முழுமையாகப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறை புதிய கருத்துக்களை பயன்படுத்தும் போது ஏற்படும் விளைவுகளைக் கண்காணித்து. அதற்குத் தகுந்தாற்போல செயலாக்கத்தை மாற்றி அமைத்துக்கொண்டு முன்னேறுங்கள். ஏனென்றால் முன்னேற்றமே வாழ்வின் மூச்சுறுக்காற்று.

ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை...இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?